இது பார்க்கிங் பிரேக் தான்.. ஆனால் பார்க்கிங் பண்ணும் போது எல்லாம் யூஸ் பண்ணக் கூடாது... ஏன் தெரியுமா?

கார்களில் பார்க்கிங் பிரேக்கை எப்படி எப்பொழுது பயன்படுத்த வேண்டும்? இதனால் என்னவெல்லாம் நடக்கும்? எங்குப் பயன்படுத்தக்கூடாது எனக் காணலாம் வாருங்கள்.

இது பார்க்கிங் பிரேக் தான் . . . ஆனால் பார்க்கிங் பண்ணும் போது எல்லாம் யூஸ் பண்ணக் கூடாது . . . ஏன் தெரியுமா . . .

நம்மில் பலர் சொந்தமாக கார் வைத்திருப்போம், அல்லது கார் ஓட்டுவோம். நமக்கே கார்களில் உள்ள சில விஷயங்களை எந்த நேரத்தில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற சரியான புரிதல் இல்லாமல் இருக்கும். இப்படியாக நாம் தற்போது கார்களில் ஹேண்ட் பிரேக்கை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? எந்த இடத்தில் பயன்படுத்தினால் தவறாகப் போய் முடியும்? என்று தான் விளக்கமாகப் பார்க்க இருக்கிறோம், வாருங்கள் காணலாம்.

இது பார்க்கிங் பிரேக் தான் . . . ஆனால் பார்க்கிங் பண்ணும் போது எல்லாம் யூஸ் பண்ணக் கூடாது . . . ஏன் தெரியுமா . . .

ஒவ்வொரு காருக்கும் கண்டிப்பாக ஹேண்ட் பிரேக் இருக்கும். இதை பார்க்கிங் பிரேக் அல்லது எமர்ஜென்ஸி பிரேக் என்றும் அழைப்பார்கள். இது காருக்கு தேவையான மிக முக்கியமான ஒன்று, சாதாரண பிரேக் டிரைவர் சீட்டில் அமர்ந்திருக்கும் போது மட்டும் பயன்படுத்த முடிந்த ஒரு விஷயம் தான். டிரைவர் சீட்டில் இல்லாத போது கார் இருக்கும் இடத்திலிருந்து நகராமல் இருக்க இந்த பார்க்கிங் பிரேக்கை பயன்படுத்துவார்கள்.

இது பார்க்கிங் பிரேக் தான் . . . ஆனால் பார்க்கிங் பண்ணும் போது எல்லாம் யூஸ் பண்ணக் கூடாது . . . ஏன் தெரியுமா . . .

பலர் தங்கள் வீட்டில் காரை பார்க்கிங்கில் பார்க் செய்துவிட்டு காரை பூட்டி செல்லும் முன் காரை பார்க் பிரேக்கில் போட்டு விட்டுச் செல்வார்கள். இதனால் கார் நகராமல் இருக்கும் என அர்த்தம். ஆனால் இப்படியாக பார்க் பிரேக்கை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது அது மட்டுமல்ல அதிக செலவை இழுத்துவிடும் என்று கூறுகிறார்கள். இது ஏன் எப்படி என விளக்கமாகக் காணலாம்.

இது பார்க்கிங் பிரேக் தான் . . . ஆனால் பார்க்கிங் பண்ணும் போது எல்லாம் யூஸ் பண்ணக் கூடாது . . . ஏன் தெரியுமா . . .

பெரும்பாலான கார்களில் இந்த ஹேண்ட் பிரேக் என்பது காரின் பின்புற வீல்களுடன் கனெக்ட் செய்யப்பட்டிருக்கும். இப்படியாக கனெக்ட் செய்யப்பட்ட பிரேக்கை நாம் அப்ளே செய்வது மூலம் காரின் பின் வீல் நகரமால் லாக் ஆகி கொள்ளும், காரின் வழக்கமான பிரேக்கை பிடிக்க முடியாத சூழ்நிலைகளில் இதைப் பயன்படுத்தலாம். குறிப்பாக கார் சரிவாக நிற்கும் பாதையில் காரை நிறுத்த வேண்டும் என்றால் இந்த பிரேக்கை தான் பயன்படுத்துவார்கள். இதனால் சரிவான பாதையாக இருந்தாலும் கார் நகராமல் நிற்கும்.

இது பார்க்கிங் பிரேக் தான் . . . ஆனால் பார்க்கிங் பண்ணும் போது எல்லாம் யூஸ் பண்ணக் கூடாது . . . ஏன் தெரியுமா . . .

