இன்ஜின் ஃபெயிலியர் ஆனால் அதுக்கு இன்சூரன்ஸ் கவர் ஆகுமா? உண்மை என்ன?
ஒரு கார் வாங்கினால் அதற்கு இன்சூரன்ஸ் கட்டாயம் எடுக்க வேண்டும். இப்படியாக இன்சூரன்ஸ் எடுக்கும்போது கார் விபத்தில் சிக்கினாலோ திருடு போனாலும் இயற்கை சீற்றங்களால் சேதம் ஆனாலோ அதற்கான நஷ்ட ஈடு நமக்கு கிடைக்கும். ஆனால் கார் இன்ஜின் பெயிலியர் ஆனால் கார் இன்சூரன்ஸ் பெற முடியுமா? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் வாகன ஓட்டிகளுக்கு இன்சூரன்ஸ் கட்டாயம். வாகனம் சாலையில் செல்லும்போது விபத்தில் சிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதால் விபத்தில் சிக்கும் போது ஏற்படும் சேதாரத்திற்கு பொருளாதார நஷ்ட ஈடை ஈடு செய்யவே இந்த வாகன இன்சூரன்ஸ் பயன்படுத்தப்படுகிறது. பலர் வாகன இன்சூரன்ஸ் கிளைமை பெற்றிருப்பார்கள்.

உங்கள் வாகனம் விபத்தில் சிக்கி விட்டால் அதனால் ஏற்படும் மற்ற நபர்களுக்கான சேதாரம் உங்கள் வாகனத்திற்கான சேதாரம் உங்களுக்கான சேதாரம் எல்லாமே இந்த இன்சூரன்ஸ் மூலம் கிளைம் செய்ய முடியும். வாகனம் விபத்தில் சிக்குவது, திருட்டுப் போவது மற்றும் இயற்கை சீற்றங்களால் ஆகும் சேதாரம் ஆகியவற்றிற்கு நஷ்ட ஈடு பெற முடியும்.
ஆனால் உங்கள் வாகனத்தின் இன்ஜின் பெயிலியர் ஆகிவிட்டால் அதற்கான நஷ்ட ஈடுகளை நீங்கள் பெற முடியுமா? ஒரு வாகனத்தின் இன்ஜின் ஃபெயிலியராவது என்பது இயற்கை சீற்றங்களால் இல்லாமல், விபத்தால் இல்லாமல் கூட ஃபெயிலியர் ஆக கூட வாய்ப்பு உள்ளது. இப்படியான சூழ்நிலைகளில் இன்சூரன்ஸ் பெற முடியுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.

இதற்கான விடை ஆம் பெற முடியும் என்பது தான். இதை எப்படி என்பதை விரிவாக காணலாம். வாகன இன்சூரன்ஸ் இருக்கு இன்ஜின் ஃபெயிலியருக்கான கிளைம் என தனியாக எந்த பிரிவும் கிடையாது. ஆனால் நீங்கள் பெற்றிருக்கும் இன்சூரன்ஸில் சில ஆப்ஷன்கள் இருக்கிறது. அந்த ஆப்ஷன்கள் இருந்தால் நீங்கள் இந்த இன்ஜின் ஃபெயிலியருக்கான இன்சூரன்ஸ் கிளைம் பெற்றுக் கொள்ளலாம்.
நீங்கள் உங்கள் வாகனத்திற்கான இன்சூரன்ஸை எடுக்கும்போது அது மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் பிரேக் டவுன் காரணமாக பழுதாகி இருந்தால் அந்த இன்சூரன்ஸ் கவர் ஆகும் என குறிப்பிடப்பட்டு நீங்கள் இன்சூரன்ஸ் பெற்று இருந்தால் அந்த குறிப்பிட்டிற்குள்ளேயே இன்ஜின் ஃபெயிலியர் விஷயமும் அடங்கிவிடும்.
பெரும்பாலான இன்சூரன்ஸ் திட்டங்களின்படி இந்த மெக்கானிக்கல் மற்றும் எலெக்ட்ரிக்கல் பிரேக் டவுனிற்கான இன்சூரன்ஸ் கிளைம் இருக்காது. அப்படியாக குறிப்பிடப்படாத இன்சூரன்ஸ் நீங்கள் பெற்று இருந்தால் இந்த இன்ஜின் ஃபெயிலியருக்கான கிளைமை நீங்கள் பெற முடியாது. ஒரு பைசா கூட கிளைமில் கிடைக்காது.
பல நிறுவனங்கள் இதை ஒரு ஆதன் கவராக தான் வழங்கி வருகிறது. இதனால் நீங்கள் இன்சூரன்ஸ் பாலிசியை எடுக்கும் முன்பு அதை நன்கு படித்து தெரிந்து கொண்டபின். அந்த இன்சூரன்ஸ் எடுங்கள். பலர் வாகன இன்சூரன்ஸ் வாங்கும்போது அதில் எது எல்லாம் கவர் ஆகும் இதெல்லாம் தவறாகாது என்பதை தெரிந்து கொள்வதே இல்லை.
இப்படியாக சரியாக தேர்வு செய்து நீங்கள் இன்சூரன்ஸ் வாங்கினால் வருங்காலத்தில் உங்கள் வாகனத்தில் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டாலும் நீங்கள் அதற்காக கூடிய செலவை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் கிளைம் செய்து பெற்றுக் கொள்ள முடியும். அவர்கள் நேரடியாக வந்து சோதனை செய்துவிட்டு உங்களுக்கான கிளைமை பெற்று செய்வார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு வாகனத்திற்கான இன்சூரன்ஸ் வாங்கும் போது அதை நன்றாக படித்துப் பார்த்து எது எல்லாம் கவராகும், எது எல்லாம் கவராகாது என தெரிந்து கொண்டு வாங்க வேண்டும். வாகன இன்சூரன்ஸ் வாங்கும் பலர் இதை செய்வதேயில்லை வாகனம் பழுதாகும்போதுதான் இதைப் பற்றி எல்லாம் யோசிக்கிறார்கள். அதனால் நீங்கள் வாகன இன்சூரன்ஸ் இனி புதுப்பிக்கும் போது இதையெல்லாம் படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்


Click it and Unblock the Notifications








