PRNDS பத்தி தெரியாம ஆட்டோ கியர் காரை ஓட்டாதீங்க! இது அடிப்படையான விஷயம் தான் ஆனா பலருக்கும் தெரியாது!
இன்று மக்கள் மத்தியில் ஆட்டோமெட்டிக் கியர் கார்கள் மீது மோகம் அதிகமாக இருக்கிறது. புதிதாக கார் ஓட்டும் பலருக்கு கிளட்ச் பிடித்து கியரை மாற்றுவது எரிச்சலாக இருக்கும். நாளடைவில் அது பழகிவிடும். ஆனால் ஆட்டோமெட்டிக் கியர் அம்சங்கள் கொண்ட கார்கள் தற்போது மார்கெட்டிற்கு வந்துவிட்டன. இதனால் புதிய கார்களை வாங்கும் பலர் அந்த அம்சம் கொண்ட காரை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆட்டோ கியர் கார் என்றால் அந்த காரில் கிளட்ச் என்ற ஒரு கருவியே இருக்காது. கியரும் 1,2,3 என எண்ணில் இருக்காது. முன் செல்வதற்கு ஒரு கியர், பின்னே செல்வதற்கு ஒரு கியர் என இருக்கும். கார் எப்படிப் பயணிக்க வேண்டும் என்பதை மட்டும் தேர்வு செய்தால் போது இதனால் கார் ஓட்டும் போது ஸ்டிரிங்கிலிருந்து இடது கையை எடுக்க வேண்டியது அவசியமும் இல்லை.

புதிதாக கார் வாங்குபவர்கள், குறிப்பாகப் பெண்கள் இந்த ரக கியர்களை அதிகம் விரும்புகின்றனர். நீங்கள் இப்படியாக ஆட்டோமெட்டிக் கியர் கார்களை வாங்கப்போகிறீர்களா? அப்பொழுது நிச்சயம் PRNDS குறித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இது தெரியவில்லை என்றால் பின்னர் ஆட்டோகியர் அம்சம் கொண்ட காரை ஓட்டுவதே சிரமமாகிவிடும் இந்த PRNDS என்றால் என்ன? என்பதை தான் இந்த பதிவில் தெளிவுபடுத்தப்போகிறோம்.
இந்த PRNDS என்பதில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு வகையான கியர் போசிஷன்களை காட்டும். உதாரணமாக P என்பது பார்க்கிங் என்பதைக் குறிக்கும் காரை நீங்கள் ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு காரிலிருந்து வெளியே போக போகிறீர்கள் என்றால் இந்த பார்க்கிங் கியரில் காரை போட்டுவிட்டு நகர்ந்தால் கார் முன் பின் நகராமல் இருக்கும். அடுத்தாக R என்பது ரிவர்ஸ் என்பதைக் குறிக்கும் காரை நீங்கள் ரிவர்ஸில் எடுக்க வேண்டும் என்றால் கியர் போசிஷனை இதற்கு மாற்றினால் கார் பின் நோக்கி நகரும்.
அடுத்ததாக N என்பது நியூட்ரலை குறிக்கும் ஒரு கார் முன் பின் நகராமல் நியூட்டரல் கியரில் இருக்க வேண்டும் என்றால் இதைப் பயன்படுத்தலாம். குறிப்பாகக் காரை ஸ்டார்ட் செய்து வைத்து மற்ற பயணிகளை ஏறும் போதும் இறங்கும் போது நீங்கள் தெரியாமல் ஆக்ஸிலேட்டரை அழுத்தினால் கூட கார் முன்னே நகராமல் இருக்க இதைப் பயன்படுத்தலாம். D என்பது டிரைவ் என்பதைக் குறைக்கும் நீங்கள் காரை ஓட்டிச் செல்ல வேண்டும் என்றால் கியர் போசிஷன் டிரைவ் மோடில் இருக்க வேண்டும்.
S என்பது ஸ்போர்ட்ஸ் மோடு, இது எல்லா கார்களிலும் இருக்காது குறிப்பிட்ட ரக கார்களில் குறிப்பாக விலை உயர்ந்த கார்களில் இருக்கும். இந்த மோடில் பயணித்தால் கார் தனது அதிகபட்ச திறனை வெளிப்படுத்து, தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது இந்த மோடில் பயணிக்கலாம். இது தான் பொதுவாக எல்லா ஆட்டோகியர் கார்களிலும் இருக்கும் கியர் அம்சங்கள். சில கார்களில் இந்த எழுத்திற்குப் பதிலாகக் குறியீடுகளைப் பயன்படுத்துவார்கள்.
