கார் ஓட்டி செல்லும் போது கையில் செல்போனை வைத்திருந்தால் ரூ10,000 அபராதமா? ரூல்ஸ் இது தான்!

பைக்கில் செல்லும் போது செல்போன் பேசிக்கொண்டே பயணிக்கக் கூடாது என்பது நாம் அனைவருக்கும் தெரியும். இது மோட்டார் வாகன சட்டப்படி குற்றமான ஒரு விஷயமாகும். ஆனால் காரில் செல்லும் போதும் ஸ்டியரிங்கை பிடிப்பதற்கு பதிலாக கையில் செல்போனை வைத்திருக்கக் கூடாது என்ற விதிமுறையும் இருக்கிறது. இது பல்வேறு வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.

கடந்த 2019ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டது. அதன்படி வாகனங்களில் செல்லும் நபர்கள் வாகனங்கள் ஓட்டுவதில் இருந்து திசை திருப்பும் வகையில் கையில் செல்போனை வைத்து பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை இருக்கிறது. பல வாகன ஓட்டிகளுக்கு இந்த விதிமுறை குறித்த புரிதல் இல்லாமல் உள்ளது.

driving with mobile phone

இந்த விதிமுறை அமலுக்கு வந்து 5ஆண்டுகள் ஆகியும் இதுகுறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை. இதனால் பல இடங்களில் வாகன ஓட்டிகள் கையில் செல்போனை வைத்து பயணம் செய்யும்போது போக்குவரத்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். இப்படியாக விதிமுறையை மீறி கையில் செல்போனுடன் வாகனம் ஓட்டினால் ரூபாய்5000 முதல் ரூ10ஆயிரம் வரை அபராதமும் 90 நாட்கள் வரை ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்டும் செய்யப்படும்.

இப்படியாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் நொய்டா பகுதியில் சந்தீப் ஷர்மா என்பவர் டெல்லியிலிருந்து காஸியாபாத் நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுதே சாலையில் டெல்லி டிராபிக் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது சந்தீப் ஷர்மா வந்து கொண்டிருந்த காரை ஓரம் கட்டிய போலீசார் அவரிடம் ஓட்டுநர் உரிமத்தை கேட்டுள்ளார்கள்.

driving with mobile phone

சந்தீப் ஷர்மா ஏன் ஓட்டுனர் உரிமம் கேட்கிறீர்கள் என்று கேட்டபோது சந்தீப் ஷர்மா விதிமுறைகளை மீறி கையில் செல்போனை வைத்துக் கொண்டே காரை ஓட்டி வந்ததற்காக அபராதம் விதிப்பதாகவும், அவருக்கு ரூபாய் 5000 அபராதமும் 90 நாட்கள் வரை அவரது ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட உள்ளது என்பதையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர் காரில் வரும் போது தனது இரண்டு கையையும் வைக்காமல் செல்போனை நோண்டிக்கொண்டு வந்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவத்தை கேள்விப்படும்போது நமக்கு பல்வேறு விதமான சந்தேகங்கள் எழும். பலருக்கு குழப்பங்களும் வித விதமாக ஏற்படும்.

கார் ஓட்டும் போது கையில் செல்போன் வைத்திருப்பது சட்டப்படி குற்றமா அப்படி குற்றம் என்றால் கையில் உள்ள செல்போனில் தானே நாம் எப்படி பயணிக்க வேண்டும் என்ற மேப்பை நேவிகேஷன் செய்து பார்க்க முடியும். அதை எப்படி செய்வது யாராவது போன் செய்தால் எப்படி போனை எடுத்து கால் கட் செய்வது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் எழும்.

இதுகுறித்து சட்டம் என்ன சொல்கிறது என்றால் நீங்கள் வாகனம் ஓட்டும்போது உங்கள் இரண்டு கைகளும் காரின் ஸ்டேரிங்கிலேயே இருக்க வேண்டும் என சொல்கிறது. அப்படி என்றால் நீங்கள் கையில் செல்போன் வைத்திருப்பது மட்டும் குற்றம் கிடையாது. நீங்கள் கையில் உணவு பொருட்கள், பேப்பர், பேனா, போன்ற பொருட்களை வைத்திருப்பதும் குற்றமான விஷயமாகவே பார்க்கப்படும்.

இப்படியாக நீங்கள் ஒரு கையில் ஏதாவது வைத்துக் கொண்டு பயணம் செய்தால் அதை டிராபிக் போலீசார் கண்டுபிடிக்கும் போது உங்களுக்கு அபராதம் மற்றும் லைசென்ஸ் சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆனால் இதுவரை இந்தியாவில் ப்ளூடூத் ஹெட்செட் மூலம் போன் பேசுவது உள்ளிட்ட சம்பவங்களுக்கு சரியான சட்ட விதிமுறைகள் எதுவும் இல்லை.

இதனால் நீங்கள் பைக் ஓட்டும்போதும் சரி கார் ஓட்டும்போதும் சரி நிச்சயம் செல்போன் பேசிக்கொண்டு பயணிப்பது என்பது சட்டப்படி குற்றமான விஷயம்தான். கார் ஓட்டும்போது கண்டிப்பாக இரண்டு கைகளும் ஸ்டியரிங்கில் இருக்க வேண்டும். உங்கள் கவனம் முழுவதும் டிரைவிங்கில் இருக்க வேண்டும். அது போக ஒரு கையில் சாப்பிட்டுக் கொண்டே வாகனம் ஓட்டுவது தண்ணீர் குடித்துக் கொண்டே வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட செயல்களும் சட்டப்படி குற்றம் தான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனம் ஓட்டும் போது வாகன ஓட்டிகள் நிச்சயம் டிரைவிங்கில் கவனமாக இருக்க வேண்டும். டிரைவிங்கை தவிர மற்ற செயல்களில் ஈடுபடும் போது உங்கள் வாகனம் விபத்திற்கு சிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் உங்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதால் இந்த விதிமுறைகளை மோட்டார் வாகன சட்டத்தில் வகுத்துள்ளார்கள். நிச்சயம் இதை பின்பற்றினால் விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 14, 2024, 15:37 [IST]
English summary
Driving with mobile phone legal illegal fines amounts dl suspension new rules
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+