டப்பு டப்புன்னு கார் கதவை அடைக்க கூடாது! மெதுவா அடைச்சாலும் முடியாது! அப்ப என்ன பண்ணனும் தெரியுமா?

நீங்கள் வாகனங்களில் பயணிக்கும் போது காரின் கதவுகளை வேகமாக மூடினால் வாகனத்தின் உரிமையாளர் உங்கள் மீது கோபப்படக்கூடும். காரின் கதவுகளை மெதுவாக மூடும்படி உங்களிடம் கோபமாக கூற வாய்ப்புள்ளது. இப்படியான சம்பவம் நாம் அனைவருக்கும் நடந்திருக்கும். ஆனால் வாகனங்களின் கதவுகளை மெதுவாக மூடினால் சரியாக முடாது. இப்படியாக வாகனங்களின் கதவுகளை எப்படி சரியாக மூட வேண்டும் என்ற விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.

நீங்கள் உங்கள் நண்பர் அல்லது உறவினர் வாகனத்தில் பயணிக்கும் போது கார் கதவையோ அல்லது பானட் பகுதிலையோ திறந்து விட்டு வேகமாக மூடினால் அதன் காரணமாக அவர்கள் உங்கள் மீது படக்கூடும். வேகமாக மூடினால் காரின் கதவு சீக்கிரமாக பழுதாகிவிடும் என அவர்கள் உங்களை எச்சரிக்க கூட வாய்ப்புள்ளது.

car door closing tips

இப்படியான சம்பவங்களை நாம் வாழ்நாளில் ஒருமுறையாவது கடந்து இருப்போம். ஆனால் அவர்கள் சொல்வது போல் வாகனங்களின் கதவுகளை மெதுவாக மூடினால் அது சரியாக மூடாமல் போக கூட வாய்ப்பு இருக்கிறது. இது பெரும்பாலும் கார் கதவுகளில் நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் பானட் பகுதியை வேகமாக மூடினாலும் இப்படியான பிரச்சினை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

பொதுவாக கார் கதவு எப்படி லாக் ஆகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்வதன் மூலம் இதை சரியாக செய்ய முடியும். கார் கதவு லாக் சிஸ்டத்தில் ஒரு கொண்டி ஒன்று இருக்கும். அது ஸ்பிரிங் மூலம் இணைக்கப்பட்டிருக்கும் இது காரின் கதவை அடைக்கும் போது தானாக லாக்கின் மேலே ஏறி லாக்கிற்க்குள் சென்று லாக் ஆகிவிடும். ஆனால் திறக்கும்போது ஒரு பட்டனை அழுத்தி ஸ்ப்ரிங் மூலம் அதை லாக்கில் இருந்து வெளியே எடுத்தால் மட்டுமே கார் கதவை திறக்க முடியும்.

car door closing tips

இது காரில் உள்ள கதவுக்கு மட்டுமல்ல பானட் பகுதியிலும் இதே தொழில்நுட்பம் தான் பொருத்தப்பட்டுள்ளது. இப்படியாக காரின் கதவை அடைக்கும் போது பட்டனை அழுத்த தேவையில்லை. தானாகவே ஸ்பிரிங் மூலம் மேலே ஏறி லாக் ஆனாலும் இது நடப்பதற்கு கொஞ்சம் ஃபோர்ஸ் தேவைப்படுகிறது. ஃபோர்ஸ் இல்லாமல் கார் கதவை மெதுவாக அடித்தால் இந்த லாக் தானாக மேலே ஏறாது. இதனால் கார் கதவு சரியாக மூடாமல் இருக்கும்.

இதன் காரணமாக ஓரளவு ஃபோர்ஸ் கொடுத்தால் மட்டுமே காரின் கதவுகள் மூடும். இல்லை என்றால் வெளியில் இருந்து பார்க்கும் போதே சரியாக மூடவில்லை என்பது நமக்கு தெரியும். கார் கதவுகளை வேகமாக அடைத்தால் அது பாதிப்பை ஏற்படுத்துமா என்றால், அதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நீங்கள் ஓரளவுக்கான வேகத்தை பயன்படுத்துவதில் எந்த விதமான தவறுகளும் கிடையாது.

car door closing tips

அதிக வேகத்தில் கார் கதவுகளை அடைத்தால் மட்டுமே இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். பெரும்பாலும் நாம் அப்படியான தவறுகளை செய்வதில்லை. இதனால் கால் கதவுகளை சற்று வேகமாக அடைக்க எந்தவித தயக்கமும் காட்ட வேண்டாம். பானட் பகுதியில் இதே தொழில்நுட்பம் தான் இருக்கிறது. பானட் பகுதியை மூடும் போது இதே போன்ற லாக்தான் ஏற்படும்.

ஆனால் அந்த லாக்கை பாதுகாக்க வேண்டும் என கருதி சிலர் பானட் பகுதியை மெதுவாக முடி அதன் மேல் தன் கைகளை வைத்து அழுத்துவார்கள். இதனால் கூட பானட் பகுதி லாக் ஆகிவிடும். ஆனால் இப்படியாக செய்யும் முறை முற்றிலும் ஆபத்தானது. காரின் பானட் பகுதி லேசாக இருப்பதால் அதை நீங்கள் அழுத்தும் போது அதில் டென்ட் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இதனால் நீங்கள் பானட் பகுதியை மூடும்போது பானட் பகுதி லாக்கிலிருந்து சுமார் ஒரு அடி உயரமாவது இருக்க வேண்டும். அந்த உயரத்தில் இருந்து பானட் எடையுடன் நீங்கள் பானட்டை விட்டால் சரியான ஃபோர்ஸுடன் சென்று லாக் ஆகிவிடும். நீங்கள் மெதுவாக வைத்து அழுத்தினால் பானெட்டில் டென்ட் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிதாக கார் வாங்கியவர்கள் பல காரின் கதவுகளை மெதுவாக மூட வேண்டும். வேகமாக மூடக்கூடாது என்று பல்வேறு விதமான மூடநம்பிக்கைகள் இருக்கிறார்கள். இதை சரியாக புரிந்து கொண்டால் மட்டுமே சரியாக செயல்பட முடியும். அதிக வேகமாகவும் மூடக்கூடாது, அதற்காக மிகவும் மெதுவாகவும் மூடக்கூடாது என்பதை நாம் புரிந்து கொண்டு சரியாக செயல்பட வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 26, 2024, 7:00 [IST]
English summary
Car door closing tips how to open close door bonnet correctly
மேலும்... #auto tips
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X