காரின் வெளிப்புறம், உட்புறத்தை சுத்தம் செய்வதற்கான டிப்ஸ்

Car Wash
கார் பராமரிப்பு ஒரு கலை. அதை அனுபவித்து செய்தால் கார் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களின் பணத்துக்கும், அந்தஸ்துக்கும் மதிப்பு கொடுக்கும். காரை கழுவுவது மற்றும் உட்புறத்தை சுத்தப்படுத்துவது குறித்த வழிமுறைகளை காணலாம்.

வெளிப்புறத்தை வாஷ் செய்யும் வழிமுறைகள்
:

வாரம் ஒரு முறையாவது தண்ணீரை கொண்டு காரை நன்றாகக் கழுவி சுத்தம் செய்துவிடுவது அவசியம். நிழல் உள்ள இடத்தில் காரை நிறுத்தி வைத்து சுத்தம் செய்ய வேண்டும். காரை துடைப்பதற்கு காட்டன் துணிகளை பயன்படுத்த வேண்டும்.

ஒரு பக்கெட்டில் தண்ணீரை நிரப்பி கார் சோப்பாயிலை தேவையான அளவு கலக்கிக்கொள்ளுங்கள். பின்னர், காரை தண்ணீர் விட்டு கழுவிவிட்டு, ஒரு காட்டன் துணியில் அந்த கரைசலில் நனைத்துக்கொண்டு காரின் வெளிப்புறத்தையும், டயர்களையும் தண்ணீர் விட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து விடுங்கள்.

பின்னர் தண்ணீரை பீய்ச்சியடித்து, காரை கழுவுங்கள். காட்டன் டவலை கொண்டு காரை துடைத்து சுத்தப்படுத்திவிடுங்கள். பின்னர் நிழலிலேயே காரை நிறுத்தி உலர விடுங்கள்.

உட்புறத்தை சுத்தப்படுத்துவதற்கான வழிமுறைகள்:

காரின் வெளிப்புறத்தை தண்ணீரையடித்து சுத்தம் செய்வது போன்று உட்புறத்தை சுத்தம் செய்ய முடியாது. உட்புறத்தை மிகுந்த கவனத்துடன் சுத்தம் செய்வது அவசியம். சாப்ட் வேக்யூமை கொண்டு டேஷ் போர்டு, சென்டர் கன்சோல், மேற்புறம் ஆகியவற்றில் படிந்திருக்கும் தூசுகளை சுத்தம் செய்து விடுங்கள்.

காருக்கு இருக்கைக்கு அடியிலும், கப் ஹோல்டர் பகுதிகளில் பெரிய வேக்யூமை பயன்படுத்தி சுத்தம் செய்து விடுங்கள். பின்னர், தண்ணீரில் காட்டன் துணி ஒன்றை நனைத்துக்கொண்டு உட்புறம் அனைத்தையும் மெதுவாக துடைத்துவிடுங்கள்.

இருக்கைகளில் ஜாம், சாஸ் கறைகள் படிந்திருந்தால், எலுமிச்சை சாறுடன் உப்பை கலந்து அந்த இடத்தில் தேய்த்துவிடுங்கள். இப்போது கறை காணாமல் போயிருக்கும்.

இதைத்தொடர்ந்து, தரமான பாலிஷை (லெதர், பிளாஸ்டிக்குக்கு என தனித்தனியாக பாலிஷ் பயன்படுத்த வேண்டும்) பயன்படுத்துங்கள். இப்போது உங்கள் கார் புத்தம் புது பொலிவுடன் காட்சி தரும்.

More from DriveSpark

Article Published On: Monday, April 16, 2012, 14:44 [IST]
English summary
Car washing is considered an easy task. But there are some steps that you can follow to get the best results. Follow these tips to not only get a clean and shiny car but also to maintain the car's looks for a longer period.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+