அவசியமின்றி ஹாரன் அடிப்பதை தவிர்க்கலாமே..!!

சிலர் இந்த சப்தம் போதாதென்று எக்ஸ்ட்ரா ஹாரனை வாங்கி வைத்து தங்களது இச்சையை தீர்த்துக் கொள்கின்றனர். அவசியமின்றி ஹாரன் அடிப்பதால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. பாதசாரிகள் சாலையை கடப்பது தெரிந்தும் அவர்களை அச்சுறுத்துவது போன்று ஹாரன் அடித்துக் கொண்டே சென்று அவர்களையும் பயமுறுத்தி அவர்களும் கீழே விழுந்து, தானும் கீழே விழுந்த சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது.
வாகனத்தின் எச்சரிக்கை கருவியான ஹாரனை தேவையின்றி பயன்படுத்தும்போது விபத்துக்களுக்கும் வழி வகுத்துவிடும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் கார் உள்ளிட்ட வாகனங்கள் நெருக்கமாக செல்லும்போது ஹாரன் அடித்து ஏதோ எனக்கு மட்டும்தான் ரோடு என்பது போல் சிலர் செல்வதால் பல விபத்துகள் ஏற்படுகின்றன.
சில சமயம் இதுபோன்று ஹாரன் அடித்துக்கொண்டே கட் அடிக்கும்போது பின்னால் வரும் வாகனங்கள் சடன் பிரேக் அடிக்கையில் ஆங்காங்க உரசல்கள், வீரல்கள் விழுந்து பல லட்ச ரூபாய் மதிப்புடைய வாகனத்தை மதிப்பிழக்க செய்யும்.
இதெல்லாம் அடுத்தவர்க்குதானே என்ற நினைப்பில் நாம் போய்க்கொண்டிருந்தால் நமக்கும் நஷ்டம் உண்டு. அவசியமில்லாமல் ஹாரன் அடிப்பதால் நம் கைகளுக்கு வலிக்கிறதோ இல்லையோ, பேட்டரிக்கு நிச்சயம் நெஞ்சு வலிக்கும்.
ஒவ்வொரு முறையும் ஹாரன் அடிக்கும்போது பேட்டரிக்கு கூடுதல் சுமை ஏற்பட்டு சீக்கிரம் ஆயுளை இழக்கும். ஹாரனும் சீக்கிரமே டமாரம் ஆகிவிடும். எனவே, தேவையில்லாமல் ஹாரன் அடிப்பதை தவிருங்கள்.
நகர்ப்புறங்களில் ஒலி மாசுபடுவதற்கு வாகனங்களின் ஹாரன் ஒலியும் முக்கிய காரணமாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். ஆகவே, ஹாரனை கதற கதற அடிப்பதை கைவிடுங்கள். தேவையானபோது அடிக்கவும் மறக்காதீர்கள்.


Click it and Unblock the Notifications








