பனிகாலத்தில் மட்டும்தான் இந்த பிரச்சனை! சிம்பிளான இந்த 4 வழியை பின்பற்றி பாருங்க!!
பனிகாலம் (Winter)-இல் பெரிய பிரச்சனையே விண்ட்ஷீல்டு (Windshield)-இல் பனி படர்வது ஆகும். இது வாகனத்தை ஓட்டுவதற்கு இடையூறாக அமைவதில் இருந்து, விபத்துகளை ஏற்படுத்துவது வரையில் கூட பிரச்சனைகளை உண்டாக்கக்கூடியவை. ஏனெனில், பனித்துளிகள் சில சமயங்களில் டிரைவரின் பார்வையை முழுவதுமாக மறைக்கின்றன. தென்னிந்தியாவை பொறுத்தவரையில், பெரியது பெரியதாக பனி பொழிய போவது இல்லை; சாரல் போன்றுதான் வீசும். ஆனால், வேகமாக செல்லும்போது விண்ட்ஷீல்டில் படிய அந்த பனி சாரலே போதுமானது. இரவில் ஓரிடத்தில் நிறுத்திவிட்டு பின்னர் எடுத்தால், அதற்குள் மழை பொழிந்தது போன்று விண்ட்ஷீல்டு முழுக்க பனி படர்ந்திருப்பதை பார்க்க முடியும்.
பனியினால் என்ன பிரச்சனை இருக்க போகிறது வைபர்களை பயன்படுத்தினாலே போதுமே என நீங்கள் கேட்பது புரிகிறது. வைபர்களை பயன்படுத்திக் கொண்டு வாகனங்களை ஓட்டுவது ஒரு கட்டத்திற்கு மேல் கொஞ்சம் எரிச்சலை உண்டாக்கிவிடும். ஆகையால், நாங்கள் கூறும் இந்த டெக்னிக்ஸை (Techniques) பின்பற்றி பாருங்கள்.

டீஃபாகர் (Defogger)-ஐ பயன்படுத்தவும்: இன்றைய கால மாடர்ன் கார்களில் டீஃபாகர் ஆனது நிலையான அம்சமாக வழங்கப்படுகிறது. காரின் பின்பக்க விண்ட்ஷீல்டு கண்ணாடியில் மெல்லியதான கோடுகள் போன்றதாக டீஃபாகர் வழங்கப்படுகிறது. பின்பக்க விண்ட்ஷீல்டு கண்ணாடியில் பனி படியும்போது, காருக்குள் டேஸ்போர்டில் இருக்கும் டீஃபாகர் பொத்தானை அழுத்தினால் அந்த கோடுகள் சூடாகி பனியை அப்புறப்படுத்தும்.
ஏசி (AC)-ஐ ஆன் செய்யவும்: குளிர்காலமாக இருப்பினும், விண்ட்ஷீல்டில் பனி படராமல் இருக்க சில நிமிடங்களுக்கு ஏசி-ஐ ஓடவிடவும். கண்ணாடிகளில் பனி படர்வதற்கு காரணம், காருக்குள் கொஞ்சம் சூடான வெப்பநிலை இருப்பதினால் ஆகும். ஏசி-ஐ ஆன் செய்துவிட்டு, காற்றின் வேகத்தை அதிகமாக வைத்து, ஏர் இண்டேக் மோட் (Air Intake Mode)-ஐ சுத்தமான காற்றாக தேர்வு செய்யவும். அதேபோல், ஏசியின் வெண்ட்ஸ் (Vents)-ஐ ஜன்னல்கள் மற்றும் முன்பக்க விண்ட்ஷீல்டை நோக்கி திருப்பி வைக்கவும்.

ஜன்னல்களை சற்று திறந்து வைக்கவும்: ஏசி-ஐ ஆன் செய்வதற்கு பதில், வெளியில் இருந்து கிடைக்கும் இலவச ஏசி-ஐ பயன்படுத்தலாம். ஆனால், ஜன்னல் கண்ணாடிகளை முழுவதுமாக திறந்தப்படி வாகனத்தை ஓட்டாமல், சற்று குறைவாகவே திறந்து வையுங்கள். ஏசி-ஐ பயன்படுத்தினாலும் சரி, ஜன்னல்களை திறந்துக் கொண்டாலும் சரி எதுவாக இருந்தாலும் சில நிமிடங்களுக்கு மட்டுமே. இல்லையென்றால், அதுவே உங்களுக்கு பெரிய அசவுகரியமாக அமைந்துவிடும்.
ஆண்டி-ஃபாக் செல்யூஸன் (Anti-fog Solution): மார்க்கெட்டில் பல ஆண்டி-ஃபாக் சொல்யூஸன்கள் விற்பனை செய்யப் படுகின்றன. பனிகாலம் துவங்கும் போது அவற்றுள் ஒன்றை வாங்கி, விண்ட்ஷீல்டு கண்ணாடிகளில் பூசிக் கொள்ளலாம். இதனை ஒவ்வொரு வருடமும் பூச வேண்டியதாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பனி காலத்திற்கேற்ப வாகனங்களை தயார் செய்வது முக்கியம் ஆகும். குறிப்பாக, வாகனத்தின் டயர்களை வழுக்கிவிடாதவாறு மாற்றிக் கொள்ள வேண்டும். அதேபோல், விண்ட்ஷீல்டிலும் பனி படியாத வண்ணம் தகுந்த சொல்யூஸன்களை எடுத்துக் கொள்வது நல்லது. இதற்கு மேற்கூறப்பட்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.


Click it and Unblock the Notifications









