ஹைவே-ல போகும் போது எக்காரணத்தை கொண்டு கார் கண்ணாடியை திறக்க கூடாது ஏன் தெரியுமா?
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் நீங்கள் கார்களில் பயணிக்கும் போது கார் கண்ணாடியை திறந்து வைத்திருக்கக் கூடாது என்று உங்களுக்கு தெரியுமா? மீறி திறந்து வைத்தபடி பயணித்தால் என்ன ஆகும்? இது குறித்த விரிவான விளக்கங்களையும், டிப்ஸ்களையும் தான் நாம் இங்கே காணப் போகிறோம்.
இந்தியாவில் கார்கள் பயன்படுத்தும் பல தேசிய நெடுஞ்சாலைகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு சுலபமாக செல்ல இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை மட்டும் தான் ஒரே வழியாக இருக்கிறது. இதனால் தரமான தேசிய நெடுஞ்சாலையை வழங்குவதற்காக ஆங்காங்கே சுங்கச்சாவடிகள் வைத்து பணம் வசூல் செய்து அரசு தரமான சாலையை மக்களுக்கு வழங்கி வருகிறது.

இந்த சாலைகளில் செல்லும்போது பலர் இயற்கையான காற்று காருக்குள் வரவேண்டும் என்பதற்காக ஜன்னல் கண்ணாடிகளை திறந்து வைத்து பயணிப்பார்கள். ஆனால் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது காரில் ஜன்னல் கண்ணாடிகளை முழுவதுமாக மூடி வைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இதற்குப் பின்னால் அறிவியல் காரணமும் இருக்கிறது.
நீங்கள் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது காரின் ஜன்னல் கண்ணாடிகளை திறந்து விட்டபடி பயணித்தால், கார் உள்ளே நேரடியாக காற்று வரும். இதனால் நீங்கள் அதிகமான பவர் கொடுத்து காரை வேகமாக ஓட்ட வேண்டிய சூழ்நிலை இருக்கும். இதனால் வாகனத்தின் மைலேஜ் அதிகரிக்கும். வாகனத்தின் லோடு அதிகரிக்கும். இப்படியான தொழில்நுட்ப ரீதியான சிக்கல்கள் இருக்கிறது.

ஒரு கார் வடிவமைக்கப்படும்போது அதை ஏரோ டைனமிக்ஸ் வடிவமைப்பில் இருக்கிறதா என்பதை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மிக உன்னிப்பாக கவனித்து வடிவமைக்கின்றனர். இந்த ஏரோ டைனமிக்ஸ் என்பது முற்றிலுமாக கண்ணாடிகள் பூட்டப்பட்ட நிலையில் தான் முழு திறனை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதனால் நீங்கள் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது முழுவதுமாக காருடைய திறனை பயன்படுத்த வேண்டும் என்றால் கட்டாயமாக ஜன்னல் கண்ணாடிகளை மூடித்தான் வைத்திருக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும்போது கார் மிக வேகமாக பயணிக்கும் கார் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக செல்ல வேண்டும் என்பதற்காக தான் தேசிய நெடுஞ்சாலையே அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கார் வேகமாக செல்லும்போது ஜன்னல் திறந்து இருந்தால் காருக்குள் அதிகமான தூசி, பூச்சிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதனால் காரின் உட்பகுதி அதிகமாக தூசு படிய வாய்ப்பு உள்ளது.
அதே நேரம் கார்களில் வேகமாக பயணிக்கும் போது நீங்கள் ஜன்னல் கண்ணாடிகளை திறந்து வைத்திருந்தால் விபத்து நேரும் காலங்களில் அதிகமான காயம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கார் ஜன்னல் திறந்து இருந்தால் வெளியிலிருந்து ஏதாவது பொருள் கார் உள்ளே வந்து உங்களை தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இதனால் நீங்கள் தேசிய நெடுஞ்சாலையில் கார்களில் பயணிக்கும் போது நிச்சயம் காரின் ஜன்னல் கண்ணாடிகளை மூடிக்கொண்டுதான் பயணிக்க வேண்டும். திறந்து வைத்து பயணித்தால் உங்களுக்கு ஏராளமான பிரச்சனைகள் ஏற்படும். காரின் மைலேஜ் முதல் கார் தூசியாவது வரை ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது.
பெரும்பாலும் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் கார்களை கவனித்தீர்கள் என்றால் அதன் ஜன்னல் கண்ணாடிகள் மூடப்பட்டு தான் இருக்கும். கார் வேகமாக பயணிக்கும் போது காருக்குள் அதிகமான காற்று வருவதால் பலர் அதை மூடி வைத்து இருப்பார்கள். தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் செய்தது சரியான விஷயம். இதனால் நீங்கள் பயணிக்கும் போதும் ஜன்னல் கண்ணாடிகளை மூடி வைத்தே பயணம் செய்யுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்று விற்பனையாகும் அனைத்து கார்களிலும் ஏசி என்பது மிக அவசிய தேவையாக இருக்கிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது யார் ஜன்னல் கண்ணாடிகளை மூடிவிட்டால் ஏசியை கட்டாயம் ஆன் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் காருக்குள் இருக்கும் உங்களுக்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் நீங்கள் பயணம் செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications








