மிக்ஜாம் புயல்ல சிக்காம வண்டி ஓட்டனுமா? இதை பண்ணுங்க! பிரச்சனை வராம தப்பிக்கலாம்!

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருகிறது.மிக்ஜாம் புயல் காரணமாக அதிக காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்த நேரத்தில் வாகனத்தில் பயணிப்பவர்கள் எப்படி பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்ற விபரத்தை காணலாம் வாருங்கள்.

வங்கக்கடலில் சென்னையிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் மிக்ஜாம் என்ற புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு சென்னையில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை என்பதால் பலர் வேலை நிமித்தமாக பயணங்களை திட்டமிட்டு இருப்பார்கள்.

Chennai Michaung Cyclone Driving Tips

மற்ற சாதாரண நாட்களில் பயணம் செய்வதை விட இது போன்ற புயல் அபாய எச்சரிக்கை இருக்கும் நாட்களில் வாகனங்களில் பயணம் செய்வது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அதே நேரம் இது பாதுகாப்பான விஷயமும் அல்ல. சிலர் இந்த புயல் காலகட்டத்தில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தால் அவர்கள் எப்படி பயணம் செய்ய வேண்டும் என்ற டிப்ஸ்களை தான் இங்கே வழங்கியுள்ளோம்.

பயணத்தை தவிர்ப்பது நல்லது: இதுபோன்ற புயல் மழை காலங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதை ஆபத்தான விஷயமாக இருக்கிறது. இதை காரணமாக கொண்டு தான் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை வழங்கியுள்ளது. மேலும் பல தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணியாற்றும் ஆப்ஷனை இன்று வழங்கியுள்ளார்கள்.

Chennai Michaung Cyclone Driving Tips

இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என கருதுகின்றனர். இதனால் நீங்கள் தேவையில்லாமல் இந்த காலகட்டத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். நீங்கள் பயணம் செய்யும் விஷயம் ஒத்தி போடும் அளவிற்கு முக்கியமில்லாத விஷயமாக இருந்தால் தயவு செய்து அதை ஒத்தி போடுவது நல்லது.

ஒன்றுக்கு இருமுறை செக் செய்யுங்கள்: இந்த நேரத்தில் நீங்கள் வாகனத்தில் பயணிப்பதாக இருந்தால் வாகனத்தை ஒன்றுக்கு இரண்டு முறை செக் செய்து விட்டு பயணத்தை துவங்குங்கள். மழை நேரம் என்பதால் உங்கள் வாகனத்தின் வைப்பர் சரியாக வேலை செய்கிறதா? வாகனத்தில் டயர்களில் ஏர் அளவு சரியாக இருக்கிறதா? பிரேக்குகள் சரியாகப் பிடிக்கப்படுகிறதா?

Chennai Michaung Cyclone Driving Tips

ஹெட்லைட்டுகள் நன்றாக வேலை செய்கிறதா? என ஒன்றுக்கு இரண்டு முறை செக் செய்து விட்டு பயணத்தை துவங்குங்கள். நடுவழியில் இந்த பிரச்சனைகள் எல்லாம் வந்தால் உங்கள் வாகனம் விபத்தில் சிக்க கூட வாய்ப்பு இருக்கிறது. இதனால் முன்கூட்டியே செக் செய்வது நல்லது. வாகனத்தின் டயர்களில் திரட்டு குறைவாக இருந்தால் அந்த வாகனத்தில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும்.

ஹெட்லைட்டை போட்டு வாகனம் ஓட்டுங்கள்: தற்போது மழை அதிகமாக பெய்து வருவதால் சாலையில் நீங்கள் செல்லும்போது எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு நீங்கள் வருவது கூட தெரியாமல் இருக்கலாம். அதனால் பகல் நேரமாக இருந்தாலும் பரவாயில்லை என நீங்கள் மழை பெய்யும் போது ஹெட்லைட்டை போட்டு ஓட்டினால் எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு உங்களை எளிதாக அடையாளம் கண்டுபிடித்து விபத்து ஏற்படாமல் வாகனம் ஓட்ட வசதியாக இருக்கும்.

