காரில் அலாய் சக்கரங்களை இதுக்காகவே வாங்கலாம்... அதேநேரம் பிரச்சனைகளையும் தெரிஞ்சிக்கோங்க!!

காரின் தோற்றத்திலும், மைலேஜிலும் முக்கியமான பங்கு வகிப்பவை சக்கரங்கள் ஆகும். ஏனெனில், சக்கரங்களின் எடை & வடிவம் எப்படிப்பட்டது? அதனை சுழல வைக்க என்ஜின் எந்த அளவிற்கு செயல்பட வேண்டும்? என்பதில் இருந்து, காரின் சஸ்பென்ஷன் & பிரேக் என அனைத்து முக்கியமான இயந்திர பாகங்களையும் தீர்மானிப்பது சக்கரங்கள் ஆகும். இன்றைய காலங்களில் அலாய் சக்கரங்கள் பரவலாக அனைத்து கார்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. இன்னும் சொல்லப் போனால், அலாய் சக்கரங்களுடன் காரை வாங்கவே இன்றைய கால கஸ்டமர்கள் விரும்புகின்றனர். காரில் அலாய் சக்கரங்கள் நல்லவையா? அவற்றை பொருத்துவதால் ஏதேனும் நன்மைகள் உள்ளனவா என்பதை பற்றி இனி பார்க்கலாம்.

அலாய் சக்கரங்கள் காரின் தோற்றத்தை மெருக்கேற்றுவது மட்டுமின்றி, காரின் செயல்படுதிறனிலும் பெரிய வித்தியாசங்களை ஏற்படுத்துகின்றன. அதாவது, அலாய் சக்கரங்கள் பொருத்தப்படும் கார்களின் செயல்படுதிறன் சிறப்பாக உள்ளது. அலாய் சக்கரங்களை எந்த மாதிரியான வடிவத்தில், எந்த மாதிரியான உலோகத்தால் செய்யப்பட்டதாக வாங்குகிறோம் என்பது முக்கியமான ஒன்றாகும்.

alloy wheels pros and cons

அலாய் சக்கரங்கள் பெரும்பாலும் அலுமினியம் அல்லது மாங்கனீசு உலோகத்தால் செய்யப்படுகின்றன. பல்வேறு உலோகங்கள் கலந்த கலவையிலும் அலாய் சக்கரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உங்களது காரில் அலாய் சக்கரங்களை வாங்கி பொருத்த விரும்புகிறீர்கள் எனில், பல்வேறு விதமான அலாய் சக்கரங்கள் ஆஃப்டர்-சேல்ஸ் மார்க்கெட்டிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்ட கார்களை பயன்படுத்துவதில் உள்ள முக்கிய நன்மைகளுள் ஒன்று, அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்ட கார்கள் சிறந்த ஹேண்ட்லிங்கை வழங்குகின்றன. குறிப்பாக, வளைவுகளில் திரும்பும்போது காரின் ஒருபக்கம் சாலையில் இருந்து எழும்புவது தவிர்க்கப்படுகிறது. அலாய் சக்கரங்களை விட இரும்பு சக்கரங்கள் வலிமையானவை போன்று காட்சி தரலாம். ஆனால் உண்மையில், அலாய் சக்கரங்கள் தான் வலிமைமிக்கவை ஆகும்.

alloy wheels pros and cons

ஆதலால், அலாய் சக்கரங்கள் எளிதில் சேதம் அடைவதில்லை. எனவே, அலாய் சக்கரங்களை கொண்ட கார்களை தைரியமாக பள்ளம், மேடுகளில் கொண்டு செல்லலாம். இரும்பு சக்கரங்களில் ரிம்கள் பெரிய அளவில் இருக்கும். ஆனால், அலாய் சக்கரங்களில் ரிம்கள் துளைகள் உடன் வழங்கப்படுகின்றன. இதனால், அந்த துளைகள் வழியாக காற்று சுழற்சி ஏற்படுவதால், வெப்பத்தில் இருந்து டிஸ்க் பிரேக்குகள் குளிர்ச்சியடைகின்றன. இது, டிஸ்க் பிரேக்குகளின் செயல்படுதிறனை மேம்படுத்துகிறது.

இன்றைய கால டயர்கள் பெரும்பாலும் அலாய் சக்கரங்களை சார்ந்தே உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால், அலாய் சக்கரங்களுக்கு ஏற்ற டயரை தேடும்போது பல்வேறு பிராண்ட்களில் இருந்து பல்வேறு விதமான டயர்கள் கிடைக்கும். அலாய் சக்கரங்களில் இத்தனை நன்மைகள் இருக்கும் அதேசமயம் சில பிரச்சனைகளும் உள்ளன. ஆனால் அவை மிகவும் சில மட்டுமே.

alloy wheels pros and cons

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், அலாய் சக்கரங்களின் அதிகப்படியான வலிமையினால் பயணம் சவுகரியம் சற்று வித்தியாசமாக இருக்கும். ஓப்பனாக சொன்னால், சில சமயங்களில் பயணம் சற்று அசவுகரியமாக இருப்பதுபோல் தோன்றலாம். அலாய் சக்கரங்களின் டயர்களும் இதற்கு காரணம் என சொல்லலாம். அதேபோல், அலாய் சக்கரங்களின் மதிப்பு அதிகம் என்பதால், அவற்றை உடைய கார்களின் விலையும் அதிகமாக நிர்ணயிக்கப்படுகிறது.

இரும்பு சக்கரங்களில் பொருத்தப்படும் டயர்களை அலாய் சக்கரங்களில் பொருத்த முடியாது. அலாய் சக்கரங்கள் பழுதாகினால் அதனை சரிச்செய்ய சற்று அதிக செலவாகும். இரும்பு சக்கரங்களில் நடுவில் பிளாஸ்டிக் கொடுக்கப்படுவதால், அவற்றை மாற்றிக் கொள்வது எளியது. காரில் இரும்பு சக்கரங்களுக்கு பதிலாக அலாய் சக்கரங்களை மாற்றினால், அது மாடிஃபிகேஷனாக கருதப்படும் என்பதால், உங்களது கார் இன்ஸ்சூரன்ஸ் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதை மறவாதீர்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், அலாய் சக்கரங்கள் அடுத்த தலைமுறைக்கானது ஆகும். இரும்பு சக்கர கார்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இனி வரும் காலங்களில் குறையும். புதியதாக அப்டேட்டான ஒரு பொருள் வருகிறது என்றால், அதில் சில பிரச்சனைகள் இருப்பது வழக்கமே. அதனை சரிசெய்யும் வேலைகள் ஒருபக்கம் நடந்துக் கொண்டிருக்கும். இருப்பினும், அலாய் சக்கரங்களை வாங்க போகிறீர்களா அல்லது பழைய கார்களில் உள்ளதை போன்று இரும்பு சக்கரங்களுடன் காரை வாங்க போகிறீர்களா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Sunday, August 25, 2024, 14:43 [IST]
English summary
Car tips alloy wheels for cars pros and cons check all details here
மேலும்... #car tips #alloy wheel
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X