காரில் எரிபொருளை மிச்சப்படுத்துவதற்கான வழிமுறைகள்

Fuel Saving Tips
விண்ணை முட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் கார், பைக் வைத்திருப்பவர்களின் பாடு திண்டாட்டமாகி வருகிறது. இந்த நிலையில், சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தால் எரிபொருளை அதிக அளவில் மிச்சப்படுத்த முடியும். பாக்கெட்டுக்கும் பங்கம் வராது.

காரில் எரிபொருளை மிச்சப்படுத்துவதற்காக செய்ய வேண்டியது என்ன?, அதன்மூலம் எவ்வளவு சதவீதம் எரிபொருள் மிச்சமாகிறது என்பது குறித்த விபரங்களை இங்கே காணலாம்.

ப்ளான் பண்ணி போகணும்:

தினசரி செல்லும் இடங்களை தவிர பிற இடங்களுக்கு செல்லும்போது திட்டமிட்டு சரியான வழியை தேர்ந்தெடுத்து செல்வதன் மூலம் 15 சதவீதம் எரிபொருளை சேமிக்க முடியும். சற்று தொலைவு அதிகமாயினும் நல்ல ரோடாக தேர்ந்தெடுத்து செல்வது முக்கியம்.

கூடுதல் எடை:

காரின் டிக்கியில் அளவுக்கு அதிகமாகவும், தேவையில்லாத பொருட்களையும் ஏற்றுவதை தவிர்க்கவும். இதன்மூலம், 15 சதவீதம் எரிபொருளை மிச்சப்படுத்த முடியும்.

கதவு கண்ணாடி:

கார் கதவு கண்ணாடிகளை திறந்து வைத்து செல்வதை தவிர்க்கவும். இதனால், காரின் முன்னோக்கி செல்லும் திறன் காற்றால் பாதிக்கப்படும். இதேபோன்று, காரின் மேற்கூரையில் அதிக அளவு பொருட்களை ஏற்ற வேண்டாம். இதன்மூலம், 27 சதவீத எரிபொருளை மிச்சப்படுத்த முடியும்.

கிளட்ச், பிரேக்:

கிளட்ச், பிரேக்கை சிலர் பிடித்துக்கொண்டே ஓட்டுவர். இதை தவிர்ப்பதுடன் தேவையான இடங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம், 18 சதவீத எரிபொருளை மிச்சப்படுத்தலாம்.

வேகம் விவேகமல்ல:

காரோ, பைக்கோ மிதமான வேகத்தில் ஓட்ட பழகிக்கொள்ளுங்கள். அலுவலகமாயினும், பிற இடங்களுக்கு செல்வதாயினும் 15 நிமிடம் முன்கூட்டியே கிளம்புங்கள். இதன்மூலம், 15 சதவீத எரிபொருள் மிச்சமாவதோடு, தேவையில்லாமல் பதட்டப்பட்டு வாகனத்தை ஓட்ட வேண்டி இருக்காது.

எரிபொருள் தரம்:

எரிபொருளின் தரம் மைலேஜுக்கு அதிக முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே, தரமும், சரியான அளவு தரும் ஒரே பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்புங்கள். இதன்மூலம், 10 சதவீதம் வரை எரிபொருள் மிச்சமாகும்.

சிக்னல்:

சிக்னல்களில் நிற்கும்போது 35 வினாடிகளுக்கு மேல் நிறுத்த வேண்டிய அவசியம் இருப்பின், கண்டிப்பாக எஞ்சினை ஆஃப் செய்து விடவும். இதனால், 4 சதவீதம் வரை எரிபொருளை மிச்சப்படுத்தலாம். குறிப்பாக, கார்கள் ஐடிலிங்கில் இருக்கும்போது ஒரு மணி நேரத்துக்கு ஒரு லிட்டர் எரிபொருள் செலவாகும் என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

ஏசி:

தேவையில்லாதபோது ஏசியை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஏசியால் எஞ்சினுக்கு கூடுதல் பளு ஏற்படுவதால் அதிக எரிபொருள் செலவாகும். ஏசியை தேவையானபோது மட்டும் பயன்படுத்தினால் 10 சதவீதம் அளவுக்கு எரிபொருளை மிச்சப்படுத்த முடியும்.

பத்திரமா பார்த்துக்குங்க:

கார் நிறுவனத்தின் கையேட்டில் கொடுத்துள்ளவாறு சரியான இடைவெளிகளில் காரை சர்வீஸ் செய்துவிடவும். எஞ்சின் ஆயில் மற்றும் டயர்களில் காற்றின் அழுத்தம் ஆகியவற்றை அவ்வப்போது செக்கப் செய்து விடவேண்டும். இதன்மூலம், 8 சதவீத எரிபொருளை மிச்சப்படுத்தலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, March 5, 2012, 14:59 [IST]
English summary
You drive any kind of car, chances are you can squeeze a bit more distance out of each litern of fuel. Today's petrol prices, an improvement of just one or two miles per liter can really savings your money. Here are given some fuel saving tips can help you improve your car's fuel economy and take some of the sting out of high fuel prices. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+