அரை பக்கெட் தண்ணீரும், 10 ரூபாயும் இருந்தா போதும் உங்க காரை ஈஸியா கிளீன் பண்ணிடலாம்!

இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. குடிப்பதற்கே போதுமான தண்ணீர் இல்லாத சூழ்நிலையில் காரை கழுவுவதற்கு தண்ணீரை பயன்படுத்துவது எல்லாம் பலருக்கும் கனவான விஷயமாக இருக்கிறது. பல நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக வாகனங்களை கழுவுவதற்கு தண்ணீரை பயன்படுத்தக் கூடாது என்று அரசு உத்தரவு போட்டுள்ளது. பல இடங்களில் இந்த உத்தரவு இல்லை என்றாலும் தண்ணீர் இல்லாத காரணத்தால் பலர் கார்களை கழுவுவதை தவிர்த்து வருகிறார்கள். குறைவான தண்ணீரில் கார்களை எப்படி சுத்தம் செய்யலாம் என்ற விபரத்தை தான் காண போகிறோம்.

அவர்களை சுத்தம் செய்ய வேண்டும் என்றால் பக்கெட் கணக்கில் தண்ணீர் தேவைப்படும் என பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இன்றளவும் கார்களை சுத்தம் செய்ய ஏகப்பட்ட தண்ணீரை பலர் வீணாக செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். சிலர் காரை எப்படியாவது சுத்தம் செய்ய வேண்டும் என கருதி டிரை கிளீன் மூலம் சுத்தம் செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு சென்று சுத்தம் செய்து வருகிறார்கள்.

car cleaning tips

வாகனங்களை டிரை கிளீன் செய்ய வேண்டும் என்றால் அதிகம் செலவு செய்ய வேண்டியது இருக்கும். பலரால் இந்த செலவை செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் தான் தற்போது நாம் குறைவான தண்ணீரில் காரை எப்படி சுத்தம் செய்யலாம் என பார்க்கப் போகிறோம். குறைவான தண்ணீர் என்றால் அரை பக்கெட் தண்ணீர் போதும் உங்கள் காரை சுத்தம் செய்து விடலாம்.

இதை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் பணத்தையும் மிச்சப்படுத்தலாம், நேரத்தையும் மிச்சப்படுத்தலாம். இதை செய்வதற்கு முதலில் நீங்கள் அரை பக்கெட் தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் காரை கழுவுவதற்காக ஒரு துணியை எடுத்துக் கொள்ளுங்கள். தற்போது அந்த துணியை நீங்கள் தண்ணீரில் நனைக்க வேண்டும்.

car cleaning tips

தண்ணீரில் நனைந்த துணியை வைத்து காரின் வெளிப்பகுதி முழுவதும் சுத்தமாக துடைத்து எடுங்கள். இதனால் காரின் வெளிப்பகுதியில் உள்ள தூசு முழுவதும் நீங்கிவிடும். பொறுமையாக சுத்தம் செய்யுங்கள். பெரும்பாலும் சாஃப்டான துணியை பயன்படுத்துவதால் காரில் எந்த வித ஸ்கிராட்ச்சும் இல்லாமல் இருக்கும்.

தண்ணீர் வைத்து காரை முழுமையாக துடைத்து எடுத்த பின் ஒரு காய்ந்த துணியை வைத்து மீண்டும் காரை துடைக்க வேண்டும். அப்பொழுதுதான் காரின் வெளிப்பகுதியில் இருக்கும் ஈரம் முழுவதுமாக நீங்கும். ஏற்கனவே ஈரமான துணியை வைத்து துடைக்கும் போது காரில் உள்ள அழுக்குகள் எல்லாம் நீங்கி இருக்கும் நிலையில், தற்போது ஈரமும் நீங்கி விட்டால் கார் பளபளப்பாக மாறிவிடும்.

car cleaning tips

அடுத்ததாக காரின் கண்ணாடி பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். கண்ணாடி பகுதியை முதலில் காரை துடைக்கும் போது ஈரதுணியை பயன்படுத்தும் நேரத்திலேயே கண்ணாடியையும் ஈரமான துணியை வைத்து துடைத்து விடுங்கள். அதன் பிறகு காய்ந்த துணியை வைத்து கண்ணாடியை துடைப்பதற்கு பதில் ஒரு பழைய பேப்பர் ஒன்றை எடுத்து கண்ணாடி பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் கார் கண்ணாடி பகுதியில் படிந்திருக்கும் ஈரம் நீங்கி சுத்தமாக காட்சியளிக்கும்.

காரின் உட்புறத்தை சுத்தம் செய்வது எளிது. இதற்கு நீங்கள் தண்ணீரை பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை வேக்கம் கிளீனர் கொண்டு காரின் வெளிப்பகுதியை சுத்தம் செய்யலாம். காரில் உள்ள அனைத்து டோர் மேட்களையும் காரை விட்டு வெளியே எடுத்து அதை சுத்தம் செய்ய வேண்டும். டோர் மேட்களை போடும் முன்னர் காரின் உட்பகுதியில் சுத்தம் செய்ய வேண்டும்.

அதன் பிறகு காரின் சீட்டுகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதில் தண்ணீரை பயன்படுத்த தேவையில்லை. இறுதியாக காரின் டேஷ்போர்டை வேக்கம் கிளீனர் கொண்டு சுத்தம் செய்யலாம். அல்லது லேசான ஈரமுள்ள துணியை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். அதே துணியை வைத்து காரின் டோர் பகுதியையும் சுத்தம் செய்ய வேண்டும். டோர் பகுதியில் துணி இல்லாத இடமாக இருந்தால் மட்டும் ஈரத் துணியை பயன்படுத்தலாம்.

ஈரமாக இருக்கும் துணியை வைத்து நீங்கள் காரின் உட்பகுதியில் எந்த இடத்தில் எல்லாம் துடைத்தீர்களோ அந்த இடத்தில் எல்லாம் காய்ந்த துணியை வைத்து மீண்டும் ஈரத்தை சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் நீங்கள் குறைவான தண்ணீரிலேயே உங்கள் காரை முழுவதுமாக சுத்தம் செய்து விட முடியும். அடுத்ததாக காரை பளபளப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

இதற்கு நீங்கள் பாலிஷ் வாங்கி பயன்படுத்த முடியும்.பாலிஷ் செய்வதற்கு வெளிமார்க்கெட்டில் பல்வேறு பொருட்கள் விற்பனையாகிறது. இதை வாங்கி நீங்கள் காரின் வெளிப்பகுதியில் தடவி பாலிஷ் போடலாம். பாலிஷ் போடுவதற்கு வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை உங்கள் வீட்டிலேயே இதை செய்ய முடியும். காரை துடைப்பது போலவே பாலிஷ் போட முடியும்.

கார் பாலிஷ் என்பது வெளிமார்க்கெட்டில் ரூபாய் 100 முதல் ரூபாய் 1500 வரை கிடைக்கிறது. இதை வாங்கினால் நீங்கள் ஒரு ஆண்டுக்கு மாதம் ஒருமுறை என்ற கணக்கில் காருக்கு பாலிஷ் போட முடியும். அதனால் நீங்கள் காருக்கு பாலிஷ் போட வெறும் ரூபாய் 10 செலவு செய்தாலே ஒருமுறை பாலிஷ் செய்து விட முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதனால் உங்கள் வீட்டில் அரை பக்கெட் தண்ணீரும் பத்து ரூபாயும் செலவு செய்து நீங்கள் உங்கள் வாகனத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும். இதற்காக நீங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டிய தேவையும் இல்லை. தண்ணீர் இல்லாத நேரத்தில் நீங்கள் தண்ணீரை வீணாக செலவு செய்ய வேண்டிய தேவையுமில்லை. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி காரை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, May 31, 2024, 22:09 [IST]
English summary
Car cleaning tips summer water saving method
மேலும்... #car tips
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X