இந்த விஷயங்கள் தெரியாம கார்ல ஏசி போடாதீங்க! இவ்ளோ வருஷமா கார் ஓட்றோம்! ஆனா இதெல்லாம் தெரியாம போச்சே!

கோடை காலம் (Summer) வந்து விட்டால், வீட்டிற்குள் நிம்மதியாக தூங்க கூட முடியாது. அந்த அளவிற்கு வெப்பம் தகிக்கும். அதிலும் கார்களில் பயணம் செய்வது என்றால் சொல்லவே வேண்டாம். ஒரு சில நிமிடங்கள் வெயிலில் நின்ற காரில் ஏறினால் கூட, அக்னி குண்டத்திற்குள் இறங்கியது போன்ற உணர்வு ஏற்படும்.

அந்த சமயத்தில் கார் ஏசி (Car AC) நமக்கு கடவுளாக தெரியும். கோடை காலத்தில் வீடுகளில் மட்டுமல்லாது, கார்களிலும் ஏசி பயன்பாடு மிகவும் அதிகமாக இருக்கும். சுட்டெரிக்கும் வெப்பத்தில் இருந்து நம்மை பாதுகாக்கும் கார் ஏசி-யை அடுத்த முறை 'ஆன்' செய்வதற்கு முன்னால், நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

இந்த விஷயங்கள் தெரியாம கார்ல ஏசி போடாதீங்க! இவ்ளோ வருஷமா கார் ஓட்றோம்! ஆனா இதெல்லாம் தெரியாம போச்சே!

மனிதர்களை போலவே, கார் ஏசி-களுக்கும் குறிப்பிட்ட இடைவெளிகளில் 'ஹெல்த் செக்-அப்' அவசியம். 25 ஆயிரம்-30 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு ஒரு முறை ஏசி-யை கண்டிப்பாக சர்வீஸ் செய்து விடுங்கள். குறிப்பாக ஏசி-யின் ஏர் ஃபில்டர் மீது கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.

அழுக்கு படிந்த ஏசி ஏர் ஃபில்டர், காரின் கேபினுக்கு உள்ளே மோசமான காற்றைதான் வழங்கும். எனவே நீங்கள் மோசமான காற்றை சுவாசிக்க நேரிடும் என்பதுடன், இது காரின் மைலேஜையும் (Mileage) குறைத்து விடும். இந்த பிரச்னைகள் உங்களுக்கு ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால், ஏசி ஏர் ஃபில்டரை அவ்வப்போது சுத்தம் செய்து விடுங்கள்.

இந்த விஷயங்கள் தெரியாம கார்ல ஏசி போடாதீங்க! இவ்ளோ வருஷமா கார் ஓட்றோம்! ஆனா இதெல்லாம் தெரியாம போச்சே!

அவசியம் ஏற்பட்டால், அதனை மாற்றி விடுவதும் நல்லது. ஏசி ஏர் ஃபில்டரை நீங்களே கூட மாற்றி விடலாம். உங்களுக்கு அவ்வளவாக அனுபவம் இல்லை என்றால், நம்பிக்கையான மெக்கானிக்கிடம் காரை விட்டு விடுங்கள். ஏசி ஏர் ஃபில்டரை எப்போது மாற்ற வேண்டும்? என்பது உங்கள் காரின் உரிமையாளர் கையேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அத்துடன் இன்ஜினை 'ஸ்டார்ட்' செய்த பிறகு மட்டுமே ஏசி-யை 'ஆன்' செய்ய வேண்டும் என்பதையும் மனதில் கொள்ளுங்கள். அதேபோல் ஏசி-யை 'ஆஃப்' செய்த பிறகு, இன்ஜினை 'ஆஃப்' செய்வதையும் பழக்கமாக்கி கொள்ளுங்கள். மேலும் கார் நீண்ட நேரம் சூரிய வெளிச்சத்தில் நின்று கொண்டிருந்தால், உடனடியாக ஏசி-யை 'ஆன்' செய்ய வேண்டாம்.

அனைத்து கதவுகளையும் திறந்து வைத்து, உள்ளே இருக்கும் சூடான காற்றை முதலில் வெளியேற்றுங்கள். அதன் பிறகு ஏசி-யை 'ஆன்' செய்யுங்கள். அதேபோல் எடுத்த எடுப்பிலேயே ஏசி-யை மிகவும் அதிக குளிர்ச்சியான நிலையில் வைக்க வேண்டாம். படிப்படியாக குளிர்ச்சியான நிலைக்கு கொண்டு வாருங்கள்.

எடுத்த எடுப்பிலேயே ஏசி-யை மிகவும் அதிக குளிர்ச்சியான நிலையில் வைத்தால், அது கடுமையாக வேலை செய்ய வேண்டியிருக்கும். ஏசி சிஸ்டத்திற்கு நீங்கள் கொடுக்கும் இந்த அதிகப்படியான அழுத்தம், அதன் ஆயுட்காலத்தை மட்டுமல்லாது, காரின் ஒட்டுமொத்த மைலேஜையும் குறைத்து விடும் என்பதை எக்காரணத்தை கொண்டும் மறந்து விட வேண்டாம்.

அதேபோல் படிப்படியாக வெப்ப நிலையை குளிர்ச்சியான சூழலுக்கு கொண்டு வருவதன் மூலம், உங்கள் உடல் மெல்ல மெல்ல அதற்கு ஏற்ப மாறி கொள்வதற்கும் வசதியாக இருக்கும். அதேபோல் உங்கள் காரில் ஏசி திடீரென வேலை செய்யவில்லை என்றால், ஃப்யூஸ் பாக்ஸை திறந்து பாருங்கள். ஃப்யூஸ் போயிருந்தால், ஏசி வேலை செய்யாது. மெக்கானிக்கிடம் செல்வதற்கு முன்னால் நீங்களே இதனை பரிசோதித்து பார்த்து கொள்ளலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 22, 2023, 18:16 [IST]
English summary
Car ac summer tips and tricks
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+