கார் வாங்கும் போது இதெல்லாம் தலையே போனாலும் உங்க கிட்ட சொல்ல மாட்டாங்க! அப்புறம் வச்சு பில் தீட்டுவாங்க!
ஒரு காரை வாங்கும் போது, உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் வாடிக்கையாளர்களிடம் சில விஷயங்களை குறைத்தோ அல்லது மறைத்தோ தான் வாகனங்களை விற்பனை செய்வார்கள். இப்படியான பல அம்சங்களைப் பற்றி நன்கு அறிந்திருப்பது அவசியம். இந்த காரணிகள் வாகனத்தின் ஆயுள், பராமரிப்புச் செலவு மற்றும் மறுவிற்பனை மதிப்பை கணிசமாக பாதிக்கும். இந்த மறைக்கப்பட்ட விவரங்களைப் புரிந்துகொள்வது வாகனம் வாங்குபவர்கள் சரியான முடிவுகளை எடுக்க உதவும்.
வாகன உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் சான்றுகளின் அடிப்படையில் எரிபொருள் திறன் எண்களை விளம்பரப்படுத்துகிறார்கள். இருப்பினும், ரியல் வேர்ல்டில் வாகனம் ஓட்டும் போது போக்குவரத்து, மாறுபட்ட சாலை நிலைமைகள் மற்றும் வெவ்வேறு ஓட்டுநர் பாணிகள் இருக்கும், இது விளம்பரப்படுத்தப்பட்டதை விட குறைந்த மைலேஜ் கிடைக்க வழிவகுக்கும். வழக்கமான பயன்பாட்டில் குறைந்த மைலேஜை வாடிக்கையாளர்கள் அனுபவிக்கும்போது இந்த வேறுபாடு பெரும்பாலும் வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறது.

வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ்கள் குறித்து முன்னிலைப்படுத்தினாலும், சில பாகங்களை மாற்றுவது அல்லது சரிசெய்வது தொடர்பான அதிக செலவுகளை அவர்கள் பெரும்பாலும் வாடிக்கையாளர்களிடம் சொல்லுவதில். இந்த செலவுகள் காலப்போக்கில் அதிகமாகி, காரை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்காத குறிப்பிடத்தக்க பராமரிப்பு பில்களுக்கு இது வழிவகுக்கும்.
ஸ்பேர் பாகங்களின் கிடைக்கும் தன்மை மற்றும் செலவு எப்போதும் தெளிவாக தெரிவிக்கப்படாத முக்கியமான விஷயமாக இருக்கிறது. சில மாடல்களுக்கு, ஸ்பேர் பாகங்கள் கிடைப்பது அரிதாகவோ அல்லது விலை உயர்ந்தவையாகவோ இருக்கலாம், இதன் விளைவாக அதிக சர்வீஸ் செலவுகள் மற்றும் சீரமைப்புகளுக்கு அதிக காத்திருப்பு நேரம் ஏற்படும். இந்த தகவல் தெரியாததால் கார் உரிமையாளர்களுக்கு அசௌகரியம் மற்றும் கூடுதல் செலவுகளை ஏற்படுத்தலாம்.

வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை தீவிரமாக விளம்பரப்படுத்துகின்றனர், எது அவசியம் என்பதை தெளிவுபடுத்தாமல். ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்) மற்றும் ஏர்பேக்குகள் போன்ற அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் முக்கியமானவை, மற்ற அம்சங்கள் மார்கெட்டில் சொல்லப்படுது உண்மையான தேவைக்கு அதிகமாக இருக்கலாம். இந்த அம்சங்களின் உண்மையான முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது பாதுகாப்பான தேர்வை எடுப்பதற்கு மிகவும் முக்கியமானது.
வாரண்டி காலம் வாகன உற்பத்தியாளர்களால் அதிகமாக வலியுறுத்தப்படுகிறது, ஆனால் அதில் என்ன உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது எப்போதும் தெளிவாக இருப்பதில்லை. பல பாகங்கள் மற்றும் சர்வீஸ் உத்தரவாதத்தில் இருந்து விலக்கு இருக்கிறது, இது மிகவும் விரிவான பாதுகாப்பை எதிர்பார்த்த வாடிக்கையாளர்களுக்கு எதிர்பாராத செலவுகளுக்கு வழிவகுக்கும்.

ஒரு காரின் எதிர்கால மறுவிற்பனை மதிப்பு என்பது நிறுவனங்கள் எப்போதும் வெளிப்படுத்தாத ஒரு முக்கியமான விஷயமாக உள்ள. சில மாடல்கள் மற்றவற்றை விட வேகமாக மதிப்பிழக்கக்கூடும், இது வாகன உரிமை வைத்திருக்கும் செலவை பாதிக்கும். சரியான மறுவிற்பனை மதிப்பை அறிந்து கொள்வது வாங்குபவர்கள் தங்கள் நீண்ட கால நிதி இழப்புகள் குறித்து புரிந்துகொள்ள உதவும்.
பெரும்பாலும், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எக்ஸ்-ஷோரூம் விலையை மட்டுமே மேற்கோள் காட்டுகின்றன, ஆன்-ரோடு விலையில் சாலை வரி, காப்பீடு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் கட்டணங்கள் போன்ற கூடுதல் கட்டணங்கள் அடங்கும். இந்த மறைக்கப்பட்ட கட்டணங்கள் காரின் மொத்த செலவை கணிசமாக அதிகரிக்கலாம், வாகனம் வாங்குபவர்களுக்கு இது முன்பு முழுமையாக தெரிவிக்கப்படாவிட்டால் அவர்கள் அதிர்ச்சியடையகூடும்.
இந்த விவரங்களை மறைப்பதற்கான முக்கிய காரணம், அவர்களின் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு மிகவும் ஈர்க்கக்கூடியதாக காட்ட விரும்புவதே. எனவே, வாடிக்கையாளர்கள் வாகனம் வாங்கும் முடிவு எடுப்பதற்கு முன் அவர்கள் தெளிவான கேள்விகளைக் கேட்டு முழுமையான தகவலைப் பெறுவது அவசியம். நன்கு சரிபார்ப்பது எதிர்பாராத சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்கும் திருப்திகரமான வாகனம் வாங்கும் அனுபவத்தை உறுதிப்படுத்துவதற்கும் உதவும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பெரும்பாலும் டீலர்கள் மூலம் வாகனங்களை விற்பனை செய்கின்றனர். டீலர்கள் விற்பனையில் இருக்கும் ஊழியர்களுக்கு டார்கெட் வைத்து பணி செய்வதால் எப்படியாவது வாகனத்தை விற்பனை செய்ய வேண்டும் என சிலர் இப்படியான விஷயங்களை சொல்லாமல் மறைத்துவிடுகின்றனர். இது பிரச்சனையாக மாறுகிறது.


Click it and Unblock the Notifications









