காரை விபத்தில் சிக்காமல் பாதுகாக்க என்னென்ன தொழிற்நுட்பங்கள் பயன்படுகிறது தெரியுமா?

அதிக வேகமாக செல்லும் காரை தயாரிக்கும் நிறுவனங்கள் அதற்கு ஏற்ற வகையில் சில பாதுகாப்பு அம்சங்களையும் காரில் வைத்துள்ளனர்.

இன்று பெருநகரங்களில் பல கார்கள் அதிக வேகமாக செல்வதை நம்மால் பார்க்கமுடிகிறது. தற்போது புதிதாக வடிமைக்கப்படும் கார்களின் பவர்களும், டார்க்கும் அதிகமாக இருக்கிறது.

காரை விபத்தில் சிக்காமல் பாதுகாக்க என்னென்ன தொழிற்நுட்பங்கள் பயன்படுகிறது தெரியுமா?

வேகமாக செல்லும் காரை பார்த்தவுடனே நமக்கு இந்த வேகத்தில் செல்லும் போது விபத்தில் சிக்கினால் என்ன நடக்கும் என்ற பதற்றம் வரும். அதுவும் உண்மைதான் காரின் அளவிற்கு அதிகமான வேகத்தில் செல்வது ஆபத்து தான்.

காரை விபத்தில் சிக்காமல் பாதுகாக்க என்னென்ன தொழிற்நுட்பங்கள் பயன்படுகிறது தெரியுமா?

ஆனால் அதிக வேகமாக செல்லும் காரை தயாரிக்கும் நிறுவனங்கள் அதற்கு ஏற்ற வகையில் சில பாதுகாப்பு அம்சங்களையும் காரில் வைத்துள்ளனர். இது காரில் உள்ளவர்களுக்கு மட்டும் அல்லாமல் காரில் மற்றவர்கள் மீது மோதால் இருக்கவும் சில அம்சங்கள் உள்ளன.

காரை விபத்தில் சிக்காமல் பாதுகாக்க என்னென்ன தொழிற்நுட்பங்கள் பயன்படுகிறது தெரியுமா?

பொதுவாக பாதுகாப்பு அம்சங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம் ஆக்டிவ் சேப்டி, பாசிவ் சேப்டி என விபத்து நடக்காமல் இருக்க அமைக்கப்படுள்ள அம்சங்கள் ஆக்டிவ் சேப்டி, விபத்து நடக்கும் போது சேதங்களை குறைக்கும் அம்சங்கள் பேசிவ் சேப்டி.

காரை விபத்தில் சிக்காமல் பாதுகாக்க என்னென்ன தொழிற்நுட்பங்கள் பயன்படுகிறது தெரியுமா?

இச்செய்தியில் ஆக்டிவ் சேப்டிக்கான பாதுகாப்பு அம்சங்களாக காரில் என்ன என்ன இருக்கிறது என்பதை பார்த்து விடுவோம்.

காரை விபத்தில் சிக்காமல் பாதுகாக்க என்னென்ன தொழிற்நுட்பங்கள் பயன்படுகிறது தெரியுமா?

இ.எஸ்.சி.

இ.எஸ்.சி., என்பது எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், தற்போது புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள தொழிற்நுட்பம், இது கார் அதிகவேகமாக செல்லும் போது, கார் ஸ்டெபிலிட்டியை இழக்கும் பட்சத்திலோ அல்லது கார் ஸ்கிட் ஆகும் வாயப்புள்ள பட்சத்திலோ இந்த இ.எஸ்.சி. எனும் கருவி காரின் வேகத்தை கட்டுப்படுத்தி தானாக பிரேக்கையும் தேவையான அளவு பயன்படுத்தி காரை கண்ட்ரோலுக்கு கொண்டு வந்து விடும்.

காரை விபத்தில் சிக்காமல் பாதுகாக்க என்னென்ன தொழிற்நுட்பங்கள் பயன்படுகிறது தெரியுமா?

இந்த தொழிற்நுட்பத்தால் வேகமாக செல்லும் போது மோசமான ரோடுகளால் ஏற்படும் விபத்துக்களும். டிரைவர் கவனக்குறைவானல் அதிக வேகமாக செல்லும் போது ஏற்படும் விபத்துக்களும் குறையும். தற்போது புதிய கார்களில் இந்த தொழிற்நுட்பம் பொருத்தப்பட்டு வருகிறது.

காரை விபத்தில் சிக்காமல் பாதுகாக்க என்னென்ன தொழிற்நுட்பங்கள் பயன்படுகிறது தெரியுமா?

