இது தெரியாம புது டயர் வாங்காதீங்க! ஈஸியா ஏமாத்திடுவாங்க!

இந்தியாவில் கார் டயர்களை புதிதாக வாங்கும் போது பலருக்கு பல்வேறு குழப்பங்கள் இருக்கிறது. வாகனம் வாங்கம் போது என்னென்ன விஷயங்களை பார்த்து வாங்கவேண்டும்? ஒரு வாகனத்திற்கு டயர் தயாரிக்கும் போது அதற்காக பின்பற்றப்படும் தரங்கள் என்ன? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கார் உரிமையாளர்கள் பலர் தங்கள் காருக்கு டயர் மாற்றம் காலம் வரும் போது புதிய டயரை வாங்க அதிகம் யோசிப்பார்கள். இப்படியாக புதிதாக ஒருவர் டயர் வாங்கும் போது எதை எல்லாம் பார்த்து வாங்க வேண்டும் என பல முறை நாமே சொல்லியிருக்கிறோம். ஆனால் இப்படியாக டயர் தயாராக ஏதேனும் தரம் பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது.

Car Tyre Certification

இதற்காக ஆட்டோமொபைல் துறை தரங்களை நிர்ணயம் செய்யும் சான்றுகளை வழங்குகிறது. அதன்படி டயர்களை மொத்தம் 3 பிரிவுகாக பிரித்து வைத்துள்ளது. அதன்படி பயணிகள் வாகனங்களுக்கான டயர்கள் சி1 எனவும், இலக்கு ரக டிரக்குகளுக்கான டயர்களை சி2 எனவும் டிரக் மற்றும் பஸ்களுக்கான டயர்கள் சி3 எனவும் பிரித்து வைத்துள்ளது.

இந்த டயர்களை பொருத்தவரை ரோலிங் ரெசிஸ்டென்ஸ், விட் கிரிப், மற்றும் ரோலிங் சவுண்ட் எமிஷன் ஆகிய 3 விஷயங்களை மையமாக வைத்து தான் தயாரிக்கப்படுகிறது முதல் டயர் தயாரிக்கும் போது அதன் பாதுகாப்பு கண்காணிக்கப்படுகுிறது இதன் பெர்ஃபார்மென்ஸ் எப்படி இருக்கிறது எனவும் குறிப்பாக ஈரமான தரைகளில் இது எப்படி செயல்படுகிறது என கண்காணிக்கப்படுகிறது.

Car Tyre Certification

இந்த டயர் பயன்படுத்தப்படும் போது அதிலிருந்து சத்தம் எவ்வளவு வருகிறது என்பது கண்காணிக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இது எப்படி மைலேஜை அதிகரிக்க உதவுகிறது. எவ்வளவு சுத்தம் குறைவாக வருகிறது என கண்காணிக்கப்படுகிறது. இது எல்லாம் சோதனை செய்யப்பட்ட பிறகு தான் அந்த டயருக்கு AIS 142:2019 சான்று வழங்கப்படுகிறது.

இது சி1, சி2, சி3 ஆகிய டயர்களை பொருத்து இந்த தரத்திற்கான சோதனை முறை மாறுபடும். இந்த சோதனை முதலில் முறையில் ரோலிங் ரெசிஸ்டென்ஸ் சோதனை் செய்யப்படுகிறது. இந்த டயரை சுத்தவிட்டு எவ்வளவு எரிபொருள் செலவாகிறது என்பதை கண்காணிப்பார்கள் இந்த டயர் எந்த அளவிற்கு மைலேஜை பாதிக்கிறது என கண்காணிப்பார்கள்.

Car Tyre Certification

அடுத்த சோதனையில் ஈரமான சாலையில் இந்த காரை ஓடவிட்டு பின்னர் இது பிரேக்கிங்கில் எப்படி ஃபெர்பார்ம் செய்கிறது என கண்காணிக்கப்படுகிறது. சிறப்பான பிரேக்கிங் திறன் கொண்ட டயர்களுக்கு மட்டுமே சான்று வழங்கப்படுகிறது. அடுத்ததாக இந்த டயரை பயன்படுத்துவாதால் வாகனம் இயங்கும் போது டயரால் எவ்வளவு சத்தம் வருகிறது என்பது கண்காணிக்கப்படும் இதுவும் அனுமதிக்கப்பட்ட அளவை விட குறைவாக தான் இருக்கும்.

டயர்களை பார்க்கும் போது சாதாரணமாக இருக்கும். ஆனால் அதை தயாரிப்பதற்கு பின்னால் மிகப்பெரிய அளவில் சோதனைகள் இருக்கிறது. இந்திய மக்களுக்கு பாதுகாப்பை வழங்கவும், இதனால் சற்று சூழல்களை பாதுகாக்கவும், தர நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த தர நிர்ணயம் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த டயர் தயாரிப்பு தரசான்று விதிமுறைகள் எப்படி இருக்கிறது? இதனால் நமக்கு எப்படி பலன் கிடைக்கிறது? உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டயர் தயாரிப்பாளர்கள் இந்த சான்று மட்டும் இருந்தால் மட்டுமே டயர்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர முடியும். இந்த டயர்களை பயன்படுத்தும் முன் நாம் இதை எல்லாம் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. இது நிச்சயம் நமக்கு பல விஷயங்களை தெரிந்து கொள்ள உதவும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 2, 2025, 23:20 [IST]
English summary
Car tyre certification ais 142 2019 features and importance
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X