புது கார் வாங்குனா கொஞ்ச நாளுக்கு மெதுவா தான் ஓட்டனும் ஏன் தெரியுமா?
புதிதாக வாகனம் வாங்கியவர்கள் வாகனம் வாங்கிய சில நாட்களுக்கு வாகனத்தில் வேகமாக செல்லக்கூடாது என சொல்வார்கள். இதனால் வாகனத்திற்கு பிற்காலத்தில் பிரச்சினை ஏற்படும் என்பதால் பலர் புதிதாக கார் வாங்கிய புதிதில் அதை மெதுவாகவே இயக்கி வருவார்கள். இதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன? எவ்வளவு காலத்திற்கு இப்படியாக மெதுவாக இயக்க வேண்டும்? என்ற விரிவான விபரத்தை காணலாம் வாருங்கள்.
புதிதாக ஒரு வாகனம் வாங்கினால் அந்த வாகனத்தில் உள்ள உதிரி பாகங்கள் எல்லாம் புதிதாக இருக்கும். இதுவரை பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும். இதனால் இந்த உதிரி பாகங்கள் எல்லாம் அதன் முழு திறனை வெளிப்படுத்துவதற்கு தயாராக வேண்டும். தயாரானால் மட்டுமே அது வருங்காலத்தில் தனது முழு திறனை வெளிக்காட்டும் வகையிலான உதிரி பாகமாக இருக்கும்.

இது தயாராகும் காலம் தான் ரன்னிங் இன் காலம் என அழைக்கப்படுகிறது. இந்த ரன்னிங் இன் காலத்தில் வாகனத்தின் உதிரி பாகங்களை பக்குவப்படுத்த வேண்டியது கட்டாயமான பணியாக இருக்கிறது. இந்த பணியில் வாகனத்தின் உதிரிபாகம் எப்படி செயல்படுகிறதோ அதேபோல தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு செயல்படும். இதனால் இந்த காலகட்டத்தில் அதிகபட்சமான திறனை வெளிகாட்டும் வகையில் வாகனங்களின் உதிரி பாகங்களை செயல்படுத்தக் கூடாது.
இதன் காரணமாகவே வாகனத்தை இந்த குறிப்பிட்ட காலத்தில் மிக வேகமாக இயக்கக் கூடாது அதிக அக்ரஸிவாக இயக்கக் கூடாது பார்த்து பக்குவமாக கையாள வேண்டும் என அறிவுரை கூறுகிறார்கள். இந்த காலகட்டம் என்பது புதிதாக வாகனம் வாங்கி அது 1000 முதல் 2000 கிலோ மீட்டர் வரை ஓடும் காலகட்டமாக இருக்கிறது. இந்த காலகட்டத்தில் காரை மிக மெதுவாக தான் இயக்க வேண்டும். அதிக வேகத்தில் இயக்கக் கூடாது.

இந்த காலகட்டத்தில் அதிக பிரஷர் கொடுத்து காரை இயக்கினால் அது உதிரிபாகங்களின் அதிகமான திறனை ஏற்படுத்தக்கூடும். இதனால் ஆரம்ப கட்டத்திலேயே தேய்மானம் என்பது அதிகமாகிவிடும். ஒரு வாகனத்தின் உதிரிபாகம் அதற்கு ஏற்றார் போல் செட் ஆவதற்குள் அதன் தேய்மானம் அதிகமாகிவிட்டால் விரைவாக அந்த உதிரி பாகம் தேய்மானமாகி வாகனம் ரிப்பேராக அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
இதனால் இந்த காலகட்டத்தில் அதிக வேகத்தில் பயணிக்க கூடாது. அதிக எடையை ஏற்றிக்கொண்டு பயணிக்க கூடாது. அதே நேரம் காரில் செல்லும் போது திடீரென அதிக ஆக்ஸிலேட்டரை கொடுப்பது திடீரென பிரேக் பிடிப்பது உள்ளிட்ட விஷயங்களை தவிர்க்க வேண்டும். மிக மெதுவாக அனைத்தையும் ஸ்மூத்தாக கையாளும் வகையில் தான் முதல் 2000 கிலோ மீட்டரை கடக்க வேண்டும்.

இந்த காலகட்டங்களில் மெக்கானிக்கல் பாகங்களில் ஏதாவது லூஸ் கனெக்ஷன் இருந்தாலும் அது மெதுவாக ஸ்மூத்தாக கையாள்வதன் மூலம் ஸ்மூத்தாக தானாக சரி செய்து விடும். இல்லை என்றால் இது பிற்காலத்தில் பிரச்சனையை ஏற்படுத்த வழி வகுக்கும். காலகட்டத்தின் போது கட்டாயம் செய்யக் கூடாத சில விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.
இந்த காலங்களில் கட்டாயமாக அதிக வேகத்தில் பயணம் செய்யக்கூடாது அதிக ஆக்சிலரேஷன் மற்றும் பிரேக்கிங் ஐ பயன்படுத்தக்கூடாது. இன்ஜினுக்கு அதிக அழுத்தம் தரக்கூடாது. காரில் அதிகமான எடையை ஏற்றக்கூடாது. கியரை அடிக்கடி மாற்றக்கூடாது. அதிக ஆர்பிஎம்-ல் வாகனத்தை ஓட்டக் கூடாது. இதையெல்லாம் தவிர்த்தாலே உங்கள் வாகனம் ரன்னிங் பீரியடில் சிறப்பாக செயல்பட துவங்கிவிடும்.
ஒரு வாகனம் ரன்னிங் இன் காலத்தில் சிறப்பாக செயல்பட்டு விட்டால் அந்த வாகனம் நீண்ட ஆண்டுகளுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சிறப்பான பெர்ஃபார்மன்ஸை வெளிப்படுத்தும் முக்கியமாக வாகனத்தின் மைலேஜ் அதிகமாக இருக்கும். முதலிலேயே அக்ரஸிவாக பயன்படுத்தி விட்டால் வாகனத்தின் மைலேஜ் மிக குறைவாக மாறிவிடும்.
வாகனத்தின் பாதுகாப்பு என்பதும் இந்த ரன்னிங் இன் பீரியடில் தான் இருக்கிறது. ரன்னிங் இன் பீரியடில் வாகனத்தின் பாதுகாப்பு சிறப்பாக இருந்தால் நிச்சயம் வாகனமும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளும். ரன்னிங் இன் பீரியட் காலம் முடிந்த பின்பு நீங்கள் வாகனத்தை கட்டாயம் சர்வீஸ் செய்ய வேண்டியது கட்டாயமாகும்.
வாகனத்தை இப்படியாக சர்வீஸ் செய்தவுடன் அப்பொழுது இருக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை எல்லாம் கண்காணித்து மெக்கானிக் அதையெல்லாம் சரி செய்து விடுவார்கள். அதன் பின்பு நீங்கள் மெது மெதுவாக வாகனத்தின் வேகத்தை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபடலாம். இதனால் நீண்ட காலத்தற்கு உங்கள் வாகனம் உழைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதனால் நீங்கள் வாகனம் ஓட்டும்போது அதன் ரன்னிங் இன் காலத்தில் நிச்சயம் வாகனத்தை கவனமாக ஸ்மூத்தாக கையாள வேண்டும். அதிக பிரஷரை வாகனத்திற்கு கொடுக்கக் கூடாது. மிக மெதுவாக வாகனத்தை கையாண்டு அதை இயக்கினால் நிச்சயம் அது உங்களுக்கு நல்ல மைலேஜ் தரும். அதே நேரம் நீண்ட காலத்திற்கு நீடித்து உழைக்கும்.


Click it and Unblock the Notifications