ஏ.இ.பி.,

ஆட்டோநோமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் என்பது தான் ஏ.இ.பி. இந்த கருவியில் காரன் முன்பகுதியில் சில சென்சார்களும், கேமராவும் பொருத்தப்பட்டிருக்கும். தற்போது கார் முன்னால் உள்ள ஏதேனும் ஒரு பொருளின் மீதோ ஒரு ஆளின் மீதோ மோதி விபத்திற்கு உள்ளாக போகிறது என்றால். உடனடியாக டிரைவருக்கு அது குறித்து அலார்ட் செய்யும்.

காரை விபத்தில் சிக்காமல் பாதுகாக்க என்னென்ன தொழிற்நுட்பங்கள் பயன்படுகிறது தெரியுமா?

டிரைவர் உடனடியாக செல்பட்டு காரை விபத்தில் இருந்து காக்க வேண்டும். டிரைவர் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் கார் தானாவே நின்று விடும் இதனால் விபத்திற்கான வாய்ப்பு குறையும். இது கார் குறைந்த வேகத்தில் செல்லும் போது நடந்தால் விபத்தை முற்றிலும் தவிர்த்து விடும். ஏ.இ.பி. பொருத்தப்பட்ட காருக்கு சாதாரண காரை காட்டிலும் இன்சூரன்ஸ் பிரிமியம் குறைவாக நிர்ணயக்கப்பட்டுள்ளது.

காரை விபத்தில் சிக்காமல் பாதுகாக்க என்னென்ன தொழிற்நுட்பங்கள் பயன்படுகிறது தெரியுமா?

இ.பி.டி

இ.பி.டி என்பது எலெக்ட்ரானிக் பிரேக் போர்ஸ் டிஸ்டிபியூஷன். இது ஏ.பி.எஸ். என்ற தொழிற்நுட்பத்தின் மேம்படுத்தப்பட்ட தொழிற்நுட்பம். இது நாம் காரில் செல்லும் போது சாதாரணமாக பிரேக் பிடித்தால் எவ்வளவு தூரம் தள்ளி நிற்குமோ அதற்கும் குறைவான தூரத்தில் வாகனத்தை நிறுத்துவது தான் இந்த தொழிற்நுட்பம்.

காரை விபத்தில் சிக்காமல் பாதுகாக்க என்னென்ன தொழிற்நுட்பங்கள் பயன்படுகிறது தெரியுமா?

காரில் வேகமாக செல்லும் போது குறுக்கே ஏதேனும் வந்தால் அப்பொழுது ஏற்படும் விபத்திற்கான வாய்ப்பை குறைப்பது தான் இந்த இ.பி.டி.

காரை விபத்தில் சிக்காமல் பாதுகாக்க என்னென்ன தொழிற்நுட்பங்கள் பயன்படுகிறது தெரியுமா?

க்ரூஸ் கண்ட்ரோல்

நீங்கள் காரில் வேகமாக செல்லும் போது உங்களுக்க எதிரே வரும் கார் உங்களை விட குறைந்த வேகத்தில் சென்றால் அந்த காரின் வேகத்தை கணக்கிட்டு உங்கள் காரின் வேகத்தை குறைக்கும் தொழிற்நுட்பம் தான் க்ரூஸ் கண்ட்ரோல்.

காரை விபத்தில் சிக்காமல் பாதுகாக்க என்னென்ன தொழிற்நுட்பங்கள் பயன்படுகிறது தெரியுமா?

உங்களுக்கு முன்னாள் மெதுவாக செல்லும் கார் விலகும் பட்சத்தில் மீண்டும் உங்கள் காரின் வேகம் தானாக கூடும். இது முன்னே செல்லும் வாகனம் மீது மோதி விபத்து நடப்பதை தவிர்க்கும்.

காரை விபத்தில் சிக்காமல் பாதுகாக்க என்னென்ன தொழிற்நுட்பங்கள் பயன்படுகிறது தெரியுமா?

லேன் கீப்பிங் தொழிற்நுட்பம்

இந்த தொழிற்நுட்பம் லேன் லைனை ஓட்டி காரை ஓட்டினாலோ, அல்லது சிக்னல் செய்யாமல் காரை வேறு லேனிற்கு மாற்றினாலோ டிரைவரை அலார்ட் செய்யும்.

காரை விபத்தில் சிக்காமல் பாதுகாக்க என்னென்ன தொழிற்நுட்பங்கள் பயன்படுகிறது தெரியுமா?

இந்த தொழிற்நுட்பத்தின் மேம்படுத்தப்பட்ட மாடலில் கார் லேனை விட்டு வெளியே செல்லும் நிலையில் இருந்தால் காரின் ஸ்டியரிங் வீலை தானாவே அட்ஜஸ்ட் செய்யும், சில கார்களில் க்ரூஸ் கண்ட்ரோலுடன் இந்த தொழிற்நுட்பமும் சேர்ந்து வருகிறது.

