காரை பார்க் பண்ணும் போது கவர் பண்ணாதீங்க! இது பண்ணா தான் உங்க கார் தப்பிக்கும்!

தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. நாம் எல்லாரும் தீபாவளியை சிறப்பாக கொண்டாட தயாராகி வருகிறோம். தீபாவளிக்கு நாம் பட்டாசு வெடித்து புத்தாடைகள் அணிந்து பண்டிகையை கொண்டாடுவோம். இப்படியாக பட்டாசு வெடிக்கும் போது சாலையில் நிறத்தப்பட்ட வாகன்ஙகளில் பட்டாசு வெடித்ததால் பாதிப்பு ஏதுவும் ஏற்படாமல் இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்வதுசிறந்தது. இப்படியாக தீபாவளிக்கு நாம் பட்டாசு வெடித்து கொண்டாடும் போது வாகனங்களுக்கு பாதிப்பில்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என சில டிப்ஸ்களை வழங்கியுள்ளோம்.

கவர்டு பார்க்கிங்

நீங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்யும் போது அதை முற்றிலும் மூடப்பட்ட பார்க்கிங் பகுதியில் நிறுத்த வேண்டும். காருக்காக பிரத்தியேகமாக உள்ள ஷெட், அப்பார்ட்மெண்டாக இருந்தா பேஸ்மென்ட் பகுதி என பட்டாசு வெடிக்கப்படாத இடத்தில் வாகனத்தை பார்க்கிங் செய்வது சிறந்தது. ஆனால் சிலருக்கு அப்படியாக பார்க்கிங் செய்ய வசதியில்லாமல் இருக்கும். அவர்கள் முன்னெச்சரிக்கையாக சில விஷயங்களை செய்ய வேண்டும்.

Diwali Car Safety Tips

பார்க்கிங் கிடக்கவில்லை என்றால் மரத்தடி அல்லது உங்கள் வாகனத்தை பாதுகாக்கும் வகையில் கவர் செய்யப்பட்ட ஏதாவது இடத்தில் பார்க்கிங் செய்ய வேண்டும். முன்னரே காரை அந்த இடத்தில் பார்க்கிங் செய்துவிடுங்கள். நீங்கள் வழக்கமாக சாலையில் தான் பார்க் செய்கிறீர்கள் என்றால் அந்த இடத்தை மாற்றுவது நல்லது. பட்டாசு குறிப்பிட்ட இடத்தில் வெடிக்க மாட்டார்கள் என உறுதி செய்த பிறகு அந்த இடத்தில் பார்க்கிங்செய்யுவும்.

கவர் வேண்டாம்

காரை பத்திரமாக பார்க் செய்ய வேண்டும் என சிலர் காரை பார்க் செய்துவிட்டு கவர் செய்து விடுவார்கள். காரை பார்க் செய்த பிறகு நீங்கள் காரை கவர் செய்தால் அந்த இடத்தில் பட்டாசு வெடிக்கப்பட்டால் உங்கள் வாகனம் அதிக பாதிப்பிற்குள்ளாக வாய்ப்புள்ளது. கார்களின் கவர்கள் எல்லாம் பிளாஸ்டிக் அல்லது துணியால் செய்யப்பட்ட பொருட்களாக இருக்கும். இவை எல்லாம் பட்டாசு நெருப்பில் அதிகம் பாதிக்கப்படக்கூடியவை.

Diwali Car Safety Tips

இதனால் கவரில் பட்டாசு வெடித்து அதன் நெருப்புபட்டால் அது எளிதில் தீ பிடிக்க வாய்ப்புள்ளது. அதனால் தீபாவளி பட்டாசு வெடிக்கும் சூழல் உள்ள பகுதிகளில் உங்கள் காரை கவர் செய்யாமல் இருப்பது தான். நல்லது கவர் தீ பிடித்தால் அது உங்கள் காருக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும்.

தற்காலிக பார்க்கிங்

வழக்கமாக நீங்கள் ரோட்டில் காரை பார்க் செய்வீர்கள் என்றால் அங்கு மற்றவர்கள் பட்டாசு வெடிக்க வாய்ப்புள்ளது. அதனால் தற்காலிகமாக நீங்கள் உங்களுக்கு தெரிந்த ஒர்க்ஷாப், பொது பார்க்கிங் வசதி, அல்லது பாதுகாப்பான வீடுகளில் வாகனங்களை பார்க்கிங் செய்யலாம். இதனால் விபத்துக்களை தவிர்க்க முடியும்.

Diwali Car Safety Tips

புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள்

இது எதற்குமே வழியில்லை என்றால் நீங்கள் வழக்கமாக பார்க் செய்யும் இடத்தில் பார்க் செய்துவிட்டு வாகனத்தை முழுவதுமாக சுற்றி புகைப்படம் எடுத்தக்கொள்ளுங்கள். புகைப்படத்தைஜியோ டேக்கிங் மற்றும் நேரம் தேதி ஆகிய விஷயங்கள் இருக்கும் வகையில் புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள். அப்பொது தான் காரில் ஏதாவது சேதம் ஏற்பட்டால் அந்த சேத்ததை சரியான ஆதாரத்துடன் நிரூபிக்கவும், கணக்கிடவும் உதவும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தீபாவளி நேரங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடுவது அனைவருக்கும் மகிழ்ச்சியான விஷயம் இதனால் பாதிப்புகள் ஏற்படாமல் நம்மையும் நம் வாகனங்களையும் பாதுகாக்க வேண்டும். இதனால் முன்னெச்சரிக்கையாக வாகனங்களை பாதுகாத்தக்கொள்வது நல்லது. பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட எங்கள் வாழ்த்துக்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, October 17, 2025, 11:45 [IST]
English summary
Diwali car safety tips parking guidelines to avoid firecracker damage
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X