கார், பைக் 'ஷேரிங்': டிரைவ்ஸ்பார்க் வழங்கும் புதிய சேவை

Tata Nano
எரிபொருளையும், பணத்தையும் மிச்சப்படுத்தும் வகையில், கார் பூலிங்' எனப்படும் புதிய சேவையை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது.

ஒரே பகுதியிலிருந்தோ அல்லது ஒரே வழித்தடத்தில் தினசரி கார் அல்லது பைக்கில் செல்பவர்கள் தனியாக செல்லும்போது எரிபொருளுக்காக அதிக தொகை செலவழிக்க வேண்டியிருக்கிறது.

இதை தவிர்க்கும் வகையில் புதிய சேவையை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. நீங்கள் செல்லும் வழியிலோ அல்லது பகுதியிலிருந்தோ நீங்கள் செல்லும் அதே இடத்திற்கு செல்பவர்களை தினசரி உடன் அழைத்து செல்வதற்கு (கட்டணத்துடன்) விரும்பினால், எங்களது கிளிக்.இன் பகுதியில் உள்ள இலவச விளம்பர சேவை பகுதியில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.

விரும்புவர்கள் உங்களை தொடர்பு கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பைக்கில் செல்பவர்களும் இதில் விருப்பத்தை தெரிவிக்கலாம். நீங்கள் காலையில் செல்லும் நேரம், மாலை திரும்பும் நேரம் உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்கவும்.

எரிபொருளையும், பணத்தையும் மிச்சப்படுத்தும் வகையில் இந்த சேவையை உங்களுக்கு வழங்குகிறோம்.இதுதவிர, சுற்றுலா செல்பவர்களும் இதுபோன்று பிறரை அழைத்து செல்ல விரும்பினால் இங்கே இலவசமாக விளம்பரம் செய்தும் பயன்பெறலாம். உங்கள் விருப்பத்தை பதிவு செய்வதற்கான இணையதள முகவரியின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

(விளம்பரம் செய்வதற்கான கிளிக்.இன் பக்கத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும்)


முக்கிய அறிவிப்பு:
உங்களை தொடர்பு கொள்ளும் நபர்கள் பற்றி தீர விசாரித்த பின் அழைத்துச் செல்வது குறித்து இறுதி முடிவு எடுக்கவும். புதியவர்களை அழைத்துச் செல்லும்போது பல இடர்பாடுகளை சந்திக்க நேரிடலாம்.

மேலும், சமூக விரோதிகளும் இந்த சேவையை தவறாக பயன்படுத்தி, நல்லவர் போர்வையில் தொடர்பு கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்பதை மனதில் கொள்ளுங்கள். இதுபோன்ற பிரச்னைகளுக்கு டிரைவ்ஸ்பார்க் தளம் மற்றும் கிளிக்.இன் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது.

More from DriveSpark

Article Published On: Friday, May 25, 2012, 12:57 [IST]
English summary
At a time when fuel costs are sky high, many are be looking for alternatives to cut costs on traveling. Carpooling is one such option where you can share your car/bike ride with other commuters traveling in the same route on a cost sharing basis. Through this option, you can beat the travel expenses and save your hard earned cash. This would also be fun as you would get to meet new people and make friends.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+