மெக்கானிக்கிட்ட போன தலையில் மிளகா அரைச்சிடுவாங்க! காரின் இன்ஜின் ஆயிலை எப்ப மாற்ற வேண்டும் தெரியுமா?

நீங்கள் சொந்தமாக கார் வைத்திருந்தால் அந்த காருக்கு நீங்கள் பார்க்க வேண்டிய முக்கியமான பராமரிப்பு பணி என்பது அவ்வப்போது காரின் இன்ஜின் ஆயிலை மாற்றுவது தான். ஒரு வாகனத்தின் இன்ஜின் ஆயிலை எவ்வளவு இடைவெளியில் மாற்ற வேண்டும் என்ற தகவல் பலருக்கும் புரிதல் இல்லாமல் இருக்கிறது. சிலர் மாத கணக்கை கணக்கிட்டும், சிலர் எவ்வளவு கிலோமீட்டர் பயனர்த்துள்ளோம் என்பதை கணக்கிட்டும் மாற்றுகிறார்கள்.

சொந்தமாக கார் வைத்திருக்கும் பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய தலைவலி அவ்வப்போது காரின் இன்ஜின் ஆயிலை மாற்ற வேண்டும் என்பதுதான். சிலர் சுமார் 5000 கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு மாற்றுவார்கள். சிலர் 3 மாத இடைவெளியில் மாற்றுவார்கள். ஆனால் இது எல்லாம் சரியான விஷயம் தானா? எந்த நேரத்தில் காரில் இன்ஜின் ஆயிலை எப்படி மாற்ற வேண்டும் என உங்களுக்கு சரியான புரிதல் உள்ளதா?

car engine oil change

காரின் இன்ஜினில் ஆயிலை மாற்றுவது என்பது நல்ல விஷயம்தான். அதனால் நான் முடிந்த அளவு சீக்கிரமாகவே மாற்றுகிறேன். இதனால் என்ன பிரச்சனை என நீங்கள் கேட்கலாம்? ஆனால் இதனால் காருக்கு எந்தவிதமான லாபமும் கிடையாது. அதேநேரம் எந்தவிதமான நஷ்டமும் கிடையாது. ஆனால் உங்கள் பணம் வீணாகும், உங்கள் நேரம் செலவழியும், மூலப்பொருட்களின் செலவுகள் வீணாகும், அதனால் காருக்கு இன்ஜின் ஆயிலை உரிய நேரத்தில் மாற்றுவது தான் சரியானது.

உரிய நேரத்தை எப்படி கண்டுபிடிப்பது எப்படி? சிலர் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறை காரின் இன்ஜின் ஆயில் மாற்ற வேண்டும் என சொல்கிறார்கள். சிலர் 5000 கிலோ மீட்டர் பயணித்த பிறகு காரின் இன்ஜின் ஆயிலை மாற்ற வேண்டும் சொல்கிறார்கள். சிலர் 10,000 கிலோமீட்டருக்கு பிறகு மாற்ற வேண்டும் என சொல்கிறார்கள், சிலர் 20,000 கிலோமீட்டருக்கு ஒருமுறை கூட காரின் இன்ஜின் ஆயிலை மாற்றுகிறார்கள்.

car engine oil change

காரின் இன்ஜின் ஆயிலை மாற்ற வேண்டுமென்றால் ஏற்கனவே அதில் இருக்கும் இன்ஜின் ஆயில் என்பது பலனற்றதாக மாற வேண்டும். பலனற்றதாக மாறிய பின்பு தான் நீங்கள் புது ஆயிலை மாற்றும் போது உங்கள் காருக்கு எந்தவிதமான பிரச்சினையும் இருக்காது. அதனால் தற்போது இருக்கும் இன்ஜின் ஆயில் எப்படி பலனை இழக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

காரின் இஞ்சினை ஸ்டார்ட் செய்யும் போது அதிக அளவு உராய்வு ஏற்பட்டு இன்ஜின் ஆயில் என்பது பயன்படுகிறது. அதனால் நீங்கள் காரை அதிக தூரம் ஓட்டாமல் வைத்திருந்தால் அல்லது மிகக் குறுகிய தூரம் மட்டுமே ஓட்டுவாராக இருந்தால், தினம் 10தடவைக்கு மேல் காரை ஸ்டார்ட் செய்வது வருவதாக இருந்தால் நீங்கள் கிலோ மீட்டரை கணக்கிட முடியாது, குறிப்பிட்ட மாத கணக்கில் தான் நீங்கள் இன்ஜின் ஆயிலை மாற்ற வேண்டும்.

car engine oil change

இதுபோக ஒவ்வொருவரின் டிரைவிங் ஸ்டைலுக்கும் ஏற்ப இன்ஜின் ஆயில் என்பது மாறுபடும். நீங்கள் குறைவான வேகத்தில் தொடர்ந்து நீண்ட தூரம் பயணிப்பவராக இருந்தால் 8000 முதல் 12000 கிலோ மீட்டருக்கு ஒரு முறை இன்ஜின் ஆயிலை மாற்றினால் போதும். ஆனால் இந்த நேரத்தில் நீங்கள் ரேஷ் டிரைவிங் செய்திருக்கக் கூடாது. அப்படியான நேரங்களில் இந்த இடைவெளியில் மாற்றினால் நல்லது.

வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வாகனத்தின் இன்ஜினிற்க்கு சிந்தடிக் ரக ஆயுளை தான் பயன்படுத்த வேண்டும் என கூறியிருப்பார்கள். சாதாரண இன்ஜின் ஆயிலை விட அதிகம் உழைக்கும் திறன் கொண்டதாக இருக்கும். அந்த ஆயிலை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் நிச்சயம் 15,000 முதல் 20,000 கிலோமீட்டர் வரை வாகனம் ஓட்டிவிட்டு அதன் பிறகு ஆயிலை மாற்ற முயற்சி செய்யலாம்.

ஆனால் அவர்களும் குறிப்பிட்ட காலத்திற்கு வாகனத்தை மிக குறைவாக ஓட்டியோ அல்லது ஓட்டாமல் வைத்திருந்தால் ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது நிச்சயம் ஆயிலை மாற்றியாக வேண்டும். அப்பொழுதுதான் வாகனத்தின் ஆயுள் அதிகமாக இருக்கும். இதனால் நீங்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கிய கார் நீண்ட காலம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன ஓட்டிகள் பலருக்கும் இருக்கும் சந்தேகம் எவ்வளவு இடைவெளிக்கு ஒருமுறை வாகனத்தின் இன்ஜின் ஆயிலை மாற்ற வேண்டும் என்பதுதான். அந்த சந்தேகத்திற்கு கிட்டத்தட்ட நாங்கள் பதில் அளித்து விட்டோம் என நம்புகிறோம். இதை பின்பற்றினாலே உங்கள் வாகனத்தின் இன்ஜின் ஆயுள் என்பது நிச்சயம் அதிகரிக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 14, 2024, 15:42 [IST]
English summary
Car engine oil change how often should you get it done
மேலும்... #எப்படி
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X