சென்னை ஹைவே தான் இப்போ டார்க்கெட்டு... பெட்ரோல் பங்க் மாதிரி இனி எல்லா இடங்களிலும் இதை பார்க்கலாம்!
சார்ஜ் ஜோன் (CHARGE ZONE), இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நெட்வொர்க். அதாவது, எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் மையங்களை அமைப்பதுதான் இந்த நிறுவனத்தின் வேலை ஆகும். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சார்ஜிங் மையங்களை அமைத்துள்ள இந்த நிறுவனம், சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக இவி சார்ஜிங் மையங்களை அமைத்து வருகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும், எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த இப்போதும் சிலர் தயக்கம் காட்டுவதற்கு காரணம், நாட்டில் சார்ஜிங் நெட்வொர்க் பெரிய அளவிற்கு விரிவடைந்து இல்லை என்பதினால் ஆகும். இதனை சரிச்செய்ய மத்திய அரசாங்கத்தில் இருந்து பல்வேறு இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தங்களது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அவ்வாறு, இவி சார்ஜிங் நெட்வொர்க்கை கொண்டுவர பணியாற்றிவரும் நிறுவனங்களுள் ஒன்றுதான், சார்ஜ் ஜோன் ஆகும். இந்த நிறுவனத்தில் இருந்து மெகா சூப்பர்சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த சூப்பர் சார்ஜிங் நிலையங்கள் சென்னை- பெங்களூர் மற்றும் பெங்களூர்- ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டு வருகின்றன.
கட்டிங்-எட்ஜ் தொழிற்நுட்பத்தை கொண்ட இந்த புதிய இவி சார்ஜிங் நிலையங்கள் சுமார் 1.2 மெகா வாட்ஸ் திறன் கொண்டவைகளாக உருவாக்கப்படுகின்றன. இதற்காக சூரிய ஒளியையும் பயன்படுத்த சார்ஜ் ஜோன் திட்டமிட்டுள்ளது. மேலும், இதன் மூலமாக வழங்கப்படும் சார்ஜில் 1MWh சார்ஜ் பிறகு பயன்படுத்துவதற்காக பேட்டரியில் சேமித்து கொடுக்கப்படுமாம்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது, 24/7 எல்லா நேரமும் இந்த சார்ஜிங் நிலையங்கள் செயல்படும். 180 கிலோவாட்ஸில் இருந்து 240 கிலோவாட்ஸ் வரையிலான டிசி ஃபாஸ்ட் சார்ஜர்கள் (DC Fast Chargers) சார்ஜ் ஜோன் நிறுவனத்தால் ஒவ்வொரு 150- 200கிமீ-க்கும் ஒன்று நிறுவப்பட உள்ளது. பல்வேறு விதமான திறன்களில் நிறுவப்படுவதால், இவற்றை உபயோகித்து எலக்ட்ரிக் கார் & 2-வீலர்கள் உள்பட பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களை சார்ஜ் செய்துக் கொள்ளலாம்.
இந்தியாவில் மொத்த 1.5 லட்ச கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் பரந்து விரிந்து கிடக்கின்றன. இதில், 40,000- 50,000கிமீ-க்கு இவி சார்ஜிங் நிலையங்களை அமைத்துவிட்டதாக கூறும் சார்ஜ் ஜோன் நிறுவனம், நாட்டின் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் இவி சார்ஜிங் நிலையங்களை கொண்டுவரும் முயற்சியாக 'நேஷ்னல் ஹைவே எலக்ட்ரிஃபிகேஷன்' (National Highway Electrification) என்கிற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
சார்ஜ் ஜோனின் மெகா சூப்பர்சார்ஜிங் நிலையங்களில் சார்ஜிங் நேரம் ஆனது எலக்ட்ரிக் வாகனங்களை பொறுத்தும், சார்ஜரின் திறனை பொறுத்தும் வேறுப்படும். இருப்பினும், எந்தவொரு எலக்ட்ரிக் வாகனத்தையும் இங்கு 30 நிமிடங்களில் 80% சார்ஜ் நிரப்பிவிடலாம் என்கிறது சார்ஜ் ஜோன் நிறுவனம். குறைந்தது 100 சூப்பர்சார்ஜிங் நிலையங்களிலாவது 240 கிலோவாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜரை கொண்டுவந்துவிட வேண்டும் என்பது சார்ஜ் ஜோன் நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போதைய பெட்ரோல் பங்குகளை போன்று, எதிர்காலத்தில் ஒவ்வொரு பகுதியிலும் இவி ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் இருக்கும். இதற்கு சார்ஜ் ஜோன் போன்ற தனியார் நிறுவனங்கள் உதவி செய்வதுடன், அரசாங்கங்களும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டால், இவி சார்ஜிங் நிலையங்களையும் அதிகமாக கொண்டுவருவதுடன், எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டையும் அதிகரிக்கலாம்.


Click it and Unblock the Notifications








