தென் மேற்கு பருவமழை ஸ்டார்ட் ஆகிடுச்சு! தமிழ்நாட்டில் கார் வச்சிருக்குறவங்க எல்லாம் உஷாராகிடுங்க!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்த மழையால் உங்கள் காரின் பெயிண்ட் பாதிக்கப்பட அதிகம் வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் உங்கள் வாகனத்தின் வெளிப்புறத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது அவசியம். மழைக்காலத்தில் உங்கள் காரின் பெயிண்ட்டை சிறந்த நிலையில் வைத்திருக்க சில நடைமுறை குறிப்புகள் உள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை தான் நாம் இங்கே காணப்போகிறோம்.

மழைக்காலத்தில், உங்கள் காரின் மேற்பரப்பில் தூசி மற்றும் அழுக்கு படிந்துவிடும். ரெகுலாக காரை கழுவுவதால் இந்த தூசுகள் படியாமல் தடுக்கலாம். மைல்டு கார் ஷாம்பூவைப் பயன்படுத்தி காரை கழுவ வேண்டும் இது மட்டுமல்ல நேரடி சூரிய ஒளியில் உங்கள் காரைக் கழுவுவதைத் தவிர்க்கவும்.

car maintenance

நல்ல தரமான வேக்ஸ் பயன்படுத்துவது மூலம் உங்கள் காரின் பெயிண்ட் மீது ஒரு பாதுகாப்பு லேயரை உருவாக்குகிறது. இந்த லேயர் நீர், அழுக்கு மற்றும் பிற அசுத்தங்கள் வாகனத்தின் மேற்பரப்பில் ஒட்டிக்கொள்வதைத் தடுக்கிறது. வேக்ஸிங் மூலம் சிறந்த பலன்களை பெற சில மாதங்களுக்கு ஒருமுறை வேக்ஸிங் செய்ய வேண்டும்.

உங்கள் காரை நிறுத்தும்போது, ​​மழை, தூசி மற்றும் அழுக்கு ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க ஒரு கவரை பயன்படுத்தவும். நேரடியாக மழை தண்ணீர் கார் மீது படுவதை தவிர்க்க, இந்த கவர் நன்றாகப் பயன்படும். இது மட்டுமல்ல உங்கள் கார் மீது வேறு ஏதாவது பொருட்கள் விழுந்து சேதமாவதும் தவிர்க்கப்படும்

car maintenance

முடிந்தவரை, உங்கள் காரை சுற்றிலும் கவர் செய்யப்பட்ட இடத்தில் பார்க் செய்யவும். இது மழை நீரின் நேரடி தாக்கதிலிருந்தும் மற்றும் பெயிண்ட்டை கீறக்கூடிய குப்பைகள் காரின் மீது விழுவதிலிருந்தும் உங்கள் காரை பாதுகாப்பாக வைத்திருக்கும். இதனால் தேவையில்லாமல் உங்கள் கார் பாதிப்படைவதை தவிர்க்க முடியும்.

பருவமழை காலங்களில், குறிப்பாக பழைய கார்களில் ஆங்காங்கே துருப்பிடிக்கும் அபாயம் இருக்கிறது. துருப்பிடித்ததற்கான அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை தவறாமல் அவ்வப்போது சரிபார்த்து உடனடியாக சரி செய்ய வேண்டும். துரு ஏற்படுவதை தடுக்கும் ஸ்ப்ரேக்களைப் பயன்படுத்தினால் துரு உருவாவதைத் முற்றிலுமாக தடுக்க உதவும்.

car maintenance

உங்கள் காரை நீங்கள் கழுவிய பிறகோ அல்லது மழையில் நனைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட பிறகோ, உங்கள் காரை நன்கு துடைத்துவிட வேண்டும். இல்லை என்றால் நீர் துளிகள் உங்கள் வாகனத்தின் படிந்து நின்று காலப்போக்கில் வாகனத்தின் கலரை சேதப்படுத்தும். நீர் துளிகளை துடைக்க சுத்தமான, உலர்ந்த துணியைப் பயன்படுத்தவும்.

மழைக்காலத்தில் உங்கள் காரின் அடிப்பகுதி துருப்பிடிக்க வாய்ப்புள்ளது. இதனால் அவ்வப்போது பாடியின் அடிப்பகுதியை தவறாமல் பரிசோதித்து, சேறு அல்லது அழுக்குகளை அகற்றி அதை சுத்தம் செய்ய வேண்டும். துருபடிக்காத கோட்டிங்கை பயன்படுத்துவதால் அது உங்கள் காருக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்க முடியும்.

பாலிஷிங் செய்தல் உங்கள் காரின் பெயிண்டின் பளபளப்பை அதிகரிக்கலாம். இது காரின் தோற்றத்திற்கு கூடுதல் பாதுகாப்பை சேர்க்கும். மேலும் இது உங்களையே அறியாமல் ஏற்படும் சிறிய கீறல்களை அகற்ற இது பெரிதும் உதவுகிறது. இது மட்டுமல்லாமல் உங்கள் காரின் கலரும் எப்பொழுதும் புதியதாக இருக்கும்.

ஜன்னல்கள் மற்றும் கதவுகளைச் சுற்றியுள்ள ரப்பர் ஸ்டிரிப்களில் ஏதேனும் தேய்மானம் உள்ளதா எனப் பார்க்கவும். சேதமடைந்த ஸ்டிரிப்கள்ள் தண்ணீரை காரின் உள்ள செல்ல அனுமதிக்கும், இதனால் காரின் உட்புறம் பெரிய அளவில் பாதிக்கிறது. தேய்ந்து போன ஸ்டிரிப்களை உடனடியாக மாற்றவும். இல்லை என்றால் உங்களுக்கு இது அதிக செலவுகளை இழுத்துவிட்டுவிடும்

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், தமிழ்நாட்டில் ஏற்போது பெய்துவரும் தென்மேற்கு பருவமழையில் இருந்து உங்கள் காரின் பெயிண்ட்டைப் பாதுகாக்கலாம். வழக்கமான பராமரிப்பு மற்றும் சரியான நேரத்தில் நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் உங்கள் வாகனத்தை பல ஆண்டுகளாக புதியதாக வைத்திருக்க உதவும்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 8, 2024, 13:52 [IST]
English summary
In Tamil Nadu's harsh monsoon season, maintaining your car's exterior is crucial. Learn how regular washing, waxing, using a car cover, and other steps can protect your car's paint.
மேலும்... #car tips #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X