மீண்டும் பரவுகிறது கொரோனா! கார்ல போகும் போது இதை பண்ணா ஈஸியா தப்பிச்சிடலாம்!
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா மீண்டும் பரவி வருகிறது. பல நகரங்களில் தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தினசரி வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் இந்த கொரொனா பரவலை தடுக்கவும், தங்களுக்க கொரோனா தாக்காமல் இருக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.பலருக்கு இதில் என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பம் இருக்கிறது.கொரோனாவை தடுக்க வாகனங்களில் என்னென்ன விஷயங்களை எல்லாம் செய்ய வேண்டும் என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் கேரளா, மகாராஷ்டிரா, டில்லி உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கிறது. சுமார் 1000 பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தடுக்க அரசு தற்போது தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக வாகன ஓட்டிகள் இந்த பிரச்சனையிலிருந்து தப்பிக்க வழிகளை தேடி வருகின்றனர்.

காரில் பயணிக்கும் போது மிக முக்கிய நடவடிக்கையாக மாஸ்க் அணிய வேண்டும். கொரோனாவை தடுக்க மிக முக்கிய வழி இது தான். மாஸ்க் அணிந்தாலே கொரோனா பரவுவதை தடுக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளது. பலர் காரில் ஏறி அமர்ந்ததும் மாஸ்கை கழற்றி விடுகின்றனர். இது முற்றிலும் தவறு காரில் பயணிக்கும் போது கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். அப்பொழது தான் கொரோனா பரவும் வாய்ப்பு வெகுவாக குறையும்.
அதே போல ஒவ்வொரு முறை காரில் ஏறும் முன்பு காரில் நீங்கள் தொடும் பகுதியை முழுவதுமாக சானிட்டைஸ் செய்ய வேண்டும். காரில் எப்பொழுதுமே ஒரு சானிட்டைசரை நீங்கள் வைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுது தான் அவ்வப்போது உங்கள் கையை சுத்தப்படுத்திக்கொள்ள முடியும். இதனால் வாகனத்தில் எப்பொழுதும் இருக்கும்படி ஒரு சானிட்டைசரை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

இதே போல காரின் வெளிப்பகுதியில் நீங்கள் அதிகம் தொடும் பகுதியை சானிட்டைஸ் செய்ய வேண்டும். தினமும் ஒரு முறையாவது அதை சானிட்டைஸ் செய்வதால் கொரோனா பரவுவதை தடுக்க முடியும். காற்றில் உள்ள கொரோனா கிருமி ஹேண்டிலில் இருந்தால் நீங்கள் அதை தொடும் போது அதிலிருந்து உங்கள் உடலுக்குள் செல்லும் அபாயமும் இருக்கிறது. இதனால் காரின் வெளிப்பகுதியை கவனமாக சுத்தம் செய்ய வேண்டும்.
அதே நேரம் எதற்கும் எச்சரிக்கையாக இருக்க நீங்கள் ஒவ்வொரு முறை காருக்குள் ஏறிய பிறகும் உங்கள் கைகளை சானிட்டைஸ் செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக காரின் ஸ்டியரிங் வீல்,கியர் ஸ்டிக், ஹேண்ட்பிரேக், டோர் ஹேண்டில்கள்,கண்ணாடி பட்டன்கள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டிகிங் கண்ட்ரோல் பேனல், எல்போ டெஸ்ட், சீட் போசிஷன், டோர் ஃபிரேம், ரியர் வியூ கேமரா, சீட் பெல்ட் பக்கல் உள்ளிட்ட பொருட்களை சானிட்டைஸ் செய்ய வேண்டும்.

காருக்கும் எப்பொழுதும் சில ஃபிரஷ்ஷான மாஸ்க்குகளை வைத்திருங்கள், நீங்கள் நீண்ட நேரம் ஒரே மாஸ்கை பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினாலும் அது உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. அதே நேரம் காரையும் அவ்வப்பொழுது முழுமையாக சுத்தப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கொரேனா மிக கொடிய நோயாக இருக்கிறது. இது உங்கள் உயிரையும் காவு வாங்கும் நிலையில் அதிலிருந்து தப்பிக்க வேண்டியது அவசியம். மேலே சொன்ன டிப்ஸ்களை பின்பற்றினால் நீங்கள் காரில் பயணிக்கும் போது கொரோனா பரவும் வாய்ப்பை வெகுவாக குறைக்க முடியும்.


Click it and Unblock the Notifications









