சென்னை, பெங்களூருவில் தொடர் மழை! கார் ஓட்டும்போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கார் ஓட்டுனர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய நேரமாக இருக்கிறது. சென்னையில் நேற்று இரவு பெய்த மிகக் கனமழையால் பல இடங்களில் சாலைகள் நீரில் மூழ்கின. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த சில நாட்களிலும் பல பகுதிகளில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழையில் கார் ஓட்டுவது என்பது வேகத்தைக் குறைப்பதுடன் முடிந்துவிடுவதில்லை. டயர்களின் பிடிமானம், பிரேக்கிங் திறன், கண்ணாடியின் தெளிவு, எஞ்சினுக்குள் தண்ணீர் செல்லும் அபாயம் உள்ளிட்ட பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும். காரை வெளியே எடுப்பதற்கு முன்பும், பயணத்தின்போதும் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை மனதில் வைத்து விவேமாக செயல்படுங்கள்.

Rain Driving Tips

1. ஏசி, வைப்பர் சரியாகச் செயல்படுகிறதா?

மழையில் காரின் முன்புற, பின்புற கண்ணாடிகளில் ஈரப்பதம் படிவதால் வெளிப்புறக் காட்சிகள் தெளிவாகத் தெரியாமல் போகலாம். எனவே, பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு ஏசி (AC), முன்பக்கக் கண்ணாடிக்கான டிஃபாகர் (Defogger), பின்பக்கக் கண்ணாடிக்கான ஹீட்டர் வசதி ஆகியவை சரியாகச் செயல்படுகின்றனவா எனச் சரிபார்க்க வேண்டும்.

கண்ணாடியில் பனிமூட்டம் படிந்தால், ஏசியுடன் டிஃபாகர் வசதியைப் பயன்படுத்தலாம். அதேபோல், வைப்பர் பிளேடுகள் தேய்ந்திருந்தால் மழைநீரை முழுமையாக அகற்ற முடியாது. கண்ணாடியில் கோடுகள் விழுதல், வைப்பர் சத்தமிடுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பிளேடுகளை மாற்ற வேண்டும். விண்ட்ஷீல்டு வாஷர் திரவமும் போதுமான அளவில் இருக்க வேண்டும்.

Rain Driving Tips

2. ஹைட்ரோபிளேனிங் ஆபத்து

நெடுஞ்சாலைகளில் மழை பெய்யும்போது அதிக வேகத்தில் செல்வது ஹைட்ரோபிளேனிங் (Hydroplaning) எனப்படும் ஆபத்தை ஏற்படுத்தும். டயருக்கும் சாலைக்கும் இடையில் தண்ணீர் அடுக்கு உருவாகி, டயரின் பிடிமானம் குறைவதே இதற்குக் காரணம். இதனால் ஸ்டீயரிங் மற்றும் பிரேக்கிங் கட்டுப்பாடு இழக்கும் ஆபத்து அதிகம்.

Also Read

டயரின் டிரெட் ஆழம் (Tread Depth), தேய்மானம், காற்றழுத்தம், வாகனத்தின் வேகம் ஆகியவை இந்த ஆபத்தைத் தீர்மானிக்கின்றன. டயர் காற்றழுத்தத்தை நிறுவனத்தின் பரிந்துரைப்படி பராமரிக்க வேண்டும். மழையில் வேகத்தைக் குறைத்து, முன்னால் செல்லும் வாகனத்திலிருந்து கூடுதல் இடைவெளி விட வேண்டும். ஹைட்ரோபிளேனிங் ஏற்பட்டால் ஆக்சிலரேட்டரை மெதுவாக விட வேண்டும். திடீரென பிரேக் போடுவதையோ ஸ்டீயரிங்கைத் திருப்புவதையோ தவிர்க்க வேண்டும்.

Rain Driving Tips

3. ஹைட்ரோலாக் ஆபத்து

சாலையில் தேங்கிய தண்ணீரின் ஆழம் தெரியாமல் காரைச் செலுத்துவது ஆபத்தானது. காரின் ஏர் இன்டேக் (Air Intake) வழியாகத் தண்ணீர் எஞ்சினுக்குள் சென்றால், ஹைட்ரோலாக் (Hydrolock) ஏற்பட்டு பிஸ்டன் மற்றும் கனெக்டிங் ராடு உள்ளிட்ட பாகங்கள் சேதமடையலாம். சில சமயங்களில் எஞ்சின் அதிக செலவு வைக்கும் ஆபத்தும் உள்ளது.

கார் தண்ணீரில் சென்றபோது நின்றுவிட்டால், மீண்டும் ஸ்டார்ட் செய்ய முயற்சிக்க வேண்டாம். உடனடியாக சர்வீஸ் மையத்தின் உதவியை நாட வேண்டும். தண்ணீர் தேங்கிய பகுதிகளை தவிர்ப்பதும், ஆழம் தெரியாத சாலையில் அசட்டுத் துணிச்சலுடன் செல்வதை தவிர்ப்பதும் நல்லது.

Also Read

4. பிரேக்கிங் திறன்

ஈரமான சாலையில் டயர் மற்றும் சாலைக்கு இடையிலான உராய்வு குறைவதால், வாகனத்தை நிறுத்த அதிக தூரம் தேவைப்படலாம். ஏபிஎஸ் (ABS) வசதி இருந்தாலும், அது கூடுதல் பிடிமானத்தை உருவாக்காது. பிரேக் போடும்போது சக்கரங்கள் பூட்டப்படுவதைத் தடுக்க உதவும். எனவே, திடீர் பிரேக்கிங், வேகமான செல்லும்போது தடம் மாறுவது மற்றும் வளைவுகளில் அதிக வேகம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். தண்ணீரைக் கடந்த பிறகு பிரேக்குகள் சரியாகச் செயல்படுகின்றனவா என்பதையும் பாதுகாப்பான இடத்தில் கவனிக்க வேண்டும்.

5. மின்சார கார்களுக்கும் முன்னெச்சரிக்கை

மின்சார கார்களில் உயர் மின்னழுத்த பேட்டரி மற்றும் மின்னணு கட்டுப்பாட்டு அமைப்புகள் இருப்பதால், வெள்ளத்தில் நீண்ட நேரம் மூழ்குவது அல்லது சேதமடைவது கூடுதல் ஆபத்தை ஏற்படுத்தலாம். மின்சார கார் என்பதால் தண்ணீரில் பாதுகாப்பாகச் செல்லலாம் எனக் கருதக் கூடாது. தண்ணீர் தேங்கிய சாலையில் வாகனத்தை வலுக்கட்டாயமாகச் செலுத்தாமல் மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் மழைக்காலப் பயணங்களுக்கு ஏசி, வைப்பர், டயர் மற்றும் பிரேக்குகளைச் சரிபார்ப்பது அவசியம். வெள்ளம் தேங்கிய சாலைகளைத் தவிர்ப்பதும், நெடுஞ்சாலைகளில் வேகத்தைக் கட்டுப்படுத்துவதும் முக்கியம். சில நிமிடங்களைச் சேமிப்பதற்காக ஆபத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். பாதுகாப்பாக சென்று சேர்வதே முக்கியம் என்பதை மனதில் வைத்து விவேகமாக செயல்படுவது நல்லது.

Article Published On: Sunday, October 18, 2026, 13:58 [IST]
English summary
Chennai bengaluru rain driving safety tips car maintenance hydrolock hydroplaning
மேலும்... #car tips #electric vehicles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X