Chennai Michaung Cyclone Driving Tips

மெதுவாக வாகனம் ஓட்டுங்கள்: நிறங்களில் வாகனம் ஓட்டும் போது சாலையில் தண்ணீர் அதிகம் தேங்கி இருக்கும் அதனால் உங்கள் டயர் எப்பொழுது வேண்டுமானாலும் வழுக வாய்ப்புள்ளது. மற்ற வாகன ஓட்டிகளும் இதேபோல சாலையில் செல்லும்போது வழுக்கி உங்கள் வாகனத்தின் மீது மோதவும் வாய்ப்பு உள்ளது. இதனால் நீங்கள் சாலையில் எப்பொழுதும் அதிக வேகத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். மழை நேரங்களில் மெதுவான பயணம் தான் பாதுகாப்பான பயணமாக இருக்கும்.

தூரத்தை கடைபிடியுங்கள்: மழை நேரங்களில் நீங்கள் டிராபிக் நிறைந்த சாலையில் சென்று கொண்டிருந்தால் உங்கள் முன்னால் செல்லும் வாகனத்திற்கும் உங்கள் வாகனத்திற்கும் இடையே அதிகமான தூரம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மழை நேரங்களில் முன்னாள் செல்லும் வாகனங்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் பிரச்சினையில் சிக்கலாம். அதிலிருந்து நீங்கள் தப்பிக்க இந்த தூரம் என்பது நிச்சயம் தேவைப்படும்.

முன் செல்லும் வாகனத்தை பின் தொடருங்கள்: மழை நேரங்களில் நீங்கள் சாலையில் பயணிக்கும் போது முன்னாள் செல்லும் வாகனம் எப்படி செல்கிறதோ அதேபோலவே செல்வது சிறந்தது. தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதியில் எந்த இடத்தில் பள்ளம் இருக்கிறது எந்த இடத்தில் குழி இருக்கிறது என எதுவும் உங்களுக்கு தெரியாது. அதனால் முன்னாள் செல்லும் வாகனத்தை பின் தொடரும் பட்சத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நீங்கள் பாதுகாப்பாக செல்லலாம்.

கார் கண்ணாடி கவனம்: மழை நேரங்களில் நீங்கள் காரில் பயணிக்கும் போது வெளி காருக்கு வெளிப்புறம் உள்ளே உள்ள சூழ்நிலை மற்றும் காருக்கு உள்ளே உள்ள வெப்பம் ஆகியவற்றின் மாற்றம் காரணமாக உங்கள் கார் கண்ணாடிகளில் பனி படரக்கூடும். இதை நீங்கள் காரின் ஏசி மற்றும் ஹீட்டரை ஆன் செய்து அதை அவ்வப்போது சுத்தம் செய்து கொள்வது நல்லது.

க்ரூஸ் கண்ட்ரோலை தவிருங்கள்: இன்று பல வாகனங்களில் க்ரூஸ் கண்ட்ரோல் ஆப்ஷன் இருக்கிறது. இது மழை நேரமில்லாத சாலைகளில் பயணிக்க சிறந்தது தான். ஆனால் மழை நேரத்தில் இது ஆபத்தை ஏற்படுத்திவிட கூட வாய்ப்பு இருக்கிறது. அதனால் மழை நேரங்களில் க்ரூஸ் கண்ட்ரோல் ஆன் செய்து பயணம் செய்வதை தவிர்த்து விடுங்கள். அதை ஆஃப் செய்து விடுங்கள் அப்பொழுதுதான் உங்களுக்கு பாதுகாப்பான பயணம் கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்த்து கருத்து: புயல் நேரங்களில் வாகனம் ஓட்டாமல் வீட்டுக்குள் பத்திரமாக இருப்பதே பாதுகாப்பான விஷயமாகும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டும் வாகனம் ஓட்டுங்கள் அப்படியாக வாகனம் ஓட்டும்போது மேலே குறிப்பிட்டுள்ள இந்த டிப்ஸ்களை ஃபாலோ செய்து வாகனம் ஓட்டினால் முடிந்த அளவுக்கு பாதுகாப்பாக வாகனம் ஓட்டி செல்ல முடியும் இதனால் உங்கள் வாகனமும் இந்த புயலால் பாதிக்காமல் இருக்கும் அதே நேரம் உங்களுக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் இருக்கும்

More from DriveSpark

Article Published On: Monday, December 4, 2023, 11:22 [IST]
English summary
Chennai michaung cyclone driving tips heavy rain
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X