கியர் ஸ்டிக்கை பொருத்தவரை மேனுவல் கியர் ஸ்டிக் போன் வடிவிலும், ரோட்டேட்டரி நாப் போன்ற வடிவிலும் கியர்கள் வழங்கப்படுகின்றன. ஸ்டிக் வடிவிலிருந்தால் முன், பின் நகர்த்துவது மூலம் கியர் போசிஷனை மாற்ற முடியும். ரோட்டேட்டரி நாப் என்றால் ஆடியோ சிஸ்டத்தில் சத்தத்தை அதிகரிக்கக் குறைக்கச் செய்வோமே அது போல கியரை மாற்றிக்கொள்ளலாம்.
ஆட்டோகியரிலேயே ஏகப்பட்ட வகை இருக்கிறது. இதில் ஏஎம்டி என்பது மக்கள் அதிகம் பயன்படுத்தும் வகையாக இருக்கிறது. இதில் P என்ற பார்க்கிங் மோட் கிடையாது. அதற்குப் பதிலாக மேனுல் காரில் உள்ள பார்க்கிங் பிரேக் இந்த ரக கியர் கொண்ட கார்களில் வழங்கப்பட்டிருக்கும் அதைப் பயன்படுத்தி காரை பார்க் செய்யலாம். இதே நேரம் என்னதான் இது ஆட்டோ கியராக இருந்தாலும் தேவைப்பட்டால் டிரைவர் இதை மேனுவல் கியராக மாற்ற முடியும். ஆனால் அப்படி மாற்றினாலும் கியர் பேட்டன் மேனுவல் கியர் காரில் இருப்பது போல இருக்காது. முன்னே பின்ன நகர்த்துவது மூலம் கியரை அதிகரிக்கவும், குறைக்கவும் செய்ய முடியும்.
சில கார்களில் ஸ்டிரிங்கிற்கு அருகிலேயே பெடல் ஸிப்டர்கள் வழங்கப்படுகிறது. குறிப்பாக சிவிடி கியர் பாக்ஸ் கொண்ட கார்களில் இது வழங்கப்படுகிறது. இந்த பெடல் ஸிஃப்டர்களை கொண்டு ஆட்டோ கியரில் திடீரென கியரை குறைக்கவோ கூட்டவோ மேனுவலாக செய்ய வேண்டுமானால் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு கார் தயாரிப்பு நிறுவனமும் ஒவ்வொரு வகையான கியர் பேட்டன் மற்றும் கியர் நாப்களை வழங்கியுள்ளது.
இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வழங்குவதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. முன்னர் மேனுவல் கியராக இருந்த போது கியர் ஸ்டிக் நேரடியாக மெக்கானிக்கல் முறையில் கியர் உடன் இணைக்கப்பட்டிருக்கும். இதனால் ஒரே மாதிரியான பேட்டனை பின்பற்ற வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால் தற்போது உள்ள ஆட்டோ கியரில், நாபை சுழற்றுவது, அல்லது பட்டனை அழுத்துவது, ஸ்டிக் போசிஷனை மாற்றுவது என நீங்கள் எதைச் செய்தாலும் அது எலெக்ட்ரானிக் சிக்கலான கியர் கன்சோலுக்கு சென்று அது எலெக்ட்ரானிக் முறையில் மாற்றப்படுகிறது.
இதனால் காரை வடிவமைப்பவர்களுக்கு சில வித்தியாசங்களைக் காட்ட அதிகமான வாய்ப்பு கிடைக்கிறது. அதனால் தான் ஒவ்வொரு கார் நிறுவனமும் ஒவ்வொரு முறையைப் பின்பற்றுகின்றனர். இந்த தகவல் புதியதாக கார் ஓட்டுபவர்கள் மற்றும் ஆட்டோகியர் கார்கள் குறித்து பெரியதாகத் தெரியாதவர்களுக்குத் தான். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








