அடிக்கடி துடைப்பது மட்டும் போதாது!! காரில் இது எல்லாம் கரெக்ட்டா இருந்தால் நைட் டிரைவிங் சிறப்பாக அமையும்!

பகல் நேரங்களில் கார் ஓட்டுவது ஒரு விதமான ஜாலி என்றால், இரவு நேர கார் டிரைவிங் வேறொரு வகையான த்ரில்லை கொடுக்கக் கூடியது என்றுதான் சொல்ல வேண்டும். பகல் நேர பயணங்களின் போது தேவைப்படாமல் போகும் ஹெட்லைட்கள் இரவுநேர பயணங்களின் போது மிகவும் அவசியமாகின்றன.

இரவு நேரங்களில், நகர்புற சாலைகளில் கார் ஓட்டுவது பெரியதாக சவாலானதாக இருக்காது. ஏனெனில் தெரு விளக்குகளும், மற்ற விளக்குகளும் உதவியாக இருக்கும். ஆனால் நெடுஞ்சாலைகளிலும், மலைப்பிரதேச சாலைகளிலும், காரின் ஹெட்லைட் வெளிச்சம் போதவில்லையே என தோன்றும் அளவிற்கு அதிக வெளிச்சம் தேவைப்படும். காரின் ஹெட்லைட் வெளிச்சத்தை அதிகரிக்க சில எளிமையான டிப்ஸை இனி பார்க்கலாம்.

car headlight visibility improvement tips

ஹெட்லைட்களை சுத்தம் செய்தல்: இந்த உலகில் திறந்தவெளியில் வைக்கப்படும் எந்தவொரு பொருளின் மீதும் தூசிகள் படிவது சகஜமான ஒன்றுதான். இதில் கார் ஹெட்லைட்கள் மட்டும் என்ன விதிவிலக்கா. ஆதலால், ஹெட்லைட்களை பாதுகாக்க பொருத்தப்படும் கண்ணாடிகளின் மீது படியும் மண் துகள்கள், தூசி மற்றும் அழுக்குகளை அவ்வப்போது துடைக்கவும். முடிந்தால், வாரத்திற்கு ஒருமுறை சோப்பு நீர் கொண்டு ஹெட்லைட் கண்ணாடிகளை துடைக்கவும்.

பழைய ஹெட்லைட்களை மாற்றுதல்: சந்தையில் மற்ற கார் பாகங்களை போன்று, ஹெட்லைட்களும் புதிய புதிய தரத்தில் வந்துக் கொண்டிருக்கின்றன. அதற்காக அவ்வப்போது ஹெட்லைட்களை மாற்றிக் கொண்டு இருங்கள் என சொல்லவில்லை. ஹெட்லைட்டின் வெளிச்சம் போதவில்லை என தோன்றினாலோ அல்லது ஹெட்லைட்டின் பிரகாசம் மங்க தொடங்கினாலோ புதிய உயர் தரத்திலான ஹெட்லைட்களை வாங்கி பொருத்தலாம்.

car headlight visibility improvement tips

எல்இடி அல்லது எச்.ஐ.டி-க்கு ஹெட்லைட்களை அப்கிரேட் செய்யலாம்: எல்இடி மற்றும் எச்.ஐ.டி விளக்குகள் நன்கு பிரகாசமானவை. அதுமட்டுமின்றி, எல்இடி விளக்குகள் குறைந்த ஆற்றலிலேயே இயங்கக்கூடியவை. ஆதலால், பேட்டரிக்கு அதிகளவில் வேலை இருக்காது. ஆனால் எல்இடி அல்லது எச்.ஐ.டி விளக்குகளை பொருத்துவதற்கு முன்னர், கார்களில் எந்த அளவிற்கு ஒளி செறிவை கொண்ட ஹெட்லைட்களை உங்கள் பகுதியில் பயன்படுத்த வேண்டும் என்பதை ஆர்டிஓ மூலம் அறிந்துக் கொள்ளுங்கள்.

முறையாக ஹெட்லைட்களை பொருத்துவது: பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின் வெளிவருவதால், புதியதாக வாங்கப்படும் கார்களில் ஹெட்லைட்களின் பொசிஷனில் எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் நீங்கள் தனியாக ஹெட்லைட்களை மாற்றும்போது, அவை முறையாக பொருத்தப்பட்டு உள்ளனவா என்பதை சரிப்பார்ப்பது அவசியம். ஏனெனில், கோணலாக ஹெட்லைட்களை பொருத்தினால் ஒளி பிரகாசம் குறைவாக கிடைக்கும் என்பது மட்டுமின்றி, எதிர்வரும் வாகன ஓட்டிகளின் கண்களை கூசவும் வாய்ப்புள்ளது.

car headlight visibility improvement tips

கூடுதல் விளக்குகளை பொருத்துவது: ஏற்கனவே கூறியதுபோல், நெடுஞ்சாலைகளிலும், மலைப் பாதைகளிலும் கார் ஓட்டும்போது அதிக வெளிச்சம் தேவைப்படும். அதிக வெளிச்சம் என சொல்வதை விட, நாலாப்புறமும் வெளிச்சம் தேவைப்படும் என்று தான் சொல்ல வேண்டும். ஆதலால் அத்தகைய சூழலை சமாளிக்க கூடுதல் விளக்குகளை பொருத்தலாம். ஆனால் இதற்கு உங்கள் பகுதி ஆர்டிஓ அனுமதி அளிக்கிறதா என்பதை அறிந்துக் கொள்வது நல்லது.

காரின் மின்சுற்றை சரிப்பார்க்கவும்: காரின் ஹெட்லைட்கள் பிரகாசமாக ஒளிரவில்லை என்றால், பேட்டரியில் இருந்து ஆற்றலை கொண்டுவரும் காரின் மின்சுற்றில் ஏதேனும் பழுது ஏற்பட்டு இருப்பதற்கு கூட வாய்ப்புள்ளது. ஆதலால், கார் ஹெட்லைட்களின் ஒளி நாளுக்கு நாள் குறைந்து வருவதை அறிந்தால், காரின் பேட்டரி, வயரிங், மின்மாற்றி உள்ளிட்டவை சரியாக உள்ளனவா என்பதை ஆராயவும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நம் இந்திய சாலைகளில் எது எப்போது குறுக்கே வரும் என்றே கணிக்க முடியாது. இரவு நேரமாக இருப்பினும், நெடுஞ்சாலையில் திடீரென மாடு, நாய் போன்ற பிராணிகள் குறுக்கே வரலாம். இவ்வளவு ஏன், மனிதர்கள் கூட குறுக்கே வருவதற்கு வாய்ப்புள்ளது. ஆதலால், காரில் ஹெட்லைட்கள் போதிய தரத்தில் இருந்தாலே பாதி விபத்துகளை தடுத்து விடலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 22, 2023, 18:07 [IST]
English summary
Car headlight visibility improvement tips
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X