மரணத்தை விளைவிக்கும் 'கீ லெஸ்' கார்கள்... பகீர் ரிப்போர்ட்... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

கீ லெஸ் கார்களில் இருந்து வெளிப்படும் கார்பன் மோனாக்ஸைடு உள்ளிட்ட விஷ வாயுக்களால், மக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்து வருகின்றனர்.

By Arun

கீ லெஸ் கார்களில் இருந்து வெளிப்படும் கார்பன் மோனாக்ஸைடு உள்ளிட்ட விஷ வாயுக்களால், மக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். அத்தகைய அபாயத்தில் இருந்து தப்புவது எப்படி? என்பது குறித்து விரிவான தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

 மரணத்தை விளைவிக்கும் 'கீ லெஸ்' கார்கள்... பகீர் ரிப்போர்ட்... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

முதன் முதலில் அறிமுக்கப்படுத்திய பென்ஸ்

கீ லெஸ் என்ட்ரி மற்றும் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதிகள் நவீன கால கார்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கீ லெஸ் என்ட்ரி சிஸ்டமானது, சாவி இல்லாமலேயே காரின் கதவுகளை லாக் மற்றும் அன் லாக் செய்ய உதவுகிறது. ரிமோட் மூலம் இதனை செய்யலாம்.

 மரணத்தை விளைவிக்கும் 'கீ லெஸ்' கார்கள்... பகீர் ரிப்போர்ட்... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

அத்துடன் இன்ஜினை ஆன் அல்லது ஆப் செய்ய சாவி தேவையில்லை. இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் என்ற ஆப்ஷனுடன் இருக்கும் ஒரே ஒரு பட்டனை பயன்படுத்தி, இந்த 2 வேலைகளையும் எளிதாக செய்து விட முடியும்.

 மரணத்தை விளைவிக்கும் 'கீ லெஸ்' கார்கள்... பகீர் ரிப்போர்ட்... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

கீ லெஸ் என்ட்ரி மற்றும் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதிகளை, பலர் பயன்படுத்தி வருகின்றனர். மெர்ஸிடெஸ் பென்ஸ் நிறுவனம்தான் முதல் முறையாக இந்த வசதியை கடந்த 1998ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

 மரணத்தை விளைவிக்கும் 'கீ லெஸ்' கார்கள்... பகீர் ரிப்போர்ட்... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

அமெரிக்காவில் கொத்து கொத்தாக பலி

ஆனால் அமெரிக்காவில், கீ லெஸ் என்ட்ரி மற்றும் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதிகளை பயன்படுத்தி வரும் பலர், கொத்து கொத்தாக உயிரிழந்து வருகின்றனர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

 மரணத்தை விளைவிக்கும் 'கீ லெஸ்' கார்கள்... பகீர் ரிப்போர்ட்... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

அமெரிக்க நாட்டில், கடந்த 12 ஆண்டுகளில் மட்டும், 28 பேரின் அகால மரணத்திற்கும், 45 பேரின் படுகாயத்திற்கும் கீ லெஸ் கார்கள் காரணமாக இருந்துள்ளன. இதனால் கீ லெஸ் இன்ஜின் கார்களை பயன்படுத்தி வருபவர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 மரணத்தை விளைவிக்கும் 'கீ லெஸ்' கார்கள்... பகீர் ரிப்போர்ட்... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

உயிரை பறிக்கும் கார்பன் மோனாக்ஸைடு

அதாவது கீ லெஸ் என்ட்ரி சிஸ்டம் கொண்ட கார்கள், கார்பன் மோனாக்ஸைடு உள்ளிட்ட விஷ வாயுக்களை உமிழ்கின்றன. இந்த விஷ வாயுக்கள்தான் 28 பேரின் உயிரை பறித்து விட்டன. 45 பேரை நிலையை கவலைக்கிடம் ஆக்கியுள்ளன.

 மரணத்தை விளைவிக்கும் 'கீ லெஸ்' கார்கள்... பகீர் ரிப்போர்ட்... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

கீ லெஸ் சிஸ்டம் கொண்ட கார்களை, கேரேஜ் உள்ளிட்ட மூடப்பட்ட பகுதிகளில், பார்க்கிங் செய்த பின்பு, அதன் இன்ஜினை டர்ன் ஆப் செய்ய, கார்களின் உரிமையாளர்கள் மறந்து விடுகின்றனர். பெரும்பாலான நவீன கார்கள் அனைத்தும் மிகவும் 'சைலென்ட்'-ஆக இருக்கின்றன. சிறிய சப்தம் கூட வருவதில்லை. இதனால் இன்ஜின் ஓடிக்கொண்டிருப்பதை உணர முடியாமல் போய் விடுகிறது.

 மரணத்தை விளைவிக்கும் 'கீ லெஸ்' கார்கள்... பகீர் ரிப்போர்ட்... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

இப்படி நீண்ட நேரம் இன்ஜின் ஓடிக்கொண்டிருப்பதால், கார்பன் மோனாக்ஸைடு உள்ளிட்ட விஷ வாயுக்கள் உருவாகி விடுகின்றன. அமெரிக்காவில் பெரும்பாலான கேரேஜ்கள், வீடுகளை ஒட்டியே அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் விஷ வாயுக்கள் வீடு முழுவதும் பரவி பெரும் விபரீதத்தை உண்டாக்கி விடுகின்றன. பலர் படுக்கையிலேயே உயிரிழந்த சம்பவங்களும் அங்கு நடைபெற்றுள்ளன.

