தீபாவளி பட்டாசு: டிரைவிங்கின்போது ஜாக்கிரதை

தீபாவளி பண்டிகைக்கான கவுண்டவுன் துவங்கிவிட்டது. பட்டாசுகளை வெடித்து தீபாவளியை வரவேற்கும படலம் ஆங்காங்கே ஆரம்பித்துவிட்டதை காணமுடிகிறது. தீபாவளி பண்டிகையின் மகிழ்ச்சியை உச்சத்திற்கே கொண்டு செல்லும் ஆற்றல் பட்டாசுகளுக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

இருந்தாலும், அஜாக்கிரதையால் பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் குதூகலம் சமயத்தில் துயரத்தில் முடிந்துவிடும் சம்வங்களும் ஆங்காங்கே நடப்பதை காண்கிறோம். குறிப்பாக, தீபாவளி பண்டிகையின்போது கார் மற்றும் இருசக்கர வாகனத்தை ஓட்டும்போது எச்சரிக்கையுடன் இருத்தல் மிக மிக அவசியம.

தீபாவளி பண்டிகையின்போது அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய சில எளிய வழிமுறைகள்.,

1. தீபாவளி பண்டிகையின் முந்தைய இரவும், அன்று காலையும் தவிர்க்க முடியாத காரணங்களை தவிர குழந்தைகள் மற்றும் பெண்களை இருசக்கர வாகனத்தில் கூட்டி செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, கைக்குழந்தைகள் அறவே வேண்டாம்.

2. ஆர்வத்தில் சிலர் ஒரே சமயத்தில் 2 அல்லது 3 பட்டாசுகளை கூட வெடிப்பார்கள். எனவே, முதல் பட்டாசு வெடித்தவுடன் அவசரப்பட்டு வண்டியை கிளப்ப வேண்டாம். வேறு பட்டாசுகள் கொளுத்தவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு நிதானமாக வண்டியை கிளப்புங்கள்.

3.பட்டாசு வெடிப்பதற்குள் கடந்துவிடலாம் என்றோ அல்லது 'கட்' அடித்து சென்று விடலாம் என்றோ தப்புக் கணக்கு போட்டுக்கொண்டு வண்டியின் ஆக்சிலேட்டரை திருக வேண்டாம்.

3. இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அல்லது கண்களை முழுவதும் கவர் செய்யும் வகையிலான கண்ணாடிகளை அணிந்து செல்வது அவசியம். ராக்கெட் போன்ற பட்டாசுகள் சில சமயம் குறி தவறி நம் மீது பாயும் வாய்ப்பு உண்டு.

4. குறுகலான தெருக்களில் கார் அல்லது இருசக்கர வாகனத்தை ஓட்டும்போது மிகுந்த கவனமாகவும், மிதமான வேகத்தில் செல்வது நல்லது. சிலர் பட்டாசை கொளுத்திவிட்டு பதட்டத்தில் கவனிக்காமல் குறுக்கே ஓடி வந்து விழும் ஆபத்து இருக்கிறது. தவிர, குழந்தைகள்கூட பட்டாசு பயத்தில் வண்டியின் குறுக்கே ஓடி வந்துவிடலாம்.

5. சர வெடிகள் கொளுத்துவது தெரிந்தால், சற்று தூரத்திலேயே வண்டியை நிறுத்திவிடவும். சரத்தில் உள்ள அனைத்து வெடிகளும் வெடித்து விட்டதா என்பதை உறுதி செய்து கொண்டு வண்டியை கிளப்பவும்.

6. இருசக்கர வாகனங்களில் செல்வோர் காட்டன் ஆடைகளை உடுத்தி செல்வது நல்லது. தப்பி தவறி பட்டாசு வெடித்து தீப்பொறிகள் மேல் விழுந்தாலும் சட்டையோடு போகும். பாலியஸ்டர் உள்ளிட்ட ஆடைகளில் தீப்பொறி விழுந்தால் உருகி உடம்புடன் ஒட்டிக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது.

7. வெடிக்காத பட்டாசுகள் தானே என்று அதன் மீது அலட்சியமாக வாகனத்தை ஏற்றிச்செல்ல வேண்டாம்.

8. காரில் செல்லும்போது கண்ணாடிகளை ஏற்றிவிட்டுச் செல்லுங்கள்.

9. வீட்டில் பார்க்கிங் வசதி இல்லாதவர்கள் வெளியில் காரை நிறுத்தும்போது பாதுகாப்பான இடத்தில் நிறுத்தவேண்டும்.

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதற்கு காவல்துறையும், தீயணைப்பு துறையும் பல்வேறு கட்டுப்பாடுகளையும், விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் செய்து வருகின்றன.

இருப்பினும், நகர்ப்புறங்களில் பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகளை முழுமையாக அமல்படுத்துவது கடினம். எனவே, முன்னெச்சரிக்கையாக டிரைவிங் செய்து வழக்கம்போல் மகிழ்ச்சியான தீபாவளியாக கொண்டாடுவது நம் கையில்தான் இருக்கிறது.

இதயம் கனிந்த நல் வாடாத இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

More from DriveSpark

Article Published On: Monday, October 17, 2011, 10:19 [IST]
English summary
Diwali, the festival of lights, brings fun and togetherness. For children, fireworks, new clothes and sweets make this festival the most eagerly awaited of the year.In that time we keeping some basic driving techniques to such tragedies. Here are given some driving tips for deepavali season.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+