நல்லா கார் ஓட்டுறவங்களுக்கே இந்த விஷயம் தெரியாது! உங்க காசு எல்லாம் உங்களுக்கு தெரியாம இதுல செலவாகிடும்!
மேனுவல் கார் ஓட்டும் பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை கிளட்ச் தான். கார் ஓட்டும் பலருக்கு எந்த நேரத்தில் எல்லாம் கிளட்சை அழுத்த வேண்டும் எந்த நேரத்தில் எல்லாம் கிளட்சை அழுத்த வேண்டாம் என்ற புரிதல் இல்லை. சிலர் காரின் ஆக்சிலேட்டரை விட்ட உடனேயே கிளட்ச் அழுத்தி விடுகின்றனர். இதனால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது இது பற்றியது தான் இந்த பதிவு.
இன்று இந்தியாவில் கார்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. என்னதான் ஆட்டோமேட்டிக் கியர் கார்கள் வந்துவிட்டாலும் மக்கள் மத்தியில் மேனுவல் கியர் கார்களுக்கு தான் மவுசு இருக்கிறது. இன்றளவும் மேனுவல் கியர் காரை தான் மக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர். விற்பனை எண்ணிக்கையில் மேனுவல் கியர் கார்கள் தான் அதிகமாக விற்பனையாகிறது. இந்த மேனுவல் கியர் கார்களில் இருக்கும் பெரிய பிரச்சனை கிளட்ச் தான்.

மேனுவல் கியர் கார்களில் கிளட்ச் என்பது மிக முக்கியமான பாகமாக இருக்கிறது. இந்த கிளட்ச் இல்லை என்றால் காரை செயல்படாமல் போக கூட வாய்ப்பிருக்கிறது. இந்த கிளட்ச் என்பது இன்ஜினுக்கும் கியர் பாக்ஸ்க்கும் இடையே ஒரு பாலம் போல செயல்படுகிறது. கியர் பாக்ஸை எந்த நிலையில் இஞ்சின் உடன் இணைக்க வேண்டும் என்பதை இந்த கிளட்ச் தான் முடிவு செய்கிறது.
இதனால் நாம் கிளர்ச்சை பயன்படுத்தும்போது அதை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். அதில் எந்தவித சேதாரமும். இல்லாமல் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தினால்தான் அது நீண்ட காலம் உழைக்கும். கிளட்சை பாதுகாப்பாக பயன்படுத்துவதன் மூலம் கார் பராமரிப்பு செலவில் பெரும்பணத்தை நாம் மிச்சம் பண்ண முடியும். இப்படியாக கிளட்ச் பாதுகாப்பாக நீண்ட காலம் உழைக்கும் வகையில் பயன்படுத்துவது எப்படி என்பது தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

கார் ஓட்டும் பலரும் செய்யும் தவறு கிளட்சை வேகமாக மிதிப்பதும் வேகமாக ரிலீஸ் செய்வதும் தான். கிளச்சை மிதிக்கும் போதும் சரி, ரிலீஸ் செய்யும் போதும் சரி மெதுவாக செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் அது பாதுகாப்பாக இருக்கும். கிளட்சை மெதுவாக விடுவதன் மூலம் இன்ஜினிற்கும் கிளட்சுக்கும் வாகனத்தின் வேகத்தை பொறுத்து அட்ஜஸ்ட் செய்து கொள்ள சற்று நேரம் கிடைக்கும்.
அடுத்ததாக வாகனம் ஓட்டும் பலர் வாகனம் சென்று கொண்டிருக்கும்போது கியரை மாத்தும்போது செய்யும் மிகப்பெரிய தவறு பாதி கிளட்சை பிடித்து விட்டு கியரை மாற்றுவது தான். பொதுவாக கிளட்சை முழுவதுமாக மிதித்துவிட்டு கியரை மாற்றினால் தான் அது வாகனத்தின் கிளட்சை சிறப்பாக வைத்திருக்கும். பாதி கிளட்ச்சில் இருக்கும் போது கியரை மாற்றினால் அது சேதத்தை ஏற்படுத்த வழி வகுக்கும்.

பலர் டிராபிக்கில் நிறுத்தும்போது வாகனத்தை கியரில் போட்டுவிட்டு கிளட்சை அழுத்தியப்படியே இருப்பார்கள். ஆனால் அப்படி அல்லாமல் வாகனத்தை டிராபிக்கில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை வந்தால் நியூட்ரலுக்கு கியரை மாற்றி விட்டு கிளட்சில் இருந்து காலை எடுத்து விடுவதே சிறந்தது. அதே நேரம் வாகனத்தை பிரேக் பிடிக்கும்போதும் தேவை இல்லாமல் கிளட்சை அழுத்த வேண்டிய அவசியம் இல்லை. கிளட்ச் அழுத்த அழுத்த அதன் வாழ்நாள் குறைந்து கொண்டே இருக்கிறது.
உங்கள் வாகனத்தின் பராமரிப்பில் கிளட்சையும் சேர்த்துக் கொள்ளுங்கள் கிளட்சை குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு முறை பராமரிப்பது என்பது அதன் வாழ்நாளை அதிகரிக்க கூடும். தொடர்ந்து வாகனத்தின் கிளட்சை பராமரிக்காமல் இருந்தால் கூட அதன் வாழ்நாள் குறைந்து கொண்டே இருக்கும். அதனால் நீங்கள் வாகனத்தை எப்பொழுது சர்வீஸ் செய்கிறீர்களோ அப்பொழுது மெக்கானிக்கிடம் சொல்லி கிளட்சையும் செக் செய்து கொள்ளுங்கள். அதில் ஏதாவது பிரச்சனை இருந்தால் சரி செய்து கொள்ளுங்கள்.

இதனால் நீங்கள் வாகனம் ஓட்டும்போது எப்பொழுதும் கவனமாக இருங்கள். காரில் செல்லும்போது கிளட்சை தேவையான நேரத்தில் தேவையான அளவு மட்டும் பயன்படுத்துங்கள். தேவை இல்லாமல் கிளட்ச்சை பயன்படுத்தினால் அது சீக்கிரம் தனது ஆயுளை இழந்து உங்களுக்கு அதிக செலவை வைத்துவிடும். இதனால் பணம் வீணாக செலவாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனத்தின் கிளட்ச் என்பது அதிக செலவை இழுக்கும் ஒரு உபகரணமாக இருக்கிறது. இது பெரும்பாலும் தனிநபர் வாகனம் ஓட்டுவதை விட டிராவல்ஸ் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அதிக செலவு வரும். ஏனென்றால் அவர்கள் தினமும் அதிகமாக தூரம் வாகனம் ஓட்டுவதால் அவர்களுக்கு விரைவில் தேய்மானம் ஆகும். அதனால் அவர்கள் கிளட்சை பார்த்து பயன்படுத்தினால் பெரும் பணத்தை மிச்சம் படுத்தலாம்.


Click it and Unblock the Notifications









