கடன் வாங்கி கார் வாங்கப்போறீங்களா? இது தெரியாம காரை வாங்கிடாதீங்க!

இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் என்பதால் இந்த நேரத்தில் வாகன விற்பனை என்பது அதிகமாக இருக்கும். இந்நிலையில் உங்களில் பலர் புதிதாக வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கலாம். இப்படியாக நீங்கள் வாகனம் வாங்கும் போது பெரும்பாலும் கடன் வாங்கி தான் வாகனம் வாங்குவார்கள். இப்படியாக எவ்வளவு கடன் வாங்கினால் அதற்கு எவ்வளவு இஎம்ஐ செலுத்த வேண்டும் என்ற விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.

இந்தியாவில் தற்போது தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு பண்டிகை காலம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பல்வேறு விதமான பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த காலகட்டத்தில் தான் பலர் புதிதாக கார் மற்றும் டூவீலர் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். இந்தியாவில் இந்த காலகட்டத்தில் விற்பனை அதிகரிக்கும் என்பதற்காக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் பல்வேறு விதமான தள்ளுபடிகளையும் அறிவித்து வருகின்றன.

car loan emi

இதன் காரணமாகவும் இந்தியாவில் அதிக அளவிலான வாகனங்கள் விற்பனையாகி வரும் நிலையில், பல கடன் வாங்கி தான் வாகனங்களை வாங்குகிறார்கள். இந்நிலையில் அவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் விதமாக புதிதாக கார் வாங்கினால் அவர்கள் எவ்வளவு கடன் வாங்க வேண்டும்? அதற்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்ற விபரங்களை பார்ப்போம்.

ஒரு கார் வாங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ரூபாய் 10 லட்சமாவது கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை, தற்போது இருக்கிறது. இன்று இந்தியாவில் கார்களுக்காக வாங்கப்படும் கடன்கள் 8.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை வட்டி விகிதங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை கடன் வழங்கும் திட்டங்கள் இருக்கின்றன.

car loan emi

அதன்படி ரூபாய் 10 லட்சம் கடனை ரூபாய் 8.5 சதவீதத்தில் வாங்கினால் 3 திட்டத்தில் ரூபாய் 31,568 இஎம்ஐ ஆகவும், 4 ஆண்டு திட்டத்தில் ரூபாய் 24,648 இஎம்ஐ அகவும், ஐந்தாண்டு திட்டத்தில் ரூபாய் 20,517 இஎம்ஐ ஆகவும், 6 ஆண்டு திட்டத்தில் ரூபாய் 17,778 இஎம்ஐ ஆகவும் 7 ஆண்டு திட்டத்தில் ரூபாய் 15,836 இஎம்ஐயாகவும் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

அடுத்ததாக 9 சதவீத வட்டி விகிதத்தில் நீங்கள் ரூபாய் 10 லட்சம் கடன் வாங்கினால் அது 3 ஆண்டு திட்டத்தில் ரூபாய் 31,800 இஎம்ஐ அகவும், 4 ஆண்டு திட்டத்தில் ரூபாய் 24,885 இஎம்ஐ ஆகவும் ஐந்தாண்டு திட்டத்தில் ரூபாய் 20,758 இஎம்ஐ ஆகவும், 6 ஆண்டு திட்டத்தில் ரூ 18,026 இஎம்ஐ ஆகவும் 7 ஆண்டு திட்டத்தில் ரூ 16,089 இஎம்ஐ ஆகவும் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

car loan emi

இதுவே 9.5% வட்டி வீதத்தில் வாங்கும் போது ரூபாய் 10 லட்சத்திற்கு மூன்றாண்டு திட்டத்தில் ரூபாய் 32,033 இஎம்ஐ ஆகவும் 4 ஆண்டு திட்டத்தில் ரூபாய் 25,123 இஎம்ஐ ஆகவும், 5 திட்டத்தில் ரூபாய் 21,002 இஎம்ஐ அகவும், 6 ஆண்டு திட்டத்தில் ரூ 18,275 இஎம்ஐ ஆகவும், 7 ஆண்டு திட்டத்தில் ரூபாய் 16,344 இஎம்ஐ ஆகவும் செலுத்த வேண்டும்.

அடுத்ததாக ரூபாய் 10 லட்சம் கடனை 10 சதவீத வட்டியில் வாங்கும் போது மூன்றாண்டு திட்டத்திற்கு ரூபாய் 32,267 இஎம்ஐ ஆகவும், 4 ஆண்டு திட்டத்திற்கு ரூபாய் 25,363 இஎம்ஐ ஆகவும், ஐந்தாண்டு திட்டத்திற்கு ரூபாய் 21,247 இஎம்ஐ ஆகவும், 6 ஆண்டு திட்டத்திற்கு ரூ 18,526 இஎம்ஐ அகவும், 7 ஆண்டு திட்டத்திற்கு ரூ 16,601 இஎம்ஐ ஆகவும் செலுத்த வேண்டும்.

இந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார் வாங்க நினைக்கும் பலருக்கும் இந்த தகவல் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். 10 லட்ச ரூபாய் கடன் வாங்கி கார் வாங்கினால் பல்வேறு விதமான வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது. இது ஒவ்வொரு நிறுவனத்திற்கு நிறுவனமும் தனிநபரின் சிபில் ஸ்கோர் வைத்தும் மாறுபடுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகனங்கள் வாங்குவதற்கு வாகனங்களுக்கான கடன் வழங்கப்பட்டது முதல் தான் அதிக ஆர்வம் மக்கள் மத்தியில் ஏற்பட்டது. இதன்பிறகு தான் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் இந்தியாவில் விற்பனையாக துவங்கின. இது இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய துணையாக இருந்தது. தற்போது இந்த வட்டி விகிதம் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, October 11, 2024, 11:28 [IST]
English summary
Car loan emi calculator for rs 10 lakh
மேலும்... #auto tips #india #diwali
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X