முதல்முறையாக கார் வாங்கியுள்ளீர்களா? மெயின்டெனன்ஸுக்கு இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க... அதுபோதும்!!
நம் அனைவரும் புதியதாக ஒரு காரை வாங்க வேண்டும் என்பது வாழ்நாள் இலட்சியமாக இருக்கலாம். இதனை சிலர் நிறைவேற்றி இருப்பீர்கள், சிலர் இன்னமும் கனவு கண்டு கொண்டுதான் இருப்பீர்கள். இது அவரவர் பொருளாதார சூழ்நிலையை பொறுத்தது. ஏனெனில் பொதுவாகவே, காரை வாங்குவது என்பதும், அதனை முறையாக பயன்படுத்துவது என்பதும் செலவு மிகுந்த விஷயமாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, காரை வாங்குவதை காட்டிலும் அதனை முறையாக பராமரித்து பயன்படுத்துவது அதிக செலவை உருவாக்கக்கூடியது என மற்றவர்கள் கூறி கேட்டீருப்பீர்கள். இதனால் முதல்முறையாக காரை வாங்கும்போது எவ்வாறு காரை முறையாக பராமரிப்பது என்பதில் சிலருக்கு சந்தேகமும், சிறிது பயமும் இருக்கலாம். பயப்பட வேண்டாம், அத்தகையவர்களுக்காகவே 5 கார் மெயின்டெனன்ஸ் டிப்ஸை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

மேனுவல் புத்தகத்தை படிக்கவும்
புதியதாக காரை வாங்கிய உடன், அந்த காரை இயக்குவதற்கு முன் காருடன் வழங்கப்பட்டுள்ள மேனுவல் புத்தகத்தை விரிவாக படித்து பார்த்துவிடுவது நல்லது. மேனுவல் புத்தகத்தை படிப்பதால் என்ன நடந்துவிட போகிறது என நீங்கள் நினைக்கலாம். ஆனால், காரை பற்றிய ஒவ்வொரு புள்ளி விபரங்களும் மேனுவல் புத்தகத்தில் தான் இடம் பெற்றிருக்கும். இந்த புத்தகத்தை படிப்பதன் மூலமாக காருடன் உங்களால் விரைவாக பிணைப்பை ஏற்படுத்தி கொள்ள முடியும்.
பெயிண்ட்டை பாதுகாக்கவும்
காரில் கீறல் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட, நீங்கள் சற்று தூரத்தில் இருந்து காரை பார்த்தீர்கள் எனில், உங்களது கண்ணுக்கு கார் தெரியாது, அந்த கீறல் தான் தெரியும். அதிலிலும் கருப்பு அல்லது சிவப்பு நிற பெயிண்ட்டில் காரை வாங்குனீர்கள் எனில், கீறலின் புலத்தன்மையை பற்றி சொல்லவே வேண்டாம். இதனை தவிர்க்க, அவ்வப்போது காருக்கு தரமான செராமிக் கோட்டிங்கை கொடுத்துவிடுவது நல்லது.

ஆஃப்டர் மார்க்கெட் ஆக்ஸஸரீகள் தேவையா?
ஆஃப்டர் மார்க்கெட் ஆக்ஸஸரீகள் காருக்கு தேவையா? இல்லையா? என்பதை வாங்குவதற்கு முன் ஒன்றுக்கு பலமுறை நன்றாக யோசித்து முடிவெடுங்கள். ஆஃப்டர் மார்க்கெட் ஆக்ஸஸரீகள் என்பது காரை வாங்கிய பின்னர் உதிரி பாக சந்தையில் இருந்து நாம் வாங்கி பொருத்தும் ஆக்ஸஸரீகள் ஆகும். இத்தகைய ஆக்ஸஸரீகளை பொருத்தினால் இன்ஸ்சூரன்ஸை பெறுவதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
ஆரம்பத்தில் மெதுவாக ட்ரைவ் செய்யவும்
முதல்முறையாக கார் வாங்கியுள்ளீர்கள் என்றாலும் சரி அல்லது ஏற்கனவே காரை வைத்துள்ளீர்கள் என்றாலும் சரி, புதிய காரை சில மாதங்களுக்கு மெதுவாகவே ட்ரைவ் செய்ய பாருங்கள். ஏனெனில் என்ஜின், கியர்பாக்ஸ், சஸ்பென்ஷன் உள்ளிட்ட காரின் முக்கிய இயந்திர பாகங்கள் அனைத்தும் உங்களது டிரைவிங் ஸ்டைலிற்கு ஏற்ப தகவமைத்து கொள்ள சிறிது காலத்தை எடுத்து கொள்ளும்.

சரியான நேரத்தில் சர்வீஸ் செய்யவும்
காரை மேனுவல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால இடைவெளியில் சர்வீஸ் செய்தல் வேண்டும். முக்கியமாக காரின் டயர்களை அவ்வப்போது மாற்றிவிடுங்கள். ஏனெனில் மற்ற பாகங்களை போன்று கார் விபத்தில் சிக்காமல் இருக்க டயர்கள் தரமானவைகளாக இருத்தல் அவசியம் ஆகும். டயர்கள் மட்டுமின்றி, வேறெந்த பாகத்தையும் பழுதானது போல் உணர்ந்தால் உடனடியாக மாற்றிவிடுவது நல்லது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
ஏற்கனவே கூறியதுபோல், புதியதாக காரை வாங்குவதை காட்டிலும் அதனை முறையாக பராமரித்தல் மிகவும் அவசியம் ஆகும். அதிலிலும் குறிப்பாக, முதல்முறையாக காரை வாங்குவோர் சற்று கூடுதல் கவனத்துடனும், முன்னெச்சரிக்கை உடனும் இருத்தல் வேண்டும். இதற்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள 5 டிப்ஸை பின்பற்றுவது மட்டுமின்றி, ஏற்கனவே கார்களை பயன்படுத்தி வருவோரிடம் அவ்வப்போது பரிந்துரைகளை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications









