டெல்லி மாதிரி நம்ம சென்னை ஆகும் காலம் ரொம்ப தூரம் இல்ல!! காற்று மாசு விஷயத்தில் இப்போவே உஷாரா இருக்கணும்!

தலைநகர் டெல்லியில் மீண்டும் காற்று மாசுப்பாடு பிரச்சனை தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது. இடையில், கொரோனா வைரஸ் பரவலினால் கொண்டுவரப்பட்ட ஊரடங்குகளினால் சில காலத்திற்கு டெல்லியில் காற்று மாசுவின் அளவு கட்டுக்குள் இருந்தது. ஆனால், தற்போது மீண்டும் டெல்லி அரசாங்கத்தின் பெரிய பிரச்சனையாக இது உருவெடுத்துள்ளது.

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசுவின் அளவு அதிகரித்து வருவதாக அதிர்ச்சிக்கர ரிப்போர்ட்களை புள்ளி விபரங்களுடன் தொடர்ந்து காற்று மாசு கட்டுப்பாட்டு வாரியமும், சமூக ஆர்வலர்களும் வெளியிட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டெல்லியில் காற்றின் தரம் 400 மார்க்கை தாண்டி சென்றுக் கொண்டிருப்பதாக எச்சரிக்கை மணி அடித்துள்ளனர். காற்று மாசுவின் அளவை குறைக்க டெல்லி அரசாங்கம் சில யுக்திகளை கடந்த சில வருடங்களாக கையாண்டு வருகிறது.

tips to reduce vehicular pollution

அந்த யுக்திகளில் கடைசி 4வது யுக்தியை 'கிரேட்டட் ரெஸ்பான்ஸ் ஆக்‌ஷன் பிளான்' என்கிற பெயரில் செயல்படுத்த டெல்லி அரசு தயாராகி வருகிறது. அதேபோல், ஆட்-ஈவன் வாகன சட்டமும் கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் டெல்லியில் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், வாகனத்தின் காற்று மாசு அளவை குறைப்பது எவ்வாறு? என்பதை இனி பார்க்கலாம்.

குறுகிய தூர பயணத்திற்கு எரிபொருள் என்ஜின் வாகனம் வேண்டாம்: காற்று மாசை குறைக்க அரசாங்கம் நம்பும் எளிய வழி எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது ஆகும். உங்களிடம் எலக்ட்ரிக் வாகனம் இல்லாவிடினும், அருகில் உள்ள கடைக்கு செல்வது போன்ற குறுகிய தூர பயணங்களுக்கு பெட்ரோல்/ டீசல் வாகனங்களை பயன்படுத்த வேண்டாம். நடந்தே செல்ல முயலுங்கள்.

tips to reduce vehicular pollution

அவ்வப்போது சர்வீஸ்: காற்று மாசு ஏற்படுவதற்கு சாலையில் இயங்கும் பழைய வாகனங்களும், பழுதான வாகனங்களும் முக்கிய காரணங்களுள் ஒன்றாக விளங்குகின்றன. ஆதலால், முடிந்தவரையில் பழைய வாகனங்களை பயன்படுத்த வேண்டாம். இதைதான் அரசாங்கமும் கூறுகிறது. அதேபோல், உங்களது வாகனம் புதியதாக இருப்பினும், பரிந்துரைக்கப்பட்ட கால இடைவெளியில் அவ்வப்போது சர்வீஸ் செய்துவிடுங்கள்.

பொது போக்குவரத்தை பயன்படுத்துதல்: காற்று மாசு அளவை குறைப்பது மட்டுமின்றி, போக்குவரத்து நெரிசலையும் குறைக்க மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவது தான் சிறந்த வழி. தற்போதுதான், மெட்ரோ இரயில் சேவை முக்கியமான மாநகரங்களில் உள்ளனவே... ஆதலால், மெட்ரோ இரயிலை பயன்படுத்தலாம். மாநகர பேருந்துகளை பயன்படுத்தலாம். நம்ம சென்னை, மும்பை போன்ற நகரங்களில் லோக்கல் எலக்ட்ரிக் இரயில்களை பயன்படுத்தலாம்.

tips to reduce vehicular pollution

ரைடு ஷேரிங்: பொது போக்குவரத்தை பயன்படுத்த முடியாவிடினும், பயணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வது சாலையில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கும். உதாரணத்திற்கு ஷேர் ஆட்டோ போன்றவை. ஓலா, உபேர், ராபிடோ போன்ற ஆன்லைன் டாக்ஸி நிறுவனங்களும் ஷேரிங் ரைடு சேவையை வழங்க ஆரம்பித்துள்ளன என்பதை நினைவில் கொள்க.

டிராஃபிக்கில் என்ஜினை ஆஃப் செய்வது: டெல்லி, சென்னை போன்ற மாநகரங்களில் நிறைய டிராஃபிக் சிக்னல்கள் இருக்கும். ஒரு சில சிக்னல் ஏரியாக்களில் பச்சை சிக்னலுக்காக நிமிடக் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும். அத்தகைய நேரங்களில், வாகனத்தின் என்ஜினை ஓட விடாமல், ஆஃப் செய்து விடுவது காற்று மாசுவை குறைக்கும். அத்துடன், உங்களது வாகனத்தின் மைலேஜையும் அதிகரிக்கும்.

tips to reduce vehicular pollution

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதினால், அங்கு இருப்பவர்கள் தான் இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றில்லை. சென்னை, பெங்களூர், மும்பை போன்ற இந்தியாவின் எந்தவொரு பகுதியில் வசிப்பவர்களும் இவற்றை பின்பற்ற வேண்டும். ஏனெனில், இன்று டெல்லியில் ஏற்பட்டிருப்பது நம்ம சென்னையில் ஏற்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 7, 2023, 13:28 [IST]
English summary
Delhi air pollution tips to reduce vehicular pollution check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X