கார் பராமரிப்பு பற்றி தவறான எண்ணங்களும், அதற்கான தீர்வுகளும்!!
காருக்கு மதிப்பு ஏற்படுத்துவதற்கு பராமரிப்பு மிக பங்கு இருக்கிறது. ஆனால், கார் பராமரிப்பு பற்றிய பல யூக கருத்துக்களும், தவறான எண்ணங்களும் இருந்து வருகின்றன.
இவை சில சமயங்களில் பாதிப்பு ஏற்படுத்தும், சில சமயங்களில் தேவையில்லாமல் அதிக செலவை இழுத்துவிடும். அதுபோன்று, கார் பராமரிப்பு குறித்த சில தவறான எண்ணங்களும், அதற்கான தீர்வுகளுமாக இந்த செய்தித் தொகுப்பு அமைகிறது.

பிரேக் ஆயில்
பிரேக் ஆயில் குறைந்தால் பிரேக் பேடுகளை பாதிக்கும். இதற்கு பிரேக் ஆயிலை நிரப்பினால் போதும் என்ற மனநிலை இருக்கிறது. ஆனால், பிரேக் ஆயில் குறைந்தால் கசிவு இருக்கிறதா, பிரேக் பேடுகள் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டியது மிக அவசியம்.

காருக்கு குளிர் ஆகாது
குளிர் காலம் வந்தால் கார்களில் பிரச்னை ஏற்படும் என்பது பொதுவாக இருக்கும் கருத்து. ஆனால், தற்போது தொழில்நுட்பங்கள் மேம்பட்டிருப்பதால் எந்தவொரு தட்பவெப்பத்திலும் கார்கள் சிறப்பாக இயங்கும். மேலும், கார்களுக்கான எரிபொருள் மற்றும் ஆயில் ஆகியவையும் அதிக உயவு கொண்டதாகவும், எளிதில் கெட்டியாகத் தன்மை கொண்டதாகவும் இருப்பதால் பிரச்னை இருக்காது.

மாசத்துக்கு ஒருவாட்டி
டயரில் காற்றின் அழுத்தத்தை மாதத்துக்கு ஒரு முறை அல்லது இரு முறை பரிசோதித்தால் போதுமானது என்று நினைத்திருக்கிறோம். ஆனால், ஒரு நாள் விட்டு ஒருநாள் டயரில் காற்றின் அழுத்தத்தை பரிசோதிப்பது அவசியம்.

எஞ்சின் சூடாகணும்
எஞ்சின் சூடாவதற்காக ஆக்சிலேட்டரை பலம் கொண்ட மட்டும் மிதிப்பது வழக்கம். எஞ்சினில் இருக்கும் ஆயில் இளகுவதற்கு ஏதுவாக இதுபோன்று செய்கிறோம். ஆனால், எஞ்சினை ஸ்டார்ட் செய்து காரை மெதுவாக நகர்த்தி சிறிது சென்றாலே போதுமானது.

கூலண்ட் மாற்றம்
ரேடியேட்டர் கூலன்ட்டை ஒவ்வொரு முறை ஆயில் மாற்றும்போதும் டாப் அப் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. தற்போது தயாரிப்பாளர்கள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலன்ட்டை மாற்றினால் போதுமானது என்று பரிந்துரைக்கின்றனர்.

ஆயில் சேஞ்ச்
எஞ்சினை ஆயிலையும் அடிக்கடி மாற்ற வேண்டியதில்லை. 6 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றினால் போதுமானது.

பேட்டரி சார்ஜ்
சிலர் எஞ்சினை அலறவிட்டு பேட்டரியை சார்ஜ் செய்வதாக கூறுவதுண்டு. ஆனால், பேட்டரி அப்படி உடனே சார்ஜ் ஆகிவிடாது, சில மணிநேரங்கள் பிடிக்கும் என்பதே உண்மை.

மின்னலடிக்கும் வெண்மைக்கு
வீட்டில் சோப்பு பவுடர், டிடெர்ஜென்ட் கரைக்கப்பட்ட தண்ணீரை கொண்டு கார் கழுவுவது தவறு. காரின் பெயின்ட்டில் அவை அரித்து விடும். பிரத்யேக கார் கழுவுவதற்கான சோப்பாயில்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

உயர்ரக பெட்ரோல்
அதிக ஆக்டேன் கலக்கப்பட்ட பிரிமியம் பெட்ரோல் அல்லது டீசல் சாதாரண கார்களின் பெர்ஃபார்மென்ஸை கூட்டும் என்பதோடு அதிக மைலேஜ் தரும் என்ற எண்ணம் தவறானது. ஸ்போர்ட்ஸ் மற்றும் சூப்பர் கார்களுக்கு மட்டும் அது பயன்படும்.

ஆட்டோமேட்டிக் கார்கள்
ஆட்டோமேட்டிக் கார்களில் கியரை ஒரு முறை போட்டு விட்டு, கார் எஞ்சினை நிறுத்தும்போது நியூட்ரலுக்கு கொண்டு வந்தால்போதும் என்ற நினைப்புண்டு. ஆனால், மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட கார்கள் போன்றே ஆட்டோமேட்டிக் கியர் கொண்ட கார்களை சிக்னலில் நிறுத்தும்போது நியூட்ரலில் வைப்பது நல்லது.

கூடுதல் செறிவு
எரிபொருளுக்கு கூடுதல் செறிவூட்டும் வகையில் சந்தையில் கிடைக்கும் ஆடிட்டிவ்களை எனப்படும் செறிவூட்டிகளை வாங்கி ஊற்றினால் பெர்ஃபார்மென்ஸ் சிறப்பாக இருக்கும் என்பது தவறு. இவை எஞ்சினுக்குள் தேவையற்ற படிமானங்களை ஏற்படுத்தும்.

எஞ்சின் ட்யூனிங்
தற்போது வரும் கார்களை அடிக்கடி டியூனிங் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஓர் ஆண்டு அல்லது அதற்கு மேலும் கூட எஞ்சின் ட்யூனிங் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. மேலும், தற்போது வரும் உயர் ரக கார்களில் எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தானியங்கி முறையில் எஞ்சின் டியூனிங் செய்து கொள்ளும். வசதி இருக்கிறது.

கார் பராமரிப்பு
ஸ்லைடரில் பார்த்த தகவல்களை மனதில் வைத்து காரை முறையாக பராமரியுங்கள். உங்களது அந்தஸ்துக்கும், பணத்துக்கும் நிச்சயம் அதிக மதிப்பு கொடுக்கும்.


Click it and Unblock the Notifications








