கார் விக்குறவங்களுக்கே இந்த விஷயம் தெரியாது! காரில் ஹெட்ரெஸ்ட்களை கழட்டவே கூடாது ஏன் தெரியுமா?

சிலர் வாகனம் ஓட்டும்போது காரில் டிரைவர் சீட்டில் உள்ள ஹெட் ரெஸ்ட்டை கழட்டி வைத்துவிட்டு வாகனம் ஓட்டுவார்கள். பலருக்கு அது தொந்தரவாக இருப்பதாக கருதி இதை கழட்டி வைத்து விடுவார்கள். இப்படியாக கழட்டி வைத்து விட்டு வாகனம் ஓட்டுவது சரியா இந்த ஹெட்ரெஸ்ட்டால் என்ன பயன்? ஏன் வழங்கப்படுகிறது? என்ற விரிவான முழுமையான தகவல்களை காணலாம் வாருங்கள்.

வாகனங்களில் டிரைவர் சீட் மற்றும் முன்பக்கம் உள்ள பயணி சீட்டிற்கு ஆகியவற்றிற்கு ஹெட்ரெஸ்ட் என்பது வழங்கப்பட்டிருக்கும். சிறிய ரக கார்களில் சீட்டு வடிவமைக்கப்படும்போதே ஹெட்ரெஸ்ட்டும் சேர்த்து வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் சில உயர்ரக கார்களில் ஹெட்ரெஸ்ட்டை அட்ஜஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டிருக்கும். இது தனியாக கழட்டவும் வாய்ப்பு இருக்கும்0 இப்படியான கார்களில் சிலர் ஹெட்ரெஸ்ட்டுகளை கழட்டி வைத்துவிட்டு வாகனத்தை பயன்படுத்துவார்கள்.

Car Head Rest Tips

அவர்களது உடலமைப்புக்கும் டிரைவிங் பொசிஷனிற்க்கும் இந்த ஹெட்ரெஸ்ட் என்பது மிகவும் தொந்தரவாக இருப்பதாக கருதுவார்கள். இப்படியாக ஹெட் ரெஸ்ட்டுகளை கழட்டி வைத்து விட்டு வாகனம் ஓட்டலாமா என்று கேட்டால் நிச்சயம் கூடாது என்று தான் சொல்லுவோம். நீங்கள் தலையை சாய்த்துக் கொள்வதற்கான பகுதி மட்டுமல்ல இது ஒரு பாதுகாப்பு அம்சமாகவே இருக்கிறது.

விபத்து நேரங்களில் டிரைவர் மற்றும் பயணிகள் சீட்டில் அமர்ந்திருப்பவர்களின் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்படுவதை இது பாதுகாக்கிறது. கழுத்து பகுதியில் எலும்பு உடைந்தால் உயிரே போய்விடும் அதனால் உங்கள் உயிரையே இது ஹெட்ரெஸ்டில் தான் இருக்கிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது. இதனால் ஒரு வாகனத்திற்கு ஹெட்ரெஸ்ட் என்பது மிகவும் முக்கியமான கருவியாக இருக்கிறது.

Car Head Rest Tips

இது மட்டுமல்ல இது ஹெட்ரெஸ்ட் என்பது டிரைவரை சோர்வடையும் போதும் அவரை விழிப்புடன் வைத்திருக்க உதவுகிறது. வாகனம் ஓட்டும் போது டிரைவருக்கு சோர்வு ஏற்பட்டால் அவர் தலை தானாக பின்பக்கம் செல்லும் பின்பக்கம் ஹெட் ரெஸ்ட் இருந்தால் அது தலை எப்பொழுதும் நேராக வைத்திருக்க உதவும். இதனால் அவர் வாகனம் ஓட்டும் போது தூங்குவது என்பது தவிர்க்கப்படும் இதனால் விபத்து அபாயம் குறையும்.

ஹெட்ரெஸ்டை பொறுத்தவரை இரண்டு விதமாக இருக்கிறது. ஃபிக்ஸடாக இருக்கும் ஹெட்ரெஸ்ட் மற்றும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட். ஃபிக்ஸடாக இருக்கும் ஹெட்ரெஸ்ட்டில் எந்த விதமான மாற்றத்தையும் நாம் செய்ய முடியாது. இது பெரும்பாலும் குறைந்த விலை கார்களில் இருக்கும். அதே நேரம் அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட் என்பது உங்கள் தலையின் உயரத்திற்கு ஏற்ப, உங்கள் வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியும். இது அதிக விலை கொண்ட கார்களில் காண முடியும்.

Car Head Rest Tips

இதனால் அட்ரஸ் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் கொண்ட கார்களில் ஹெட்ரெஸ்டை தனியாக கழட்டும் வாய்ப்பு இருக்கிறது. இப்படியாக ஹெட்ரெஸ்ட்டை தனியாக கழட்டி விட்டு வாகனம் ஓட்ட முயற்சி செய்யாதீர்கள். இது முற்றிலும் தவறான பழக்கமாகும். வெகு சிலர் இப்படியான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஹெட்ரெஸ்ட் என்பது தொந்தரவாக இருப்பதால் இதை கழட்டி விடுகின்றனர். இது தொந்தரவு இல்லை இது உங்களுக்கான பாதுகாப்பு கருவி.

நீங்க காரில் பயணிக்கும் போது இந்த ஹெட்ரெஸ்ட்டை கழட்டி வைத்துவிட்டு பயணித்தால் உங்கள் பாதுகாப்போடு நீங்கள் விளையாடுகிறீர்கள் என அர்த்தம். உங்கள் பாதுகாப்பை கவனமாக கையாள வேண்டும். கார்களை இப்படியான பல பாதுகாப்பு கருவிகள் இருக்கிறது. அதில் ஹெட்ரெஸ்ட்டும் மிக முக்கியமான பாதுகாப்பு கருவி. இது இல்லை என்றால் விபத்து நேரங்களில் உங்கள் உயிரே போக கூட வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக தான் சிறிய கார்களில் எப்பொழுதும் எடுக்க முடியாதபடி ஃபிக்ஸட் ஹெட்ரெஸ்ட்களை வழங்குகிறார்கள். ஆனால் காஸ்ட்லியான கார்களில் பயணிகளுக்கு சற்று சொகுசு வசதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக ஹெட்ரெஸ்ட் அட்ஜஸ்ட் செய்யும் வகையில் அதை வடிவமைத்துள்ளார்கள். ஆனால் அதை நீக்குவது என்பது சுத்தம் செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள ஆப்ஷன்தான். அதை நீக்கிவிட்டு பயணம் செய்வது என்பது ஆபத்தானது தான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன ஓட்டிகள் எந்த அளவுக்கு சாலை விதிமுறைகளையும் பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டுமோ அதே நேரம் காருக்குள் இருக்கும்போதும் பாதுகாப்பு அம்சங்கள் எப்படி வேலை செய்கிறது. அதற்கு நாம் எப்படியான செயல்களை எல்லாம் செய்யக்கூடாது, எப்படியான செயல்களை எல்லாம் செய்யலாம்

என்பதை அறிந்து நாம் நமது வாகனங்களை ஓட்ட வேண்டும்.என்னதான் நீங்கள் சாலை பாதுகாப்பை பின்பற்றி வாகனம் ஓட்டினாலும் உங்கள் வாகனம் விபத்தில் சிக்க வாய்ப்பு இப்படி விபத்தில் சிக்கும்போது இந்த பாதுகாப்பு கருவிகள் தான் உங்கள் உயிரை பாதுகாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 19, 2023, 17:51 [IST]
English summary
Car headrest tips avoid neck injury
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X