கார் டாப் மட்டும் ஏன் லேசா இருக்குது? இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் வேறு இருக்குதா?

காரின் ரூஃப் பகுதி ஃப்ளோர் பகுதியை விட மிக லேசாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதை நீங்கள் கவனித்துள்ளீர்களா? இதற்கு என்ன காரணம் என்ன என என்றாவது யோசித்து உள்ளீர்களா? கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக செய்யும் என்பது தெரியும், ஆனால் இந்த விஷயத்தை ஏன் இப்படி செய்துள்ளார்கள்? இதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஒரு கார் என்பது நம்மை பொருத்தவரை ஒரு போக்குவரத்து சாதனம் தான். ஆனால் இந்த உலகிற்கு மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்பாகும். சில நூறு ஆண்டுகள் முன்பு வரை போக்குவரத்து என்றால் அது ஆடம்பரமான விஷயமாக இருந்தது. ஆனால் இன்று உலகமே மிக வேகமாக இயங்கி வருகிறது. ஒருவர் மிக வேகமாக ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்து வருகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்தான்.

Car Roof Tips

இன்று தனி நபர்களுக்கான வாகனம் என்றால் கார் என்ற நிலைமை வந்துவிட்டது. பலர் தங்களுக்கு என சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். பைக்கை விட கார் தான் இன்று சமூகத்தில் அந்தஸ்து தருகிறது என்பதால் பலர் காரை வாங்க வேண்டும் என்ற கனவில் இன்றும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் அந்த கனவை நிறைவேற்றி விட்டார்கள்.

இப்படியாக நீங்கள் உங்கள் கனவை நிறைவேற்றும் போது அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டியது உங்கள் கடமையாகும். கார் வாங்க நினைக்கும் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் அல்லது கவனிக்காத ஒரு விஷயம் காரின் ரூஃப் பகுதி தான். ஆனால் காரின் ரூப் பகுதியில் கனமான பொருள் ஏதாவது விழுந்தால் உடனடியாக அது நெளிந்து விடும் அல்லது உடைந்து விடும்.

Car Roof Tips

காரின் ஃப்ளோர் பகுதியை இவ்வளவு கனமாக தயாரித்துள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் காரின் ரூஃப் பகுதியை கனமாக தயாரிக்காமல் லேசாக தயாரிக்கிறார்கள். இதற்குப் பின்னால் என்ன காரணம் இருக்கிறது? ஏன் இப்படி செய்கிறார்கள்? இது ஒரு பாதுகாப்பு குறைபாடா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இப்படியாக கார் தயாரிப்பு நிறுவனங்கள் ரூஃப் பகுதியை எடை குறைவாக லேசான பொருட்களை வைத்து தயாரிப்பதற்கு பின்னால் பல்வேறு அறிவியல் காரணங்கள் இருக்கிறது.

எடை: ஒரு வாகனத்தின் மைலேஜ் என்பது அதன் எடையை பொறுத்து அமையும். வாகனம் எந்த அளவுக்கு எடை குறைவாக இருக்கிறதோ அவ்வளவு அதிகமான மைலேஜ் தரும். இதனால் வாகனத்தின் ரூஃப் பகுதியில் அதிக கனமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் பட்சத்தில் வாகனத்தின் எடை கூட வாய்ப்புள்ளது. இது நேரடியாக மைலேஜை பாதிக்கும் என்பதால் அதன் எடையை குறைப்பதற்காக ரூஃப் பகுதியை லேசாக வைத்திருக்கிறார்கள்.

வாகனத்தின் விலை: ஒரு வாகனத்தின் விலை என்பது அதை தயாரிக்க ஆகும் செலவை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. அப்படி என்றால் வாகனத்தின் ரூஃப் பகுதியில் அதிக கனமான பொருட்களை வைத்து வாகனத்தை தயாரித்தால் அதன் தயாரிப்பு செலவு கூடும். இதனால் நேரடியாக வாகனத்தின் விலை என்பது அதிகரிக்கும். இதன் காரணமாகவும் வாகனத்தின் ரூஃப் பகுதியை அதிக கனம் இல்லாமல் லேசாக வைத்திருக்கிறார்கள்.

பாதுகாப்பு: வாகனத்தின் ரூஃப் பகுதி கனமாக இருந்தால்தானே பாதுகாப்பு லேசாக இருந்தால் பாதுகாப்பு இல்லை என பலர் நினைக்கிறார்கள். ஆனால் அப்படி அல்ல வாகனம் தயாரிக்கும் போது சம அளவு எடையை வாகனம் முழுவதும் இருக்கும் வகையில் அதை வடிவமைத்து இருப்பார்கள். வாகனத்தின் ரூஃப் பகுதி அதிக எடையில் இருந்தால் வாகனம் வேகமாக திரும்பும்போது அது கவிழ வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாகவும் வாகனத்தின் ரூஃப் பகுதியில் லேசாக தயாரிக்கிறார்கள்.

இதனால் வாகனத்தின் ரூஃப் பகுதி கனமாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறான விஷயம். அறிவியல் ரீதியாக வாகனத்தின் ரூஃப் பகுதி அதிக எடையுடன் இருக்கக் கூடாது. குறைவான இடையில் இருப்பது தான் உங்களுக்கு பாதுகாப்பானது. அதே நேரம் மிக லேசாக எல்லாம் இதை வடிவமைத்து விட மாட்டார்கள். பல்வேறு பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாப்பான வகையில் தான் இதை வடிவமைப்பார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு வாகனத்தை வாங்கும் போது அதன் பாதுகாப்பு அம்சங்கள் எவ்வளவு இருக்கிறது எப்படியெல்லாம் இது வேலை செய்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதன்படி வாகனத்தின் ரூப் பகுதி ஏன் லேசாக வடிவமைக்கப்படுகிறது என்பதையும் நீங்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அதன் புரிதல் உங்களுக்கு கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 28, 2024, 16:08 [IST]
English summary
Car roof strength vs floor explained why roofs weaker
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+