பல்வேறு வகையான வாகன எண் பலகைகளும், அதன் விளக்கங்களும்... !!

By Saravana

- பாலாஜி விஷ்வநாத்

சாலைகளில் செல்லும் போது அனைத்து வாகனங்களிலும் நீங்கள் ஒரே நிறத்திலான எண் பலகைகளை பார்க்க முடியாது. ஒருசில வாகனங்களில் மஞ்சள், சிவப்பு போன்றவற்றை அவ்வப்போது பார்த்திருப்பீர்கள். அரிதாக ஒரு சில வாகனங்களில் நீலம், கருப்பு நிறத்தில் பார்த்திருப்பீர்கள், இந்நிறங்களின் மாற்றம் எதை குறிக்கிறது என உங்களுக்கு தெரியுமா?

மேலும், சில வாகனங்களின் எண்களே விசித்திரமாக மேற்குறியிடப்பிட்ட 03D15387W எனவெல்லாம் இருக்கும். இந்த வாகனங்கள் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது, ஏன் ஒரு சில வாகனங்களுக்கு மட்டும் இவ்வாறான எண் பலகை மாற்றங்கள் இருக்கின்றன என இனிக் காண்போம்.

வெள்ளை எண் பலகை

வெள்ளை எண் பலகை

வாகனங்களில் வெள்ளை பலகையில் கருப்பு வண்ண எழுத்துகள் மற்றும் எண்கள் எழுதப்பட்டு இருந்தால் அது தனியார் வாகனம் அல்லது சொந்த உபயோகத்திற்கான வாகனம் என்று பொருள். மேலும், இதை வணிக போக்குவரத்திற்கு பயன்படுத்தக் கூடாது.

Picture Credit:Kienthuc

மஞ்சள் வண்ண எண் பலகை

மஞ்சள் வண்ண எண் பலகை

வாடகை மற்றும் வியாபார ரீதியிலான வணிக போக்குவரத்து வாகனங்களான டாக்ஸி, ட்ரக்குகள் போன்றவைக்கு மஞ்சள் வண்ண பலகையில், கருப்பு வண்ண எண்கள் பதியப்பட்டிருக்கும். மேலும் இதற்கென தனி டிரைவிங் பெர்மிட் அவசியம். வெளிமாநிலங்களில் பயன்படுத்தும்போது பெர்மிட் பெற்றிருந்தால் அல்லது தற்காலிக பெர்மிட் பெற்ற பிறகே செலுத்த முடியும்.

Picture Credit: Quora

கருப்பு வண்ண எண் பலகை

கருப்பு வண்ண எண் பலகை

கருப்பு நிற வாகன எண் பதிவு பலகையில் மஞ்சள் நிற எழுத்து / எண் பதியப்பட்டிருந்தால், அதனை வாடகைக்கு எடுப்பவரே சொந்தமாக ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட வாகனம் என்று பொருள்படுகிறது. இதுவும் ஒருவிதத்தில் வணிக ரீதியிலான பயன்பாட்டு வாகனங்களாகவே கருதப்படுகிறது.

Picture Credit:Quora

சிவப்பு வண்ண எண் பலகை

சிவப்பு வண்ண எண் பலகை

குடியரசு தலைவர், ஆளுநர் மற்றும் உயர் அரசு அதிகாரிகளின் வாகனங்களில் இதுப் போன்ற சிவப்பு நிற பலகையில் தங்க நிறத்தில் தேசிய சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும்.

Picture Credit:Niuche

தற்காலிக பதிவு எண்

தற்காலிக பதிவு எண்

தற்காலிக பதிவு எண் பலகைக்கும் சிவப்பு அல்லது மஞ்சல் வண்ண பலகை TR என்ற ஆங்கில எழுத்துக்கள் மற்றும் தற்காலிக பதிவு எண் கொண்டதாக இருக்கும். இவை ஒரு மாதத்திற்கு செல்லத்தக்கது. ஆனால், தமிழகத்தில் தற்காலிக பதிவு எண்ணுடன் வாகனத்தை டீலர் விற்பனை செய்யக்கூடாது என்ற விதிமுறை அமலில் இருக்கிறது. எனவே, நிரந்தர பதிவு செய்யப்பட்ட பின்னரே தமிழகத்தில் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

ராணுவ வாகன எண் பலகை

ராணுவ வாகன எண் பலகை

இது ராணுவ வாகனங்களின் தனி சிறப்பு எண் முறையாகும். டெல்லி பாதுகாப்பு அமைச்சகத்தில் தான் இந்த எண்கள் பதியப்படுகிறது. காமன்வெல்த் நாடுகளின் ராணுவ வாகனங்களில் இதுபோன்ற மேற்குறியிடப்பட்ட எண் பலகைகள் ராணுவ வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது. மேற்குறிக்கு அடுத்து வரும் எண்கள், எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பதை குறிக்கிறது. வாகன வகை மற்றும் வரிசை எண்கள் இந்த பதிவு எண் பலகையில் குறிப்பிடப்படுகிறது.

ராணுவ எண் பலகை சிறப்பு

ராணுவ எண் பலகை சிறப்பு

இந்த வாகனங்கள் நாட்டின் எந்தவொரு இடத்திலும் செல்ல முடியும். அத்துடன், பாதுகாக்கப்பட்ட பகுதிகள், வெளியாட்களுக்கு அனுமதி மறுக்கப்படும் இடங்களில் கூட இந்த வாகனங்களை சிறப்பு அனுமதி இன்றி செல்ல சட்டத்தில் இடமுண்டு.

Picture Credit: Wikipedia

நீல வண்ண எண் பலகை

நீல வண்ண எண் பலகை

இவை வெளிநாட்டு தூதரக வாகனங்கள் ஆகும். இந்த வாகனங்களில் நீல வண்ண பலகையில் வெள்ளை நிறத்தில் எண்கள் பதியப்பட்டிருக்கும். முதலில் இருக்கும் இரண்டு எண்களும், எந்த நா்டு தூதரகத்தை சேர்ந்தது என்பதை குறிக்கிறது.

Picture Credit: Team BHP

சாம்பிளுக்காக...

சாம்பிளுக்காக...

வெளிநாட்டு தூதரக நாடுகளின் எண்கள்

1 - ஆப்கானிஸ்தான்

2 - அல்ஜீரியா

5 - ஆஸ்திரேலியா

7 - வங்காளதேசம்

11- இங்கிலாந்து

17 - சீனா

52 - நெதர்லாந்து

68 - பாகிஸ்தான்

73 - துருக்கி

75 - ரஷ்யா

77- அமெரிக்கா

102 - ஐஸ்லாந்து

109 - இஸ்ரேல்

Picture Credit: Team BHP

 குறியீடுகள்

குறியீடுகள்

நம்பர் பிளேட்டில் இருக்கும் முதல் இரண்டு எழுத்துக்கள் மாநிலத்தை குறிக்கும். உதாரணத்திற்கு TN 50 Z 5000 என்பதில், முதல் இரண்டு ஆங்கில எழுத்துகள் வாகனம் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதையும், அடுத்து வரும் இரண்டு எண்கள் சம்பந்தப்பட்ட திருவாரூர் மாவட்டத்தையும், அடுத்து வரும் Z என்பது மன்னார்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டதையும் குறிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 20, 2016, 11:31 [IST]
English summary
Different Types Of Vehicle Number Plates And Its Uses.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+