காரில் நாயை அழைத்துச் செல்லும்போது கவனம் தேவை
காரில் செல்லப் பிராணியை அழைத்துச் செல்லும் வழக்கம் வேகமாக பரவி வருகிறது. குறைந்த தூர பயணங்களின்போது மட்டும் முன்பு நாயை காரில் உடன் கூட்டிச் சென்று காலம் போய், தற்போது நீண்ட தூர பயணங்களுக்கும் நாய் உள்ளிட்ட செல்லப் பிராணிகளை கையுடன் அழைத்துச் செல்லும் வழக்கம் அதிகரித்து வருகிறது.
மேலும், சாகசப் பயணங்கள் மற்றும் புதிய இடங்களுக்கு செல்லும்போது நாயையையும் உடன் அழைத்துச் செல்வது கூடுதல் பாதுகாப்பாக பலர் கருதுகின்றனர். தவிரவும், வீட்டுக்குள்ளே அடைந்து கிடக்காமல், காரில் செல்லும்போது உங்களது செல்லம் அதிக சுதந்திரத்தை உணரும் வாய்ப்பும் கிடைக்கிறது. எனவே, நாயை காரில் கூட்டிச் செல்லும்போது கவனிக்க வேண்டிய சில வழிமுறைகளை ஸ்லைடரில் காணலாம்.

பழக்கப்படுத்துங்கள்
முதலில் நாய் உள்ளிட்ட செல்லப் பிராணிகளை காரில் அழைத்துச் செல்லும்போது வீட்டுக்கு அருகில் சிறிது தூரம் மட்டுமே கொண்டு சென்று பழக்கப்படுத்துங்கள். எடுத்த எடுப்பிலேயே நீண்ட தூரம் அழைத்துச் செல்வதை தவிர்ப்பது நலம்.

ஜன்னலுக்கு வெளியே...
காரில் செல்லும்போது ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி காற்று வாங்கிக் கொண்டே செல்வது அப்படி ஒரு சுகமல்லவா... உங்களது செல்லமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், அருகில் வேகமாக கடந்து செல்லும் வாகனங்களால் உங்களது செல்லப் பிராணிக்கு அதிக ஆபத்து இருக்கிறது. ஜன்னலை பாதிக்கும் மேல் ஏற்றி விடுவது நல்லது.

சைல்டு லாக்
நாய்களின் கால் தப்பி தவறி கதவு பிடியில் பட்டு திறந்துவிடும் ஆபத்து உண்டு. எனவே, சைல்டு லாக் போட்டுவிடுவது சாலச் சிறந்தது.

ரொம்ப முக்கியம்
சிறுநீர் கழிக்க விட்டு காருக்குள் ஏற்றுங்கள். இல்லாவிட்டால், உங்களது காஸ்ட்லி லெதர் இருக்கை கழிப்பறை ஆகிவிடும்.

ஏசியை தவிருங்கள்
காரில் நாயை உடன் அழைத்துச் செல்லும்போது ஏசியை போடாமல் தவிர்ப்பது நல்லது. சில ரகத்தை சேர்ந்த நாய்கள் ஏசி குளிர்ச்சியை தாங்க இயலாதவை.

உணவுப் பொருட்கள்
தின்பண்டங்கள் மற்றும் உணவுப்பொருட்களை மறைத்து பத்திரமாக வைப்பது நல்லது. நாயின் கண்ணில் படும் படி வைக்க வேண்டாம்.

வெளிச்சம் அவசியம்
இரவில் அழைத்துச் செல்லும்போது சில நாய்கள் மிரளும். எனவே, காருக்குள் லைட் வெளிச்சம் இருப்பதும் நல்லது. பெல்ட்டில் நாயை கட்டி வைத்திருப்பதும் அவசியம்.

டிரைவிங்கில் கவனம்
சிலர் காரை ஓட்டிக் கொண்டே பின்புறம் திரும்பி நாயை கவனித்துக் கொண்டே வருவர். இதுவும் விபத்துக்கு வழிகோலிவிடும். எனவே, செல்லப் பிராணியை காரில் அழைத்துச் செல்வது என்பது சாதாரண விஷயமாக இருந்தாலும், அதிலும் அதிக கவனம் தேவை என்பதை மறுந்துவிடாதீர்.


Click it and Unblock the Notifications








