சென்னையில் மழை வெளுத்து வாங்க போகுது! உங்க காரை எப்படி வெள்ளத்துல இருந்து காப்பாத்தனும் தெரியுமா?

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் அதிதீவிர மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தற்போது சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதியில் வாகனம் பயன்படுத்தி வருபவர்கள். இந்த மழையால் தங்கள் வாகனம் பாதிக்க கூடாது என தற்போதைய திட்டமிட்டு வருகிறார்கள். இப்படியாக உங்கள் வாகனம் பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற டிப்ஸ்களை காணலாம் வாருங்கள்.

அடுத்த சில நாட்களில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்யப் போவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தற்போது பல்வேறு பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வாகனங்களை இந்த மலையில் இருந்து பாதுகாக்க திட்டமிட்டு வருகிறார்கள். குறிப்பாக சென்னை பகுதியில் இதற்கு முன்னர் மழை வெள்ளத்தில் பலர் தங்கள் வாகனங்களை இழந்துள்ள நிலையில் மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தற்போதைய திட்டமிட்டு வருகிறார்கள்.

Chennai Rain

முதலில் நீங்கள் செய்ய வேண்டியது நீங்கள் கார் பார்க் செய்யும் பகுதி இதற்கு முன்னர் தண்ணீர் தேங்கிய பகுதியா? அல்லது அதிகமாக தண்ணீர் வரும் பகுதியா?என பார்த்துக்கொள்ளுங்கள். தண்ணீர் வரும் பகுதியாக இருந்தால் உடனடியாக உங்கள் காரின் பார்க்கிங் பகுதியை மாற்ற வேண்டும். எப்படி நீங்கள் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் கார் தண்ணீரில் மூழ்கும் போது அது பல்வேறு விதமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

ஒரு வேலை இதற்கு முன்னர் வெள்ளம் வராத பகுதியாக இருந்தால் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீங்கள் சில விஷயங்களை செய்து கொள்ள வேண்டும். முதலில் காரின் பேட்டரியை காரில் இருந்து அப்புறப்படுத்திவிட வேண்டும் காரில் பேட்டரி பொருத்தப்பட்டிருப்பது காருக்கு பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

Chennai Rain

முடிந்த அளவுக்கு காரை உயரமான பார்க்கிங் பகுதிக்கு கொண்டு செல்வது நல்லது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் மல்டி லெவல் கார் பார்க்கிங், இட வசதிகள் இருக்கிறது உங்களிடம் வசதியான அல்லது பாதுகாப்பில்லாத பார்க்கையில் இருந்தால் நீங்கள் உடனடியாக இப்படியான மல்டி லெவல் கார் பார்க்கிங் பகுதிக்கு மேல் தளத்தில் உங்கள் காரை பார்த்து செய்ய முடிந்தால் செய்து கொள்ளுங்கள். இது வாகனம் நீரில் மூழ்கும் வாய்ப்பை பெரும் அளவு குறைக்கும்.

இந்த மழை வெள்ள காலங்களில் நீங்கள் காரை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கும் போது அதில் நீங்கள் காரில் பயணம் செய்தால் உங்கள் காருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பெரும்பாலும் ஆழம் தெரியாமல் பலர் இப்படியாக போய் தண்ணீருக்குள் சிக்கி விடுகிறார்கள். அதனால் இந்த நேரத்தில் காரை பயன்படுத்துவதை முடிந்த அளவுக்கு குறைத்துக் கொள்ளுங்கள்.

Chennai Rain

அதையும் மீறி உங்களுக்கு அவசர நிலை காரணமாக வாகனத்தை எப்படியாவது பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தால் நீங்கள் காரில் பயணம் செய்யும் செல்லும்போது தண்ணீருக்குள் செல்ல வேண்டிய சூழ்நிலையில் உங்கள் டயருக்கு மேலே தண்ணீர் வராத அளவுக்கு மட்டும் பயணம் செய்யுங்கள் பெயருக்கு மேலே தண்ணீர் வரும்போது அந்த தண்ணீர் உங்கள் காருக்குள் ஏறி உங்கள் வாகனத்தை பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அப்படி பயணம் செய்யும்போது வேகமாக பயணம் செய்ய வேண்டாம். முடிந்த அளவுக்கு குறைந்த வேகத்திலேயே பயணம் செய்யுங்கள் இது உங்கள் வாகனத்திற்கு பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க உதவும். அதே நேரம் நீங்கள் தண்ணீருக்குள் செல்லும்போது கார் நின்று விட்டால் அதை மீண்டும் ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்யாதீர்கள். உங்கள் இன்ஜினிற்குள் தண்ணீர் செல்ல வாய்ப்பு இருக்கிறது. அப்படி சென்று விட்டால் மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும்.

இந்த டிப்ஸ்களை பாலோ செய்தாலே நீங்கள் இந்த மழை நேரத்தில் உங்கள் கார் பிரச்சினையில் சிக்காமல் காப்பாற்றி விட முடியும். முடிந்த அளவுக்கு காரை தண்ணீரில் நனைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். உயரமான இடத்தில் பார்ட் செய்ய முடிந்தால் உடனடியாக அங்கு உங்கள் வாகனத்தை பார்த்து செய்து விடுங்கள். தண்ணீர் வரும் வரை காத்திருக்க வேண்டாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது வெள்ள அபாய சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், பலர் தங்கள் வாகனங்களை பாதுகாக்க பல்வேறு விதமான யுக்திகளை பின்பற்றி வருகிறார்கள். நிச்சயம் உங்கள் வாகன பாதுகாக்கப்படும் இதை நீங்களும் ஃபாலோ செய்வதோடு உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 15, 2024, 7:00 [IST]
English summary
Chennai rain save your car from flood
மேலும்... #india #auto tips #car tips
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X