மெக்கானிக் கூட முழுசா சொல்ல மாட்டாங்க... என்ஜின் ஆயிலை நிரப்பும்போது இதை மறந்துடாதீங்க!!

எந்தவொரு வாகனத்திற்கும் என்ஜின் தான் அதன் இதய பகுதி ஆகும். காரை பொறுத்தவரையில், அவற்றின் மதிப்பையும், விலையையும் தீர்மானிப்பதில் என்ஜின் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது, கார் என்ஜினின் தரம் எவ்வாறானதாக உள்ளது? அது வழங்கும் பெர்ஃபார்மன்ஸ் மற்றும் மைலேஜ் அளவுகள் என்ன? என்பதை அறிவது மிகவும் அவசியமானது ஆகும். மிகவும் வெப்பத்துடன் இயங்கினாலும் காரின் மென்மையான இயக்கத்திற்கு என்ஜினும், அதனினுள் ஊற்றப்படும் ஆயிலும் தான் வழிவகுக்கின்றன. ஆதலால், காரில் எந்த வகையான ஆயிலை நிரப்புகிறோம் என்பது முக்கியமாகும்.

மார்க்கெட்டில் பல்வேறு விதமான பிராண்ட்களில் ஆயில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பழக்கப்பட்ட மெக்கானிக்குகளின் பரிந்துரையின்படி அவற்றுள் ஒன்றை வாங்கி பயன்படுத்தலாம். அதேபோல், மெக்கானிக்கிடம் கேட்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், என்ஜின் ஆயிலை எந்த அளவிற்கு நிரப்ப வேண்டும் என்பதாகும். கார் நிறுவனங்களும் ஆயில் அளவுகளை பரிந்துரை செய்கின்றன.

car engine oil filling risks

அதுமட்டுமின்றி, இன்றைய கால மாடர்ன் கார்களில் வேரியபிள் வால்வு டைமிங் சிஸ்டங்கள் வழங்கப்படுகின்றன. இவை, என்ஜினின் செயல்பாட்டை கண்காணித்து, ஏதேனும் பிரச்சனை ஏற்படின் அதுகுறித்து எச்சரிக்கைகளை வழங்குகின்றன. இவற்றை எல்லாம் கவனிக்காமல், நீங்களாக என்ஜின் ஆயிலை நிரப்பும்போது சில சமயங்களில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

அதிக ஆயிலை நிரப்புவதால் ஏற்படும் பிரச்சனைகள்: கார் நிறுவனம் பரிந்துரைத்த ஆயிலை காட்டிலும் மிகவும் அதிகமாக ஆயிலை நிரப்பினால் இரு பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஒன்று, ஆயில் லீக் ஆகுவது ஆகும். அதிக ஆயிலை நிரப்பினால், அதிக அழுத்ததின் காரணமாக ஆயில் குழாய் அல்லது ஆயில் டேங்கில் இருந்து ஆயில் சிறுக, சிறுக கசிவதற்கு வாய்ப்புள்ளது.

2வது பிரச்சனைக்கும் காரணம், இந்த முதல் பிரச்சனை ஆகும். அதாவது, ஆயில் கசிவால் கார் என்ஜின் சிலிண்டரில் தீப்பொறிகள் ஏற்படக்கூடும். இதன் காரணமாக என்ஜின் கிரான்க்‌ஷாஃப்டின் செயல்பாடு பாதிக்கும். அதாவது, கிரான்க்‌ஷாப்ட் கஷ்டப்பட்டு உழைக்க ஆரம்பிக்கும். இதனால், அதன் சுழற்சியின் வேகம் குறையும். ஆயில் அதிகமாக இருந்தால் அதற்கேற்ப ஆயிலை என்ஜின் அதிகமாக எடுத்துக் கொள்ளும்.

இதன் எதிரொலியாக, சைலன்சரில் இருந்து அதிக புகை வெளிவருவது, தீப்பொறிகள் வருவது மற்றும் கரும்புகை வெளிவருவது போன்ற அறிகுறிகளை கண்கூடாக பார்ப்பீர்கள். இவை என்ஜின் பெர்ஃபார்மன்ஸில் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, கரும்புகை வெளிவருவது எல்லாம் என்ஜினில் பெரிய பிரச்சனையை குறிப்பதாகும். இந்த பிரச்சனைகள் இன்ஸ்சூரன்ஸ் புதுப்பிப்பின் போது காரின் மதிப்பை குறைத்துவிடும்.

car engine oil filling risks

மிகவும் குறைந்த ஆயிலை நிரப்புவதால் ஏற்படும் பிரச்சனைகள்: இவ்வளவு நேரம், அதிக ஆயிலை நிரப்புவதால் ஏற்படும் பிரச்சனைகளை பார்த்துக் கொண்டிருந்தோம். இனி குறைந்த ஆயிலை நிரப்புவதால் ஏற்படும் பிரச்சனைகளை பார்க்கலாம். கார் என்ஜின் சிஸ்டத்திற்குள் பாகங்கள் சீராக இயங்குவதற்கு ஆயில் மிகவும் அவசியமான ஒன்றாகும். அது குறைவாக கிடைக்கும்போது என்ஜின் சிஸ்டத்திற்குள் உராய்வு குறைந்துவிடும்.

இந்த உராய்வுகளினால் என்ஜின் சிஸ்டத்திற்குள் இருக்கும் பாகங்கள் விரைவாக தேய்மானம் அடைய துவங்கும். ஒரு கட்டத்திற்குமேல் அவற்றை மாற்றினால் தான் கார் இயங்கும் என்கிற நிலைக்கு செல்ல நேரிடும். ஆதலால், என்ஜின் ஆயிலை அதிகம் நிரப்புவதால் ஏற்படும் பிரச்சனைகளை போன்று, குறைவாக நிரப்புவதாலும் கார் கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாம் ஈசியாக எடுத்துக் கொள்ளும் என்ஜின் ஆயில் நிரப்புவதில் கூட இத்தனை விஷயங்கள் உள்ளன. இவற்றை பற்றி விரிவாக தெரிந்துக்கொள்வதற்கு இணையத்தில் இன்னும் நிறைய குறிப்புகள் உள்ளன. அதேபோல், காருடன் வழங்கப்படும் கார் மேனுவல் புத்தகத்தையும் படித்து பார்க்கலாம். மேலும், கார் என்ஜின் ஆயிலை நீண்ட காலத்திற்கு மாற்றாமல் இருப்பதும் பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதை மறவாதீர்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, September 20, 2024, 21:48 [IST]
English summary
Car engine oil overfilling and running on low oil problems check all details here
மேலும்... #car tips #car engine #engine oil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+