காரை கழுவி சுத்தமா வைக்கலேன்னா மைலேஜ் குறையுமா? இது என்னங்க புது கதையா இருக்குது!

இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 100க்கும் அதிகமான விலையில் தான் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து பெட்ரோல் வாகனங்களை இயக்க வேண்டும் என்றால் நல்ல மைலேஜ் உள்ள வாகனங்களை இயற்றினால் தான் கட்டுபடியாகும். குறைவான செலவில் பயணம் செய்ய நல்ல மைலேஜ் உள்ள வாகனங்கள் தேவை.

நீங்கள் உங்கள் வாகனத்தை நல்ல மைலேஜ் தரும் வாகனமாக வைத்திருக்க வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் காரை தினமும் சுத்தப்படுத்தி கிளீனாக வைத்திருக்க வேண்டும் என சொன்னால் உங்களுக்கு எப்படி தோன்றும்? காரை சுத்தப்படுத்தி கிளீனாக வைத்திருந்தால் காரின் லுக் நன்றாக இருக்கும். இது உங்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் இப்படி சுத்தப்படுத்தி கிளீனாக வைத்திருந்தால் காரின் மைலேஜ் அதிகரிக்கும் என சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

Car Mileage Tips

ஆம் நீங்கள் காரை சுத்தப்படுத்தி கிளீனாக வைத்திருந்தால் காரின் மைலேஜ் அதிகரிக்கும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்காவில் மித்பஸ்டர் என்ற ஒரு நிறுவனத்தின் சார்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் ஒரே மாதிரியான இரண்டு விதமான கார்கள் பயன்படுத்தப்பட்டன. அதாவது ஒரே நிறுவனத்தின் ஒரே மாடல் கார்கள் ஒன்று சுத்தமாகவும் மற்றொன்று அழுக்கு நிறைந்ததாகவும் கொண்டு பயன்படுத்தப்பட்டன.

இந்த காரை ஒரே மாதிரியான ஸ்கில் கொண்ட டிரைவர்கள் இயக்கினார்கள். இந்த இரு கார்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பயணத்தை மேற்கொண்டது ஒரே மாதிரியான சாலைகளில் பயணித்தனர். ஒரே அளவிலான தூரத்தை பயணித்தனர்.ஒரு மாதிரியான கால சூழ்நிலைகளில் இருந்தன. இப்படியாக அனைத்தும் ஒரே மாதிரியாக இந்த இரு கார்களும் பயணிக்கப்பட்டு நீண்ட நாட்களாக இந்த சோதனை நடத்தப்பட்டது.

Car Mileage Tips

இதில் சுத்தமாக உள்ள கார் ஒவ்வொரு முறை பயணத்திற்கு பிறகும் சுத்தப்படுத்தப்பட்டு கிளீனாக வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அழுக்கு நிறைந்த கார் எந்தவித சுத்தப்படுத்தலும் இல்லாமல் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு மட்டுமே வந்தன. அது சுத்தப்படுத்துவதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இயற்கையாக எப்படி இருக்குமோ அப்படியாகவே இருந்து வந்தது. இந்நிலையில் இந்த இரு கார்களின் மைலேஜ் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டது.

இதில் இரு கார்களுக்கும் பெட்ரோலுக்காக செலவு செய்தது இரு வாகனங்களும் எவ்வளவு தூரம் பயணித்துள்ளது என்பதை கணக்கிட்டு ஒப்பிட்டு பார்க்கும்போது காரை கழுவி சுத்தமாக வைத்திருந்த கார் அமெரிக்காவில் உள்ள ஒரு கேலன் பெட்ரோலுக்கு 26 மைல் மைலேஜ் வழங்கி உள்ளது. இதுவே அசுத்தமான கார் அமெரிக்காவில் உள்ள ஒரு கேலன் பெட்ரோலுக்கு 24 மைல் மைலேஜ் வழங்கி உள்ளது.

இதற்கான காரணம் என்ன என ஆய்வு செய்த போது தான் பல முக்கியமான தகவல் நமக்கு கிடைத்துள்ளன. ஒரு கார் என்பது அதன் வடிவமைப்பில் இருந்தே மைலேஜ் என்பது நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு கார் நல்ல மைலேஜ் தரவேண்டும் என்பதற்காக கார் வடிவமைப்புவாளர்கள் காரின் டிசைனை வடிவமைப்பு செய்கிறார்கள். கார் வேகமாக செல்லும்போது கார் காற்றை கிழித்துக்கொண்டு போகும்போது காரின் வேகத்தை குறைக்காமல் இருப்பதற்காக சில வடிவமைப்புகள் இருக்கும்.

காரில் உள்ள சின்ன சின்ன வடிவமைப்புகள் கூட அதற்கு பின்னால் ஒரு காரணத்துடன் தான் வைக்கப்பட்டிருக்கும். முக்கியமாக ஏரோ டைனமிக்ஷை மிக முக்கியமான காரணமாக வைத்து தான் இது வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த நேரத்தில் காரில் அதிக அழுக்கு மற்றும் தூசி படரும் போது இந்த டிசைன் வடிவமைப்பு அதற்கான வேலையை செய்யாமல் போகும். நீண்ட நாட்களாக இது தொடரும்போது இது நேரடியாக மைலேஜை பாதிக்கும்.

இப்படியாக காரை அசுத்தமாக வைத்திருந்தால் உங்கள் காரின் மைலேஜ் நேரடியாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுவே காரை நீங்கள் அவ்வப்போது சுத்தப்படுத்தி கிளீனாக வைத்திருந்தால் இந்த சின்ன சின்ன விஷயங்கள் கூட உங்களுக்கு கை கொடுத்து நீண்ட நாட்களாக வாகனம் ஓட்டும்போது உங்களுக்கு நல்ல மைலேஜ் கிடைக்கும் வகையில் இந்த கார் இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் உள்ள வாகன ஓட்டிகள் பலர் தங்கள் காரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் அதைப் பற்றி கவலைப்படாமல் இருக்கிறார்கள். இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கிறது என்பதை பலருக்கும் தெரியாத ஒரு அதிர்ச்சியான உண்மை தான். அதனால் நீங்கள் உங்கள் வாகனத்தை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் அதன் மைலேஜ் அதிகரிக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 27, 2024, 13:51 [IST]
English summary
Car mileage tips clean cars experiment explained
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+