தீபாவளியை கொண்டாடும் போது காரை கவர் போட்டு மூடாதீர்கள்! இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கதா?
தீபாவளி நேரங்களில் சாலையோரம் பார்க் செய்யப்பட்ட கார்களை கவர் போட்டு மூடக்கூடாது என்ற விஷயம் உங்களுக்கு தெரியுமா? அப்படி செய்தால் அது உங்கள் காருக்கே மிகப்பெரிய ஆபத்தாக மாறிப்போக வாய்ப்புள்ளது? கவர் போட்டால் கார் பாதுகாப்பாக தானே இருக்கும் எப்படி காருக்கு ஆபத்து ஏற்படும் என உங்களுக்கு தோன்றுகிறதா? இதைப் பற்றி விரிவாக காணலாம் வாருங்கள்.
தீபாவளி நெருங்கி விட்டது நாம் அனைவரும் தற்போது தீபாவளி கொண்டாட்டத்தின் மூடில் இருப்போ.ம் வீடுகளில் பலகாரங்கள் செய்து தீபாவளி அன்று பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம். இந்தியா முழுவதும் தீபாவளி என்பது மிக முக்கியமான பண்டிகையாக இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள மக்கள் தீபாவளி பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள்.

பொதுவாக தீபாவளி நேரங்களில் சாலைகளில் பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். நம்மில் பலர் நாம் பயன்படுத்தும் கார்களை வீட்டில் நிறுத்த இடமில்லாமல் சாலையில் நிறுத்தி இருப்போம். அல்லது வீட்டின் முன்பே உள்ள பார்க்கிங்கில் நிறுத்தி இருப்போம். தீபாவளி நேரங்களில் கார் நிறுத்தப்பட்ட பார்க்கிங் அருகே தான் நாம் வெடி போட்டு கொண்டாடுவோம்.
இப்படியான நேரங்களில் காரில் எந்தவிதமான பட்டாசுகளும் வெடிக்கும் போது அது காரில் பட்டு சேதம் அடைந்து விடக்கூடாது. என்பதற்காக சிலர் கார்களை கவர் போட்டு மூடி விடுவார்கள். இப்படி மூடினால் தான் கார் பாதுகாப்பாக இருக்கும் என பலர் கருதுகின்றார்கள். இந்த காருக்கு கவர் என்பது மழை நேரங்கள் மற்றும் வெயில் நேரங்களில் காரை பாதுகாப்பதற்கான பொருள்தான்.

ஆனால் தீபாவளி நேரங்களில் காருக்கு ஏற்படும் ஆபத்து என்பது மழை, வெயில் போன்ற விஷயங்கள் அல்ல இது பட்டாசு என்ற தீ விபத்து ஏற்படுத்தும் சமாச்சாரம் ஆகும். இந்தியாவில் கார்களை கவர் செய்ய பயன்படுத்தப்படும் பெரும்பாலான அவர்கள் எளிதில் தீப்பற்றிக் கொள்ளக்கூடிய கவர்களாகவே இருக்கும். பிளாஸ்டிக் அல்லது துணி கொண்டுதான் இந்த கவர்களை தயாரித்திருப்பார்கள் .
இதனால் நீங்கள் தீபாவளி நேரங்களில் உங்கள் காரை பாதுகாப்பதற்காக காரை கவர் போட்டு மூடினால் உங்கள் கார் அருகே பட்டாசு வெடித்து கொண்டாடும்போது அதை நெருப்புப் பொறி உங்கள் காரின் கவர் மீது பட்டு அது எளிதில் தீப்பற்றி காரையே தீக்கிரையாக செய்து விடும். இப்படியாக கார் அருகே பட்டாசு வெடித்து அந்த பட்டாசு நெருப்பு போய் பட்டு கார் கவர் எறிந்து காரை நாசமான சம்பவங்கள் பல நடந்துள்ளன.

இதனால் தீபாவளி நேரங்களில் நீங்கள் காரை கவர் போட்டு மூடுவதை விட கவர் போடாமல் விட்டு விடுவதே சிறந்தது. முடிந்த அளவிற்கு காரை பட்டாசு வெடிக்காத இடத்தில் பார்க் செய்து வைத்துவிட்டால் எந்த விதமான பிரச்சினையும் ஏற்படாது. ஆனால் வேறு வழியில்லை பட்டாசு அருகில் தான் வெடிப்பார்கள் என்றால் நீங்கள் கவரை நீக்கி விடுவது தான் சிறந்த ஐடியா.
கார் அருகே பட்டாசு வெடிப்பதால் காருக்கு ஏற்படும் ஆபத்தை விட கவர் போட்டு இருக்கும்போது கார் அருகே பட்டாசு வெடித்தால் ஏற்படும் ஆபத்து மிக அதிகமாக இருக்கிறது. இதனால் காரை பத்திரமாக பார்க் செய்வது சிறந்த வழி, என்றாலும் வேறு வழி இல்லை, என்றால் காரின் கவரை நீக்கி விடுங்கள். காரை முற்றிலும் மூடப்பட்ட பார்க்கிங் பகுதியில் நிறுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
நீங்கள் உங்கள் வீட்டில் பட்டாசு வெடிக்கும் போது உங்கள் கார் அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பல சிறுவர்கள் காருக்கு அடியில் கூட பட்டாசு வைத்து வெடித்து விளையாடும் வாய்ப்புள்ளது. இப்படியான நேரங்களில் உங்கள் கார் தீ விபத்தில் சிக்க கூட வாய்ப்பு இருக்கிறது. இதனால் நீங்கள் எப்பொழுதும் தீபாவளி நேரத்தில் உங்கள் காரை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு காரை வாங்குவதை விட அதை பத்திரமாக பாதுகாப்பது தான் பெரிய சவாலான விஷயம். கார் வைத்திருக்கும் பலருக்கும் காரை பாதுகாப்பதில் உள்ள ஆபத்துக்கள் காருக்கு எப்படி எல்லாம் ஆபத்துக்கள் வரும் என்ற விபரங்கள் தெரிவதில்லை. தீபாவளி நேரங்களில் உங்கள் வாகனத்தை பாதுகாக்க வேண்டியது மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. இதனால் உங்கள் கார் விஷயத்தில் கவனமாக இருங்கள்.


Click it and Unblock the Notifications









