ஒரு பைசா செலவில்லாம வீட்டுலேயே டூத் பேஸ்ட் வச்சு ஹெட்லைட்டை கிளீன் பண்ணுறது எப்படி தெரியுமா? ரொம்ப ஈஸி!

கார் பைக்குகளை பலர் பல் தேய்க்கும் பேஸ்டை பயன்படுத்திச் சுத்தப்படுத்தி வருகின்றனர். இது உண்மையில் சுத்தப்படுத்துமா? இப்படிச் சுத்தப்படுத்துவது சரியான வழிமுறையா? இது குறித்து விரிவாகக் காணலாம் வாருங்கள்.

கார்/ பைக்குகளில் ஹெட்லைட் என்பது மிகவும் முக்கியமான ஒன்று, இரவு நேரங்கள் அல்லது வெளிச்சம் குறைவான நேரங்களில் எதிரில் உள்ள ரோட்டையும் மற்ற வாகனங்களையும் பார்க்கவும் உதவும் முக்கியமான கருவி, இந்த ஹெட்லைட்நாளாக நாளாக மங்கிப்போவது சாதாரண விஷயம் தான் இப்படியாக மங்கிப் போன ஹெட்லைட்டை சிலர் பல் தேய்க்கும் பேஸ்டை வைத்துச் சுத்தப்படுத்துகின்றனர்.

Toothpaste To Clean Headlights

உண்மையில் இப்படிச் செய்தால் ஹெட்லைட் சுத்தமாகுமா? இது சரியான வழிமுறையா எனப் பலருக்கும் தெரியாது. ஆனால் இப்படியாக வாகனத்தின் ஹெட்லைட்டை பல் தேய்க்கும் பேஸ்டை வைத்துச் சுத்தப்படுத்தும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஹெட்லைட் எப்படி மங்கிப் போகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் கார், பைக்கை பொது வெளியில் பயன்படுத்தும் போது காற்றில் உள்ள தூசு கெமிக்கல் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஹெட்லைட்டின் மீது படிகிறது. இப்படியாக நீண்ட நாட்களாகத் தொடர்ந்து தூசு படிவது ஹெட்லைட்டை மங்கி போக வைக்கிறது. இது மட்டும் காரணம் அல்லது சூரிய ஓளி நேரடியாக ஹெட்லைட் முன்னே இருக்கும் பிளாஸ்டிக் கவர் மீது படுவதால் ஆக்ஸிடேஷன் ஏற்பட்டு மஞ்சள் நிறமாக மாறி ஹெட்லைட்டை மங்கி போக வைக்கும்.

Toothpaste To Clean Headlights

இது போக அதில் உள்ள ஸ்கிராட்ச்கள், கீரல்கள், எல்லாம் ஹெட்லைட்டின் பவரை குறைத்து விட வாய்ப்புகள் உள்ளது. சரி இப்பொழுது பல் தேய்க்கும் பேஸ்டை பயன்படுத்துவது குறித்துக் காணலாம். பல்நோய்க்கும் பேஸ்டில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு என்ற கெமிக்கல் இருக்கிறது. இது தான் நமது பல்லைச் சுத்தப்படுத்துகிறது. இது தான் ஹெட்லைட்டையும் சுத்தப்படுத்த உதவும்,

ஆனால் நாம் மேலே சொன்ன காரணங்களில் தூசு கெமிக்கல் போன்ற விஷயங்களில் ஹெட்லைட் மங்கிப்போய் இருந்தால் அந்த அழுக்கைப் போக்கி ஹெட்லைட்டை கிளியர் ஆக்கிவிடும். ஆனால் மற்றபடி ஸ்கிராட்ச்,ஆக்ஸிடேஷன் போன்ற விஷயங்களால் மங்கிப்போயிருந்தால் அதைப் பல் தேய்க்கும் பேஸ்ட்களால் சுத்தப்படுத்த முடியாது. டூத் பேஸ்ட் மட்டுமல்ல ஸ்கிரீன் கிளினர் உள்ளிட்ட பல பொருட்கள் இருக்கிறது. அதை வைத்தும் சுத்தப்படுத்த முடியும்.

Toothpaste To Clean Headlights

எப்படிச் சுத்தப்படுத்துவது?: பலருக்கு இப்படி பல் தேய்க்கும் பேஸ்டை வைத்து எப்படிச் சுத்தப்படுத்துவது எனத் தெரியவில்லை. முதலில் பேஸ்டை பயன்படுத்தும் முன் நீங்கள் ஹேட்லைட் மேலே ஒரு முறை தண்ணீர் ஊற்றி தூசுகள் இல்லாமல் வைக்க வேண்டும். பின்னர் ஹெட்லைட் கண்ணாடி காய்ந்ததும் பேஸ்டை அப்ளை செய்ய வேண்டும்.

அதற்கு முன்னர் ஹெட்லைட் அருகே காரின் பெயரின் அடிக்கப்பட்ட பாகம் இருந்தால் அதைக் கண்ணாடியை வைத்து மூடிக்கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட் அதில் பட்டால் பெயிண்ட் பாதிப்படைய வாய்ப்புகள் உள்ளது. அதன் பின்னர் ஹெட்லைட் கண்ணாடியில் பல்தேய்க்கும் பேஸ்டை எடுத்து இது கண்ணாடியின் முழுவதும் பரவும்படி தேய்க்க வேண்டும்.

அதன்பின்னர் ஒரு சாஃப்டான துணியை எடுத்து கண்ணாடியை முழுவதும் அழுத்தமாகத் துடைக்க வேண்டும்.அப்பொழுதே உங்கள் வாகனத்தின் ஹெட்லைட் சுத்தமாகிவிடும். அதன்பின்னர் அதைத் தண்ணீர் ஊற்றிச் சுத்தப்படுத்தலாம். இறுதியாக மார்கெட்டில் யூவி கோட்டர் என்ற திரவம் இருக்கிறது. அதைப் பூசினால் வெயில் காரணமாக ஹெட்லைட் கண்ணாடி ஆக்ஸிடைஷன் ஆவதை தடுக்க முடியும்!

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வீட்டிலேயே வாகனத்தை சுத்தம் செய்யும் பல வழி முறைகள் இருக்கிறது. சின்ன சின்ன பிரச்சனைகளுக்காக மெக்கானிக்கை தேடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்களே வீட்டில் உள்ள எந்த பொருளை எப்படி பயன்படுத்தலாம் என யோசித்து பயன்படுத்தினால் பணம் மிச்சம் தான்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 3, 2023, 16:00 [IST]
English summary
Does toothpaste used to clean headlights know facts
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X