காரை விபத்தில் சிக்காமல் பாதுகாக்க என்னென்ன தொழிற்நுட்பங்கள் பயன்படுகிறது தெரியுமா?

விசிபிளிட்டி

புதிதாக டிசைன் செய்யப்படும் கார்கள் நல்ல விசிபிளிட்டி கிடைக்கும் வகையிலேயே டிசைன் செய்யப்படுகின்றன. இதனால் பெரும் விபத்துக்களை தவிர்க்க முடியும். ஆனால் சில உயர் ரக கார்கள் விபத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அமைக்கப்படும் சில அமைப்புகளால் விசிபிளிட்டி பாதிக்கப்படும். அதை கேமராக்கள் மற்றும் பிராக்ஸிமிட்டி சென்சார்கள் கொண்டு ஈடு செய்யப்படுகிறது.

காரை விபத்தில் சிக்காமல் பாதுகாக்க என்னென்ன தொழிற்நுட்பங்கள் பயன்படுகிறது தெரியுமா?

ஸ்பீடு லிமிட்டிங் டிவைஸ்

க்ரூஸ் கண்ட்ரோல் பொருத்தப்பட்ட கார்களில் இந்த தொழிற்நுட்பம் இருக்கும். கார் அதிகவேகமாக செல்லும் போது ஆக்ஸிலரேட்டை கட் செய்து தானாக வேகத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும்.

காரை விபத்தில் சிக்காமல் பாதுகாக்க என்னென்ன தொழிற்நுட்பங்கள் பயன்படுகிறது தெரியுமா?

சீட் பெல்ட் ரிமைன்டர்

இந்தியாவில் காரில் செல்லும் போது பலர் சீட் பெல்டை போடுவது இல்லை. இதை சீர் செய்ய இந்த தொழிற்நுட்பம் பயன்படும் எந்ததெந்த சீட்களில் ஆட்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்பத அறிந்து அந்ததந்த சீட்களில் சீட் பெல்ட் போடவில்லைஎன்றால் டிரைவருக்கு அது குறித்த எச்சரிக்கையை அனுப்பும்.

காரை விபத்தில் சிக்காமல் பாதுகாக்க என்னென்ன தொழிற்நுட்பங்கள் பயன்படுகிறது தெரியுமா?

பிளைன்ட் ஸ்பாட் வார்னிங் சிஸ்டம்

கார் ஒரு லேனில் இருந்து இன்னொரு லேனிற்கு மாறும் போது பின்னால் வரும் வாகனத்தால் விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் அது கண்ணாடில் உள்ள லைட் மூலம் டிரைவருக்கு எச்சரிக்கை செய்யும்.

காரை விபத்தில் சிக்காமல் பாதுகாக்க என்னென்ன தொழிற்நுட்பங்கள் பயன்படுகிறது தெரியுமா?

ஆக்டிவ் ஹெட்லைட்

பொதுவாக ஹெட்லைட் என்பது காருக்கு முன்பக்கம் உள்ள பகுதியில் தான் வெளிச்சத்தை ஏற்படுத்தும். ஆனால் ஆக்டிவ் ஹெட்லைட் நேரடியாக ஸ்டியரங்குடன் தொடர்புடையது. இது கார் திரும்பும் போது ஹெட்லைட்டும் திரும்பி வெளிச்சத்தை ஏற்படுத்து. இதனால் டிரைவர் கவனமாக காரை திருப்பலாம்.

காரை விபத்தில் சிக்காமல் பாதுகாக்க என்னென்ன தொழிற்நுட்பங்கள் பயன்படுகிறது தெரியுமா?

டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்

இது கார் டயரில் உள்ள ஏர் பிரஷரை எப்பொழுதும் சரி பார்த்துக்கொண்டே இருக்கும். ஏதேனும் ஒரு டயரில் ஏர் பிரஷர் குறைந்தாலும் டிரைவருக்கு எச்சரிக்கை செய்யும். இதில் இரண்டு வகை உள்ளது. நேரடியாக டயர் பிரஷரை மானிட்டர் செய்யும் வகையில் டயரில் இதற்கான தனியாக சென்சார் இருக்கும். மறைமுகமாக மானிட்டர் செய்யும் முறையில் ஏ.பி.எஸ் சிஸ்டத்திற்கான சென்சார் மூலமே டயரை மானிட்டர் செய்யும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 25, 2018, 11:58 [IST]
English summary
Car Active safety features explained. Read in tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+