 மரணத்தை விளைவிக்கும் 'கீ லெஸ்' கார்கள்... பகீர் ரிப்போர்ட்... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

கார்பன் மோனாக்ஸைடு வாயுவானது, அறிவியல் ரீதியாக CO என குறிப்பிடப்படுகிறது. கார்பன் மோனாக்ஸைடு வாயுவை சுவாசிப்பது என்பது உடனடி மரணத்திற்கு வழிவகுக்கும். அல்லது மூளையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி, நினைவிழத்தலை (மெமரி லாஸ்) உண்டாக்கி விடும்.

 மரணத்தை விளைவிக்கும் 'கீ லெஸ்' கார்கள்... பகீர் ரிப்போர்ட்... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

பாதுகாப்பு பரிந்துரை நிராகரிப்பு

டிரைவர்கள் இன்ஜினை ஆப் செய்யாமல் செல்லும்போது, அவர்களுக்கு கேட்கக்கூடிய அல்லது பார்க்கக்கூடிய வகையிலான எச்சரிக்கையை செய்யும் கருவியை கார்களில் பொருத்த வேண்டும் என கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு, கடந்த 2011ம் ஆண்டிலேயே ஆட்டோமோட்டிவ் இன்ஜினியர்ஸ் சமூகம் என்ற அமைப்பு பரிந்துரை செய்தது.

 மரணத்தை விளைவிக்கும் 'கீ லெஸ்' கார்கள்... பகீர் ரிப்போர்ட்... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

ஆனால் அத்தகைய எச்சரிக்கை அலாரத்தை பொருத்தினால் கூடுதல் செலவு பிடிக்கும். எனவே ஆட்டோமோட்டிவ் இன்ஜினியர்ஸ் சமூகம் அமைப்பு செய்த பரிந்துரைக்கு, கார் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

 மரணத்தை விளைவிக்கும் 'கீ லெஸ்' கார்கள்... பகீர் ரிப்போர்ட்... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

எனினும் அதைப்பற்றி கவலைப்படாத ஒரு சில கார் நிறுவனங்கள், கார் இன்ஜின் நீண்ட நேரம் தேவையில்லாமல் ஆன் செய்யப்பட்டிருந்தால், தானாக ஆப் செய்யக்கூடிய வகையிலான சிஸ்டத்தை கார்களில் பொருத்தியுள்ளன.

 மரணத்தை விளைவிக்கும் 'கீ லெஸ்' கார்கள்... பகீர் ரிப்போர்ட்... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

இந்தியர்களுக்கு பிரச்னையா?

கீ லெஸ் கார்களால் மரணம் நிகழும் சம்பவங்கள் அமெரிக்காவில் ஒரு மிகப்பெரிய பிரச்னையாக எழுந்துள்ளது. ஆனால் இந்தியாவில் அப்படி பெரிய அளவிலான பிரச்னைகள் நிகழும் என்று கூறி விட முடியாது.

 மரணத்தை விளைவிக்கும் 'கீ லெஸ்' கார்கள்... பகீர் ரிப்போர்ட்... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

வீடுகளுடன் இணைக்கப்பட்ட கேரேஜ் போன்ற மூடப்பட்ட பகுதிகளில் கார்களை பார்க்கிங் செய்யும்போது, இன்ஜினை ஆப் செய்யாவிட்டால்தான் பிரச்னை. ஆனால் இந்தியாவில் பெரும்பாலானோர் கார்களை அப்படி பார்க்கிங் செய்வதில்லை.

 மரணத்தை விளைவிக்கும் 'கீ லெஸ்' கார்கள்... பகீர் ரிப்போர்ட்... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

இந்தியர்களான நாம், வீடுகளுக்கு வெளியிலோ, அன்டர் கிரவுண்டு பார்க்கிங்களிலோ என திறந்த நிலையிலான இடங்களில்தான் கார்களை பார்க்கிங் செய்கிறோம். கேரேஜ் இருந்தாலும் கூட, பெரும்பாலும் அவை வீடுகளுடன் இணைக்கப்பட்டதாக இருப்பதில்லை.

 மரணத்தை விளைவிக்கும் 'கீ லெஸ்' கார்கள்... பகீர் ரிப்போர்ட்... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

ஆனால் வீடுகளுடன் இணைக்கப்பட்ட கேரேஜ் கொண்டவர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். கீ லெஸ் கார்கள் பார்க்கிங் செய்யப்படும்போது, அதன் இன்ஜின் ஆப் செய்யப்பட்டிருக்கிறதா? என்பதை ஒருமுறைக்கு இரு முறை சோதித்து பார்த்து கொள்ளுங்கள். அப்படியே விஷ வாயு வீடுகளுக்குள் பரவ வாய்ப்பு இருக்கிறதா? என்பதையும் பார்த்து, அதனையும் சரி செய்து கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, May 21, 2018, 12:07 [IST]
English summary
Cars with keyless entry killing people?. read in tamil
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+