ராணுவ கேண்டீனில் விற்கப்படும் காரை பொதுமக்கள் வாங்க ஈஸியான வழி இருக்குதா? இது இவ்வளவு நாளா தெரியாம போச்சே!

இந்தியா முழுவதும் உள்ள ராணுவ கேண்டீன்களில் ராணுவ வீரர்களுக்கு என குறைந்த விலையில் பொருட்கள் எல்லாம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ராணுவ வீரர்கள் வெளிமார்க்கெட்டில் பொருட்களை வாங்குவதை விட ராணுவ கேண்டீனில் பொருட்களை வாங்குவதன் மூலம் ஏகப்பட்ட பணத்தை மிச்சப்படுத்த முடியும். இப்படியாக ராணுவ வீரர்களுக்கு கார்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

ராணுவ வீரர்களில் குறிப்பிட்ட ரேங்கில் இருக்கும் வீரர்களுக்கு கார் ஒன்றை வாங்க உரிமம் இருக்கிறது. இந்த இதன்படி வெளிமார்க்கெட்டில் உள்ள விலையை விட ராணுவ மார்க்கெட்டில் ஜிஎஸ்டி இல்லாமல் குறைவான விலையில் காரை வாங்கி பயன்படுத்திக்கொள்ள முடியும். இது ராணுவ வீரர்களுக்கு கொடுக்கும் சலுகையாக பார்க்கப்படுகிறது.

csd car name change

இந்நிலையில் இப்படியாக ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் காரை பொதுமக்கள் தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக வாங்கிக் கொள்ள முடியுமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இதற்கு பதில் நேரடியாக இல்லை என்று சொன்னாலும், மறைமுகமாக இதற்கான வாய்ப்புகள் எல்லாம் இருக்கின்றன. ராணுவத்தில் விற்கப்படும் கார் பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதைப்பற்றி தான் இங்கே காண போகிறோம்.

பொதுவாக இராணுவத்தில் விற்பனை செய்யப்படும் வாகனங்கள் எல்லாம் ராணுவ வீரர்களின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். இப்படியாக விற்பனை செய்யப்படும் காரணங்களுக்கு தான் ராணுவத்தில் குறைவான விலையில் அந்த கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் ராணுவ விதிமுறைகளின் படி இப்படியாக பெறப்படும் கார்கள் குறைந்தபட்சம் 4 ஆண்டுகளுக்கு அவர் பெயரில் இருக்க வேண்டும். அதன் பின்னர் தான் அவர் வேறொரு பெயருக்கு மாற்ற வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது.

csd car name change

இதனால் பொதுமக்கள் யாரும் ராணுவ வீரர்கள் ராணுவ கேண்டீனில் வாங்கிய காரை வாங்க வேண்டும் என்றால் அவர் வாங்கி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவரிடம் இருந்து மீண்டும் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் இந்த காரை வாங்க முடியும். ராணுவ வீரர்களுக்கு பணம் கொடுத்து பொதுமக்கள் அவர்களது கோட்டாவில் உள்ள காரை வாங்கி தங்களது பெயரில் பதிவு செய்து கொள்ள முடியாது.

இதைவிட முக்கியமாக காரை வாங்கிய ராணுவ வீரர்கள் கார் வாங்கிய உடனேயே இதை வேறு நபருக்கு பெயர் மாற்றம் செய்யவும் முடியாது. குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தான் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இதனால் தேவையில்லாத முறைகேடுகளை தவிர்ப்பதற்காக ராணுவ அதிகாரிகள் இந்த விதிமுறைகளை வகுத்துள்ளனர்.

csd car name change

ஒரு நல்ல காரை வெளிமார்க்கெட்டில் வாங்குவதற்கும் ராணுவ மார்க்கெட்டில் வாங்குவதற்கும் லட்சக்கணக்கில் பணம் வித்தியாசம் இருக்கும். வெளி மார்க்கெட்டில் எக்ஸ்ஷோரூம் விலையை விட ராணுவ மார்க்கெட்டில் ஜிஎஸ்டி அல்லாமல் மிக குறைவான விலையில் இந்த கார் விற்பனைக்கு வரும். இதன் காரணமாகவே ராணுவ மார்க்கெட்டில் உள்ள கார்களுக்கு மார்க்கெட் மிகப்பெரிய மவுசு இருக்கிறது.

இதனால் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் கார் வாங்க வேண்டும் என்ற கனவில் இருந்தால் அவர்கள் ராணுவ வீரர்கள் கோட்டாவிற்கு வழங்கும் காரை குறைவான விலையில் வாங்கவே அதிகமாக விருப்பப்படுவார்கள்.இதன் மூலம் அவர்கள் லட்சக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்த முடியும். அதே நேரம் அவர்கள் கனவையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

csd car name change

ராணுவ வீரர்கள் பெயரில் வாங்கும் காரை அவர்களது குடும்பத்தினர் ஓட்டி செல்ல முழு உரிமை இருக்கிறது. அவர்களது சொந்த பயன்பாட்டிற்காக அந்த காரை பயன்படுத்தலாம். ராணுவ வீரர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறை எல்லாம் கிடையாது. இதனால் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு நலன் கிடைக்கும் என்பதால் மட்டுமே இந்த சலுகைகள் வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராணுவ வீரர்கள் விதிமுறையை மீறி குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே அவர்களது வாகனத்தை வேறு நபருக்கு மாற்ற முயற்சி செய்தால் அவர்களுக்கு அவர்கள் கூடுதலாக வாட் மற்றும் மற்ற வரிகளை செலுத்த வேண்டியது வரும். இது ஒரு அபராதமாக அவர்களுக்கு விதிக்கப்படும். இதனால் ராணுவ வீரர்கள் கார் வாங்கி வெளிமார்க்கெட்டில் உடனே விற்று விடலாம் என்று நினைக்கக் கூடாது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 29, 2024, 12:59 [IST]
English summary
Csd car name change how to transfer details
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X