காருக்கு அடியில் பெயிண்ட் அடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா? பலருக்கும் தெரியாத விஷயம் இது!

கார் வைத்திருக்கும் அனைவரும் வெளியில் தெரியும் பாகங்கள் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும். அதேநேரம் எந்த பிரச்சனையும் இல்லாமல் பாதிப்பில்லாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் காருக்கு அடியில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெரிய அளவில் கவலைப்படுவதில்லை. காருக்கு அடியில் அதிகமாக துருப்பிடிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இது சமாளிப்பதற்காக சில பெயிண்டுகள் மார்க்கெட்டில் இருக்கின்றன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

காருக்கு அடியில் சிறப்பான பெயிண்டுகளை பயன்படுத்துவதன் மூலம் காரின் ஆயுள் அதிகரிக்கும். காரின் பாதுகாப்பு அதிகரிக்கும். அதே நேரம் காருக்கான பராமரிப்பு எளிதாகும். ஆனால் இது குறித்து பெரும்பாலான மக்களுக்கு தெரிவதில்லை. இதனால் அவர்கள் காருக்கு அடியில் குறிப்பிட்ட பெயிண்டை பயன்படுத்தாததால், அதிகமாக பராமரிப்பு செலவு செய்து வருகிறார்கள். இது மட்டுமல்லாமல் காருக்கு அடியில் பெயிண்ட் செய்வதன் மூலம் ஏகப்பட்ட நன்மைகளையும் பெற முடியும்.

car underbody painting tips

கார் கடையில் பெயிண்ட் செய்வதன் மூலம் நமக்கு கிடைக்கும் மிக முக்கியமான நன்மை என்ற என்னவென்றால் காருக்கு அடியில் துரு பிடிப்பது தடுக்கப்படும். நாம் சாலைகளில் செல்லும்போது தண்ணீர் தூசு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் காருக்கு அடியில் சேரும். இந்த விஷயங்கள் காருக்கு அடிப்பகுதியில் துருவை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. நாம் சாதாரணமாக பார்க்கும் போது இந்த துரு பிடிக்கும் விஷயம் தெரியாமல் போகும்.

இந்த பாதிப்பை தடுப்பதற்காக காருக்கு அடியில் பெயிண்ட் செய்யும் முறையை பலர் கையாளுகிறார்கள். இதற்கான சிறப்பு பெயிண்டுகள் எல்லாம் மார்க்கெட்டில் இருக்கின்றன. இதை பயன்படுத்துவதன் மூலம் துருப்பிடிப்பது தேவையில்லாத டேமேஜ் ஆவது எல்லாம் தவிர்க்கப்படும். இது காருக்கடியில் பெயிண்ட் செய்வதால் நமக்கு கிடைக்கும் மிக முக்கியமான நன்மையாகும்.

car underbody painting tips

அடுத்ததாக இந்த பெயிண்டுகள் வெறும் துருப்பிடிக்கும் பிரச்சனையை மட்டுமல்லாமல் கார் வேகமாக சாலையில் செல்லும்போது கார் செல்லும் வேகத்தில் காருக்கு அடியில் சாலையில் கற்கள் உள்ளிட்ட விஷயங்கள் பறக்கும். இந்த விஷயம் எல்லாம் காருக்குள் சத்தமாக கேட்கும். இது நமக்கு கார் வேகமாக செல்லும்போது தொந்தரவாக இருக்கும். இந்நிலையில் காருக்கு அடியில் பெயிண்ட் செய்வதன் மூலம் இந்த சத்தம் காருக்குள் கேட்காது.

அடுத்ததாக மிக முக்கிய விஷயம் காரின் பராமரிப்பு. காரின் பராமரிப்புக்காக பலர் ஆயிரக்கணக்கில் செலவு செய்வார்கள். ஆனால் பெரும்பாலான செலவுகள் காரின் வெளிப்புறத் தோற்றத்தை சிறப்பாக வைத்திருக்கவே செலவு செய்வார்கள். காருக்கு அடியில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து பெரும்பாலும் கவலைப்படுவதில்லை. இது ஒரு கட்டத்தில் பெரிய பிரச்சினையாக வரும்போது, வாகன உரிமையாளர்களுக்கு அதிக செலவை ஏற்படுத்துவிடும்.

ஆனால் நாம் காருக்கு அடியில் பெயிண்ட் செய்வதன் மூலம் காருக்கு அடியில் தூசு, சகதி, தண்ணீர் போன்ற விஷயங்கள் எதுவும் தாங்காது. அப்படியே அது தங்கினாலும் அது நேரடியாக காரின் உதிரி பாகங்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தாது. நாம் என்னதான் அவ்வப்போது காரை சுத்தப்படுத்தினாலும், காருக்கு அடியில் இருக்கும் அசுத்தங்களை எல்லாம் அகற்றுவது கடினம்.

அதனால் புதிதாக கார் வாங்கியவுடன் முதல் வேலையாக காருக்கு அடியில் பெயிண்ட் செய்யும் பணியை செய்து விட வேண்டும். புதிதாக கார் வாங்கும் போது இப்படியான பெயிண்ட்களை வாகன தயாரிப்பு நிறுவனங்களை அடித்துக் கொடுத்தாலும் மார்க்கெட்டில் அதைவிட சிறந்த பெயிண்ட் எல்லாம் இருக்கின்றன. அதை பயன்படுத்துவதன் மூலம் காரின் ஆயுள் அதிகரிக்கும்.

இப்படியாக காருக்கு அடியில் அடிக்கும் பெயிண்டுகளில் பல்வேறு விதமான நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட பெயிண்ட் எல்லாம் விற்பனையாகி வருகின்றன. முக்கியமாக துருப்பிடிக்காத தன்மை கொண்ட பெயிண்ட் மற்றும் காருக்குள் சத்தத்தை ஏற்படுத்தாத பெயிண்ட் என பல்வேறு விதமான பெயிண்டுகள் இருக்கின்றன. உங்களது தேவையை புரிந்து கொண்டு அதற்கான பெயிண்டை தேர்வு செய்து அடிப்பது நல்லது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன ஓட்டிகள் பலருக்கு இப்படியான ஒரு விஷயம் இருப்பதே தெரியாது. பலரும் வாகனம் வாங்கிய புதிதில் இதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். ஆனால் நீண்ட நாட்களுக்கு பிறகு இது பெரிய பிரச்சினையாக வந்து நிற்கும். இதனால் கார் வாங்கிய உடனே அல்லது அடுத்த சில காலம் கழித்தோ காருக்கு அடியில் இப்படியான பெயிண்டுகளை அடிப்பதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் பெரிய செலவுகளை மிச்சம் செய்ய முடியும்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 20, 2024, 20:00 [IST]
English summary
Car underbody painting tips why special paint necessary damage prevention
மேலும்... #how to #car tips
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+