காருக்கு அதிகமா வெயிட்டிங் பிரியட் இருக்குதா? இதை ஃபாலோ பண்ணுங்க! உடனே வீட்டு முன்னாடி புது கார் நிக்கும்!

ஒவ்வொரு நபருக்கும் கார் வாங்க வேண்டும் என கனவிருக்கும். பலர் கஷ்டப்பட்டு உழைத்த காசை வைத்து முதல் காரை வாங்குவார்கள். சமீபகாலமாக கார்களுக்கான டிமாண்டுகள் அதிகமாகி விட்டது. விலை குறைந்த கார் முதல் அதிக விலை கார், சொகுசு கார்களுக்கும் கூட தற்போது டிமாண்ட் இருக்கிறது. இப்படியாக இருக்கும் போது ஷோரூமுக்கு கார் வாங்க செல்லும் நபர்கள் நீண்ட கால காத்திருப்பு காலத்தை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

சில கார்களுக்கு வார கணக்கிலும் சில கார்களுக்கு மாத கணக்கிலும் ஏன் சில கார்களுக்கு வருட கணக்கில் கூட காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இந்த காத்திருப்பு காலம் நீண்டதாக இருப்பதால் பலர் தங்களுக்கு பிடித்த மாடல் காரை வாங்க முடியாமல் அதற்கு பதிலாக காத்திருப்பு காலம் கம்மியாக உள்ள வேறு நிறுவனத்தின் கார்களை வாங்க சென்று விடுவார்கள்.

Car Waiting Period

நீங்கள் உங்களுக்குப் பிடித்த காரை வாங்க வேண்டும் என்றால் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். அல்லது உங்கள் மனதை மாற்ற வேண்டும் என்ற நிலை இருக்கிறது. ஆனால் நீங்கள் உங்களுக்கு பிடித்த காரை அதிக காத்திருப்பு காலம் இல்லாமல் வாங்க முடியும். இது எப்படி என்ற சின்ன டிப்ஸ் தான் உங்களுக்காக வழங்கி உள்ளோம். இதைப் பின்பற்றினால் உங்களுக்கு பிடித்த காரை அதிக காத்திருப்பு காலம் இல்லாமல் வாங்க முடியும்.

வேறு வேறு டீலர்ஷிப்களில் முயற்சி செய்யுங்கள் ஒரு வாகனத்திற்கான காத்திருப்பு காலம் என்பது டீலர் ஷிப்பிற்கு பொறுத்து மாறுபடும். சில டீலர் ஷிப்புகளில் அதிகமாகவும், சில நிகழ்ச்சிகளில் குறைவாகவும் இருக்கும். அதனால் நீங்கள் உங்கள் வீட்டில் அருகில் உள்ள டீலர்ஷிப்ளில் தான் இந்த காரை வாங்குவீர்கள் என்ற பிடிவாதத்தில் இல்லாமல் மற்ற டீலர்ஷிப்புகளிலும் முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு விரைவாக கார் டெலிவரி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

Car Waiting Period

ஸ்டாக் யார்டு காரை தேர்வு செய்யலாம்: வாகன டீலர் ஷிப்புகளுக்கு கார்களை அனுப்பும் முன்பு ஸ்டாக் யார்டில் கார்களை ஸ்டாக் வைப்பார்கள். இப்படியாக சில கார்கள் ஸ்டாக் யார்டில் இருக்கும். இந்த கார்கள் புக்கிங் கேன்சல் செய்ய்பட்ட காரணத்திற்காகவோ அல்லது அடுத்த அப்டேட் வந்ததன் காரணமாகவோ விற்பனையாகாமல் இருக்கலாம். இப்படியாக 3,4 மாதங்கள் காத்திருப்பில் இருக்கும் கார்களை நீங்கள் தாராளமாக தேர்வு செய்யலாம். இந்த கார்களும் விரைவாக கிடைக்க வாய்ப்புள்ளன.

வெளியூர் டீலர் ஷிப்புகளில் முயற்சி செய்யலாம்: பலர் காரை உள்ளூரில் பதிவு செய்ய வேண்டும் என்றால் உள்ளூரில் உள்ள டீலர்ஷிப்புகளில் மட்டுமே காரை வாங்க வேண்டும் என்ற கருத்தில் இருப்பார்கள். ஆனால் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மற்ற ஊர்களில் உள்ள டீலர் ஷிப்புகளிலும் நீங்கள் காரை வாங்கி உங்கள் ஊரில் பதிவு செய்ய முடியும்.

Car Waiting Period

இதனால் நீங்கள் மற்ற ஊர்களில் உள்ள டீலர் ஷிப்ளிலும் முயற்சி செய்யுங்கள். அங்கு ஒரு வேலை காத்திருப்பு காலம் குறைவாகவோ அல்லது உடனடி டெலிவரி எடுக்கும் வகையில் அந்த கார் ரெடியாக இருந்தால் நீங்கள் அந்த காரை உடனடியாக வாங்க முடியும்.

வேறு வேரியன்ட் அல்லது கலரை தேர்வு செய்யலாம்: காருக்கான காத்திருப்பு காலம் என்பது அதன் வேரியன்ட் மற்றும் நீங்கள் தேர்வு செய்யும் கலரை பொருத்தும் மாறுபடும். அதனால் நீங்கள் காரை வாங்க செல்லும்போது உங்களுக்கு வேறு வேரியன்ட, வேறு கலர் வாங்க விருப்பம் இருந்தால் அதற்கான காத்திருப்பு காலம் குறைவாக இருந்தால் அதை தேர்வு செய்ய முடியும். இதனால் இதன் மூலமும் உங்களுக்கு கார்கள் விரைவாக கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

Car Waiting Period

இப்படியாக நீங்கள் காரை புக் செய்ய செல்லும்போது டீலர்கள் உங்களிடம் அதிக பணம் கொடுத்தால் உங்களுக்கு காரை விரைவாக டெலிவரி செய்வோம் என்று சொன்னால் இது குறித்து உடனடியாக கார் தயாரிப்பு நிறுவனத்திடம் புகார் செய்யுங்கள். டீலர்கள் இப்படியான எந்த விதமான பணத்தையும் வசூல் செய்ய கூடாது. புக்கிங்கிற்கான பணத்தை தவிர வேறு எந்த பணமும் டீலர்கள் பெறக்கூடாது.

பல இடங்களில் இப்படியாக டீலர்கள் விரைவாக டெலிவரி செய்ய லஞ்சம் பெரும் முயற்சியை செய்து வருகிறார்கள். இவர்களிடம் நீங்கள் பணம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள். எப்படி பணம் கொடுத்தாலும் உங்களுக்கு கார் எப்பொழுது கிடைக்குமோ அப்பொழுது மட்டும் தான் கிடைக்கும். காரை விரைவாக டெலிவரி எடுக்க வேண்டும் என லஞ்சம் கொடுக்க முயற்சி செய்து பணத்தை இழந்து விடாதீர்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிதாக கார் வாங்கும் பலர் இப்படியாக காத்திருப்பு காலத்தை நினைத்து கார் வாங்கும் முடிவை மாற்றுகின்றனர். ஆனால் அவர்கள் சற்று முயற்சி செய்து மேலே உள்ள டிப்ஸ்களை ஃபாலோ செய்தால் அவர்கள் விரும்பிய காரை அதிக காத்திருப்பு காலம் இல்லாமல் சீக்கிரமே பெற முடியும். இந்த டிப்ஸ் பலருக்கும் தெரியாது இதை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 21, 2023, 13:16 [IST]
English summary
Car waiting period reduction strategies
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X