தீபாவளிக்கு கார் வாங்குறதுக்கு முன்னாடி இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
தீபாவளி நெருங்குகிறது, பலர் தங்கள் புதிய கார்களை வாங்கும் முடிவை தற்போதுதான் எடுப்பார்கள். இந்நிலையில் பண்டிகை காலத்தில் வாகனம் வாங்குபவர்கள் தற்போது தள்ளுபடி, பைனான்ஸிங் உள்ளிட்ட ஆப்ஷன்களை யோசித்து வருகின்றனர். இந்நிலையில் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் குறித்த முடிவை எடுப்பதும் மிக முக்கியமான விஷயம் இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பொதுவாக வாகனம் வாங்கும் போது 3 ஆண்டுகள் 3ம் நபருக்கான காப்பீடு கட்டாயம். இதனால் காப்பீட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் 3ம் நபருக்கான காப்பீட்டை மட்டும் 3 ஆண்டுகளுக்கு வழங்கிவிட்டு முழு கப்பீட்டை 1 ஆண்டிற்கு மட்டும் வழங்குவார்கள். இது சட்டப்படி சரி என்றாலும் நமக்கு லாபமா என்றால் இல்லை. நீங்கள் வாகனம் வாங்கும் போது சொந்த சேதாரத்திற்கான காப்பீட்டையும் அதிக காலம் வாங்குவது தான் சிறந்தது. இதற்கு விலை அதிகமானாலும் ஒப்பீட்டளவில் லாபமாக இருக்கும். இதனால் பயன்களும் அதிகம்.

சில நிறுவனங்கள்3 ஆண்டிற்கான 3ம் நபர் காப்பீடு மற்றும் 3 ஆண்டிற்கான சொந்த சேதார காப்பீட்டை சேர்த்து வழங்குகிறது. இதை வாங்குவதால் ஒவ்வொரு ஆண்டும் சொந்த சேதார காப்பீட்டை புதுப்பிக்க வேண்டிய தேவையில்லை. அதே நேரம் ஆண்டிற்கு ஆண்டு அதிகமாகும் பிரிமியம் குறித்த கவலையும் உங்களுக்கு வேண்டாம். இது உங்கள் காசையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும். கார் வாங்கும்போது நீண்ட கால காப்பீட்டை தேர்வு செய்வது தான் சிறந்த வழி முறை.
இது போக சாதார கவரேஜை விட கூடுதல் கவரேஜ் ஆப்ஷன்களை தேர்வு செய்வதுசிறந்தது. .தாரணமாக ஜீரோ டிப்ரிஸியேசன், ரோடு சைடு அசிஸ்டென்ஸ் மற்றும் ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ் ஆகிய ஆப்ஷன்களில் தேர்வு செய்ய வேண்டிய விஷயங்களை தேர்வு செய்தால் கூோடுதல் பயன்கள் கிடைக்கும். இதனால் வாகனம் விபத்தில் சிக்கும்போதோ அல்லது வேறு சேதங்களை சந்திக்கும்போதோ நமக்கு ஏற்படும் செலவு குறையும் அல்லது அறவே இல்லாமல் போகும்.

ஜீரோ டிப்ரிஸியேசன் ஆப்ஷனில் வாங்கினால் நீங்கள் கிளைம் செய்யும் பணம் முழுவதுமாக கிடைக்கும் எந்த வித தள்ளுபடியும் இருக்காது. நீங்கள் நடுரோட்டில் பிரேக்காகி நின்றால் ரோடு சைடு அசிஸ்டென்ஸ் இன்சூரன்ஸ் அதற்கான செலவுகளை ஏற்கும். ரிட்டன் டூ இன்வாய்ஸ் என்றால் உங்கள் வாகனம் முழுமையாக சேதமடைந்தால் வாகனம் வாங்கும் போது எவ்வளவு பணம் செலுத்தினீர்களோ அது மொத்தமும் கிளைம் செய்ய முடியும்.
இது போக கேஷ்லெஸ் கிளைம் ஆப்ஷன் வேறு இருக்கிறது. இதன் மூலம்நீங்கள் பணம் செலுத்தி காரை சரி செய்து பின்னர் அந்த பணத்தை கோர வேண்டிய அவசியம் கிடையாது. இந்தியா முழுவதும் எங்கு காரை சர்வீஸ் செய்தாலும் அதற்கான பணத்தை முழுமையாக நேரடியாக சர்வீஸ் சென்டருக்கே அந்நிறுவனம் செலுத்திவிடும். நீங்கள் செலவில்லாமல் காரை ரிப்பேர் செய்துவிடலாம். நீண்ட தூர பயணம் செய்பவர்களுக்குஇது வசதியாக இருக்கும்.

நீங்கள் வாகனம் வாங்கும் முன்பு அதற்கான இன்சூரன்ஸ் குறித்த முழுமையாக தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். மேலும் அதில் உள்ள அட் ஆன் குறித்த தகவல்களையும் கேட்டு முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இதை சர்வீஸ் செய்ய வேண்டும் என்றால் எந்தெந்தசென்டரில் செய்ய வேண்டும் என்ற நெட்வோர்க் குறித்த முழுமையான தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதை புரிந்து கொண்டு நீங்கள் உங்களுக்கு நீண்ட கால காப்பீட்டு முறை லாபமா அல்லது குறைவான காப்பீட்டு முறை லாபமா என தேர்வு செய்ய முடியும். இந்த கணக்கீடுகளை செய்து காப்பீட்டு முறையை தேர்வு செய்வது லாபமாக அமையும். எது குறைவான ஸ்கீம் என தேர்வு செய்யாதீர்கள. சற்று பணம் அதிகமாக இருந்தாலும் சில ஆட் ஆன்களை எடுப்பது நிச்சயம் உங்களுக்கு பலனை தரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பல விதமான திட்டங்களை வைத்துள்ளனர். இதில் பலருக்கு தேவைப்படும் வகையில் திட்ட வடிவமைப்புகள் உள்ளன. நீங்கள் உங்கள் வாகனத்திற்கான இன்சூரன்ஸை வாங்கும் போது இதை சரியாக தேர்வு செய்வது முக்கியம். இந்த தீபாவளியை புது காருடன் கொண்டாடவுள்ள உங்களுக்கு சரியான இன்சூரன்ஸை தேர்வு செய்ய வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications









