கார் வாங்கிட்டு அப்படியே விட்ற கூடாது! பெருசா செலவு கிடையாது - புது கார் மாதிரி எப்போது பார்த்தாலும் இருக்கும்
காரை வாங்குவதை காட்டிலும், அதனை முறையாக பராமரிப்பதுதான் பெரிய வேலை என சிலர் கூற கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது உண்மைதான். குறிப்பாக, காரில் முதலில் சேதமடையக்கூடிய காரின் பெயிண்ட்டை பாதுகாப்பது என்பது பெரிய வேலையாக உள்ளது. இன்றைய கால கார் பெயிண்ட்கள் நல்ல தரத்தில் வர ஆரம்பித்துவிட்டன என்றாலும், அதற்கேற்ப நம்மை சுற்றிய கால சூழ்நிலையும் மாறி வருகிறது. ஆதலால், குறைந்தப்பட்சம் உங்கள் காருக்கு துருப்பிடித்தலை தடுக்கக்கூடிய கோட்டிங் (Coating) அவசியமானதாக இருக்கலாம். காரின் பெயிண்ட் மீது வழங்கப்படும் இந்த கோட்டிங்கை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
துருப்பிடித்தலுக்கு எதிரான கோட்டிங் தேவையா என்பதை உறுதி செய்க: முந்தைய காலங்களில் எல்லாம் கார்களை இரும்பினால் உருவாக்கினர். ஆனால், இன்றைய காலத்தில் எளிதில் துருப்பிடிக்காத அலுமினியம் அல்லது தடிமனான பிளாஸ்டிக்கில் உருவாக்குகின்றனர். மேலும், அரிப்பை தடுக்கக்கூடிய பாதுகாப்பும் காரின் உடலில் வழங்கப்படுவதால், துருப்பிடித்தலுக்கு எதிரான கோட்டிங்கை கூடுதல் பாதுகாப்புக்காக வேண்டுமாயின் கொடுக்கலாம்.

அதுமட்டுமின்றி, இன்றைய கால கார்களில் இரும்பை பயன்படுத்த வேண்டிய இடங்களில் பிரத்யேகமாக துத்தநாகம் (Zinc) சேர்க்கப்பட்ட இரும்பு பயன்படுத்தப்படுகிறது. இதனால், இன்றைய கால மாடர்ன் கார்களுக்கு அதிகமாக இவ்வாறான கோட்டிங் தேவைப்படுவது இல்லை. அதுவே, பழைய கார்களை பயன்படுத்துபவர்கள் அல்லது அதிக மழை மற்றும் பனிப்பொழிவை கொண்ட பகுதிகளில் வசிப்பவர்கள் துருப்பிடித்தலுக்கு எதிரான கோட்டிங்கை கொடுக்கலாம்.
கோட்டிங்கை தேர்வு செய்க: துருப்பிடித்தலுக்கு எதிரான பாதுகாப்பு மற்றும் காருக்கு அடிப்பகுதியில் வழங்கப்படும் கோட்டிங் என 2 விதமான கோட்டிங் வகைகள் உள்ளன. இதில், துருப்பிடித்தலுக்கு எதிரான கோட்டிங் ஆனது காரின் துருப்பிடித்த பகுதியில் இருந்து துரு மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுக்கும் வகையில் அந்த பகுதியில் மெழுகு படலம் போன்று கொடுக்கப்படுகிறது. அதுவே, காருக்கு அடிப்பகுதியில் வழங்கப்படும் கோட்டிங் ஆனது காருக்கு அடியில் ஸ்பிரே போன்று தெளிக்கப்படுகிறது.
சரியான கோட்டிங்கை தேர்வு செய்தல்: காரை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உலோகத்திற்கு ஏற்பவும், கார் இயங்கும் சுற்றுச்சூழலுக்கு ஏற்பவும் மார்க்கெட்டில் பல்வேறு விதமான துருப்பிடித்தலுக்கு எதிரான கோட்டிங்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், இந்த கோட்டிங்கில் லைட் மற்றும் ஸ்ட்ராங் என தர நிலைகளும் உள்ளன. மெழுகு கோட்டிங் தான் இருப்பதிலேயே மலிவானது ஆகும்.

மேலும், மெழுகு கோட்டிங்கை கொடுக்கும் பணிகளும் விரைவாக செய்து முடிக்க கூடியவை. அதுவே, ரப்பரால் செய்யப்படும் அண்டர்கோட்டிங் ஸ்பிரேவை தெளிக்க சில மணிநேரம் எடுக்கும். இந்த ரப்பர் அண்டர்கோட்டிங் ஸ்பிரேவினால் காருக்கு அடியில் பாகங்களுக்கு இடையேயான உராய்வை குறைத்து, கார் இயங்கும்போது ஏற்படும் இரைச்சலை குறைக்கலாம். மேலும், அவற்றை தேவைப்பட்டால் நீக்கவும், அவற்றின் மீது பெயிண்ட் அடிக்கவும் முடியும்.
பாலியூரிதீன் மெழுகு (Polyurethane Sealant) என்கிற ஒன்றும் விற்பனை செய்யப்படுகிறது. இது பெயிண்ட் போன்ற ஃபினிஷிங் உடன் மிகவும் சவாலான கால சூழ்நிலைக்கு கூட உதவக்கூடியது. எண்ணெய் கோட்டிங் வகைகளும் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. துருப்பிடித்த பகுதிகளிலும் பயன்படுத்தக்கூடிய இதனை ஒவ்வொரு வருடமும் ஒருமுறை அப்ளை செய்ய வேண்டியிருக்கும். இவை இல்லாமல், பெரிய பெரிய டிரக் போன்ற வாகனங்களில் பயன்படுத்தக்கூடிய அஸ்பால்ட் (Asphalt) அண்டர்கோட்டிங்கும் பயன்பாட்டில் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் கோட்டிங் என்கிற சிறிய விஷயத்தை செய்வதன் மூலமாக காரை நீண்ட காலத்திற்கு புத்துணர்ச்சி உடன் வைத்திருக்க முடியும். பல்வேறு விதமான விலைகளில் கிடைக்கும் கோட்டிங்குகளை குறைவான செலவிலும் செய்து முடிக்கலாம். இருப்பினும், கார் கோட்டிங் கொடுப்பதற்கு முன் உங்களது கார் டீலரை ஒருமுறை தொடர்பு கொண்டு ஆலோசித்துக் கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications








