கோடை காலத்தில் கார் பராமரிப்புக்கான சில வழிமுறைகள்

கோடை காலத்தில் காரில் பயணம் செய்யும்போது மிக அவசியமானது ஏசி. எனவே, எந்தவேலை எப்படியிருந்தாலும் ஏசி சரியாக வேலை செய்கிறதா என்பதை சர்வீஸ் சென்டருக்கு சென்று சோதித்துக் கொள்வது அவசியம்.
குறிப்பாக, ஏசி கம்ப்ரஷரின் ஆயில் சீல் மற்றும் ஓ ரிங் ஆகியவை சரியாக இருக்கிறதா என்பதை செக்கப் செய்து விடுங்கள். ஏசி மெஷினில் கேஸ் குறைவாக இருந்தால் உடனே நிரப்பி விடுங்கள்.
ஸ்டீயரிங் வீலில் லெதர் கவர் இருந்தாலும் கூடுதலாக காட்டன் துணியால் ஆன கவர் ஒன்றை வாங்கி போட்டுக்கொள்ளுங்கள். டிரைவிங் செய்யும்போது சவுகரியமாக இருக்கும்.
எஞ்சினில் ஆயில் அளவு சரியாக இருக்கிறதா என்பதையும் பார்த்துவிடுங்கள். தவிர கூலன்ட்டும் சரியான அளவு இருக்கிறதா என்பதை சோதித்துக் கொள்ளுங்கள்.
வெயில் காலத்தில் தேய்மானம் கொண்ட டயர்களுடன் சென்றால் சாலையின் சூட்டில் அதிகமாக தேய்ந்து போகும். பஞ்சர் மற்றும் வெடிப்பதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே, தேய்மானம் கொண்ட டயர்களை மாற்றிவிடுங்கள்.
பெரும்பாலும் நிழலில் காரை நிறுத்துங்கள். காரை வெயிலில் நிறுத்து வேண்டியிருந்தால் கவர் போட்டு மூடி வைப்பது நல்லது. இல்லையென்றால், நிறம் வெளுத்துவிடும் என்பதுடன் காரின் உதிரிபாகங்கள் வெப்பத்தால் வீணாகும் வாய்ப்பு அதிகம்.
காரை வெயிலில் நிறுத்த வேண்டும் வேறு வழியில்லை எனும்போது, வைப்பர் பிளேடை உயர்த்தி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் ரப்பரால் ஆன வைப்பர் பிளேடு சேதமாகிவிடும். இல்லையென்றால் முன்புற கண்ணாடி(வின்ட் ஷீல்டு) மற்றும் வைப்பர் பிளேடுக்கு இடையில் தெர்மோ கூல் அட்டை வைத்துவிடுங்கள்.
வெயிலில் நிறுத்தியிருக்கும் காரை எடுக்கும்போது கார் கதவுகளை சிறிது நேரம் திறந்து வைத்துவிட்டு வெப்ப காற்று வெளியேறி பின் ஏறி அமருங்கள்.


Click it and Unblock the Notifications








