காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
இந்தியாவில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக பயணிக்க கார்தான் மிக சுலபமான வாகனமாக இருக்கிறது. ஆனால் காரில் பயணித்தால் கார் விபத்திற்கு உள்ளாகும் ஆபத்து இருப்பதால் ஒவ்வொரு வாகனமும் 3வதுபார்ட்டி இன்சூரன்ஸ் கட்டாயமாக எடுக்க வேண்டுமென விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காருக்கான இன்சூரன்ஸ் வரும்போது சிலர் தேவை இல்லாமல் பணத்தை இழக்க நேரிடும். இதையெல்லாம் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்ற டிப்ஸ்களை தான் இங்கே காணப் போகிறோம்.
ஒப்பீடு: வாகனத்துக்கான இன்சூரன்ஸ் இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இப்படியாக நீங்கள் இன்சூரன்ஸ் எடுக்கும்போது ஒரு நிறுவனத்திற்கும் மற்றொரு நிறுவனத்திற்கும் உள்ள இன்சூரன்ஸ் பாலிசியை ஒப்பிட்டு செய்ய வேண்டும். இதன் மூலம் எந்த பாலிசி எடுத்தால் உங்களுக்கு லாபம் என்பதை நீங்கள் சுலபமாக புரிந்து கொள்ள முடியும். இதனால் நீங்கள் குறைந்த விலையில் இன்சூரன்ஸ் எளிதாக தேர்வு செய்யலாம்.

என்சிபி சேர்க்கை: தொடர்ந்து வாகனத்திற்கான இன்சூரன்ஸ் எடுத்துக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இன்சூரன்ஸ் எடுத்து அந்த இன்சூரன்ஸ் கிளைம் செய்யாமல் வைத்திருந்தால் புதிதாக இன்சூரன்ஸ் எடுக்கும்போது இதற்கு முன்னர் இன்சூரன்ஸ் கிளைம் செய்யப்படவில்லை என்பதை குறிப்பிட்டால் குறிப்பிட்ட அளவு ப்ரீமியம் தொகை குறைக்கப்படும். இப்படியாக நீங்கள் இன்சூரன்ஸ் எடுக்கும்போது இந்த என்சிபி-ஐ சேர்த்து இன்சூரன்ஸ் இருக்கு அப்ளை செய்யுங்கள்.
கழிவு: இன்சூரன்ஸ் எடுக்கும்போது குறிப்பிட்ட வாகனம் விபத்தில் சிக்கினால் அதற்காகவும் செலவில் எவ்வளவு பணத்தை கழிவு செய்து இன்சூரன்ஸ் நிறுவனம் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என வாடிக்கையாளர் தேர்வு செய்து கொள்ளலாம். அதிகமான கழிவு கொடுத்தால் இன்சூரன்ஸின் பிரீமியம் தொகை குறைய அதிகமான வாய்ப்புகள் உள்ளன. பெரும்பாலும் பழைய வாகனங்களை பயன்படுத்துவார்கள். இப்படியாக அதிக கழிவு கொடுத்து இன்சூரன்ஸ் தேர்வு செய்வார்கள்.

மாடிஃபிகேஷன்களை தவிர்க்கவும்: சிலர் தங்கள் கார் பார்க்க லுக்காக இருக்க வேண்டும் என்பதற்காக சில வெளிமார்க்கெட்டில் கிடைக்கும் அக்சஸரீஸ்களை வாங்கி கார்களில் பூர்த்தி இருப்பார்கள். இதனால் கார் பார்க்க லூக்காவும் புதிதாகவும் இருக்கும் என்பதற்காக இதை செய்திருப்பார்கள். ஆனால் இப்படியாக செய்வதால் இன்சூரன்ஸ் பிரீமியம் அதிகமாக வாய்ப்புகள் உள்ளன. இதனால் கார்களில் மாடிஃபிகேஷன் செய்வதை தவிர்க்க வேண்டும்.
ஒழுங்கான டிரைவிங் ரெக்கார்டு: நீங்கள் சிறப்பாக டிரைவிங் செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கான கார்ஸ் இன்சூரன்ஸ் ப்ரீமியம் தொகை என்பது குறைக்கப்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன. சிலர் தொடர்ந்து சாலை விதிமுறை மீறல்களை ஈடுபட்டு வருவார்கள். அவர்களுக்கு அதிகமான பிரிமியம் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவது சிக்னலில் நிற்காமல் செல்வது உள்ளிட்ட ஆபத்து ஏற்படுத்தும் சாலை விதிமுறை மீறல்களில் ஈடுபவர்களுக்கு இன்சூரன்ஸ் பிரிமியம் அதிகமாகும்.

செக்யூரிட்டி கருவி பொருத்துதல்: உங்கள் வாகனம் திருடு போகாமல் இருப்பதற்காக வெளிமார்க்கெட்டில் பல்வேறு விதமான செக்யூரிட்டி கருவிகள் இருக்கிறது. முக்கியமாக ஆன்டி-தெஃப்ட் அலாரம், ஸ்டேரிங் லாக் உள்ளிட்ட கருவிகள் இருக்கிறது. இந்த கருவிகளை உங்கள் வாகனங்களில் பொறுத்து இருந்தால், நீங்கள் அதை காண்பித்து இன்சூரன்ஸ் பிரீமியத்தை குறைத்துக் கொள்ள முடியும். இந்த கருவிகள் இல்லை என்றால் இன்சூரன்ஸ் பிரீமியம் அதிகமாக வாய்ப்புகள் உள்ளன.
நேரத்திற்கு பாலிசியை புதுப்பித்துக் கொள்ளுங்கள்: ஏராளமானோர் வாகனத்தின் பாலிசி முடிந்த பின்பே அடுத்த புதுப்பிப்பதற்காக செல்வார்கள். ஆனால் நீங்கள் வாகனத்தின் பாலிசி முடிவதற்கு முன்பாகவே புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கினால் குறிப்பிட்டு தேதிக்கு முன்பே பாலிசி புதுப்பிக்கப்பட்டாலும், இன்சூரன்ஸிற்கான ப்ரீமியம் தொகை என்பது குறைய வாய்ப்புகள் உள்ளது.
நீண்ட கால பாலிசி: ஒரு முறை இன்சூரன்ஸ் வாங்கும் போது அதை ஓர் ஆண்டுக்கு இல்லாமல் நீண்ட காலத்திற்கான இன்சூரன்ஸ் பாலிஸியாக தேர்வு செய்து வாங்கினால் அத்தனை ஆண்டுக்கும் சேர்ந்து ஒரே இன்சூரன்ஸ் பணமாக நீங்கள் செலுத்த வேண்டியது இருக்கும். ஆனால் மொத்தமாக நீங்கள் பணம் செலுத்துவதால் குறைந்த பிரிமியம் செலுத்தினால் போதும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதனால் நீங்கள் அடுத்த முறை உங்கள் வாகனத்திற்கான இன்சூரன்ஸ் பாலிசியை எடுக்கும் போது மேலே சொன்ன டிப்ஸ்களை பயன்படுத்தி குறைந்த பிரிமியத்தில் இன்சூரன்ஸ் பாலிசியை எடுத்துக் கொள்ளுங்கள் நீங்கள் நேரடியாக இன்சூரன்ஸ் வழங்கும் முகவரி சந்தித்தும் பாலிசியை எடுக்கலாம் அல்லது ஆன்லைன் மூலமாக கூட பாலிசி எடுக்கலாம்


Click it and Unblock the Notifications