ஆனால் இந்த பிரேக்கை கார் நீண்ட நேரம் நிறுத்தும் இடத்தில் பயன்படுத்தக் கூடாது. உதாரணமாக நீங்கள் காரை வீட்டில் பார்க்கிங்கில் இரவு நிறுத்திவிட்டு மறுநாள் காலையில் தான் காரை எடுக்கப்போகிறீர்கள் என்றால் இந்த பிரேக்கை பயன்படுத்தக்கூடாது. இப்படித் தொடர்ந்து பயன்படுத்தினால் இந்த பிரேக் விரைவில் பாதிக்கப்பட்டு பழுதாகிவிடும். தற்காலிக பார்க்கிங், அல்லது தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் சிறிது நேரம் காரை நிறுத்த வேண்டும் என நினைத்தால் இந்த பிரேக்கை பயன்படுத்தலாம்.

இது பார்க்கிங் பிரேக் தான் . . . ஆனால் பார்க்கிங் பண்ணும் போது எல்லாம் யூஸ் பண்ணக் கூடாது . . . ஏன் தெரியுமா . . .

நீங்கள் இப்பொழுது காரை நீண்ட நேரம் இந்த ஹேண்ட் பிரேக்கில் நிறுத்தியுள்ளீர்கள் என வைத்துக்கொள்வோம். கார் முன்பக்கவோ, அல்லது பின்பக்கவோ நகர வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது. என்றால் இப்பொழுது உங்கள் வாகனம் பிரேக்கின் பிடித்தான் நிற்கிறது. அப்படி என்றால் காரின் முழு லோடும் அந்த பிரேக்கில் தான் இருக்கும். இப்படியாக பிரேக் நீண்ட நேரம் லோடை தாங்கினால் விரைவில் தேய்மானமாகி பழுதாகிவிடும். இதனால் பராமரிப்பு செலவு அதிகமாகும்.

இது பார்க்கிங் பிரேக் தான் . . . ஆனால் பார்க்கிங் பண்ணும் போது எல்லாம் யூஸ் பண்ணக் கூடாது . . . ஏன் தெரியுமா . . .

அதனால் நீண்ட நேரம் பார்க்கிங்கில் காரை நிறுத்தும் போது இந்த ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தாமல் இருப்பது தான் சிறந்தது. ஆனால் ஒரு வேளை கார் நகர்ந்தால் என்ன செய்வது என்ற கேள்வி பலருக்கு இருக்கும். இதற்கு ஒரு வழி இருக்கிறது. நீங்கள் காரை பார்க்கிங்கில் சரியாக நிறுத்தியதும். முதலில் காரின் ஹேண்ட் பிரேக்கை போட்டு காரை நிறுத்துங்கள்.

இது பார்க்கிங் பிரேக் தான் . . . ஆனால் பார்க்கிங் பண்ணும் போது எல்லாம் யூஸ் பண்ணக் கூடாது . . . ஏன் தெரியுமா . . .

இப்பொழுது உங்கள் காரின் லோடு முழுவதும் ஹேண்ட் பிரேக்கில் இருக்கும். பின்னர் கீழே இறங்கி, காரின் 4 வீல்களிலும் முன் மற்றும் பின் பகுதியில் ஒரு செங்கல் அல்லது மரக்கட்டையை வைத்து வீல் நகராதவாறு வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் காரின் ஹேண்ட் பிரேக்கை ரிலீஸ் செய்யுங்கள். இப்பொழுது லோடு முழுவதும் வீலில் தான் இருக்கும், வீல் நகராமல் நீங்கள் வைத்த மரக்கட்டை அல்லது செங்கல் பாதுகாத்துக்கொள்ளும். இதனால் கார் பாதுகாப்பாக இருக்கும்.

இது பார்க்கிங் பிரேக் தான் . . . ஆனால் பார்க்கிங் பண்ணும் போது எல்லாம் யூஸ் பண்ணக் கூடாது . . . ஏன் தெரியுமா . . .

அடுத்த முறை நீங்கள் காரை பார்க்கிங்கில் நிறுத்தும் போது இதைப் பின்பற்றுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் உங்கள் வாகனத்தின் பிரேக்கை நீண்ட காலம் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். இதனால் பராமரிப்பு செலவு குறையும். அடுத்த முறை நீங்களும் பின்பற்றிப் பாருங்களேன்.

More from DriveSpark

Article Published On: Friday, October 21, 2022, 16:23 [IST]
English summary
Do not use the hand brake while parking your car for long time
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+