இதுக்கு பெட்ரோல் ஸ்கூட்டரையே வாங்கிட்டு போய்டலாம்! எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தானேனு சாதாரணமா எடுத்துக்காதீங்க!

எலக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, எலக்ட்ரிக் 2-வீலர்களுக்கும், அதிலிலும் குறிப்பாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் (Electric Scooters) சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. ஏனெனில், எலக்ட்ரிக் வாகனங்களில் குறைவான தொகையை முதலீடு செய்யவே மக்கள் தற்போதைக்கு விரும்புகின்றனர்.

இந்த வகையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதற்கேற்ப 2-வீலர் நிறுவனங்களும் புதியது புதியதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம் சமீபத்தில் புதியதாக 'ஆர்பிட்டர்' (Orbiter) என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ததை கூட கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

electric scooter maintenance

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பயன்படுத்துவது எளியது என்றாலும், அவற்றை தொடர்ந்து பராமரிப்பதன் மூலம், அவை அடிக்கடி பழுதாகுவதை தடுக்க முடியும். பாரமரிப்பானது வழக்கமான பெட்ரோல் ஸ்கூட்டர்களை போன்று இல்லாமல், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும். அவை என்னென்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

சுத்தம் செய்தல்: மற்ற வாகனங்களை போன்று எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் அவ்வப்போது துடைத்து சுத்தம் செய்வது முக்கியமாகும். இன்னும் சொல்லப்போனால், பெட்ரோல் ஸ்கூட்டர்களை காட்டிலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தான் அதிகமாக சுத்தம் செய்ய வேண்டும். ஸ்கூட்டரின் உடல் பகுதி மற்றும் சக்கரங்களை உலர்ந்த துணி வைத்து சுத்தம் செய்யலாம்.

electric scooter maintenance

நேரடியாக நீர் வேண்டாம்: எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது நேரடியாக நீர் பாய்ச்சுவதை முடிந்தவரையில் தவிர்க்கவும். அதற்கு பதிலாக ஸ்பாஞ்ச்சை நீரில் நினைத்து ஸ்கூட்டரை துடைக்கலாம். அதிலும் குறிப்பாக, ஸ்கூட்டரின் சார்ஜிங் பாயிண்ட்டை சுத்தம் செய்யும் போது இன்னும் கூடுதல் கவனம் வேண்டும். ஏனெனில், சார்ஜிங் பாயிண்ட்களில் நீர் தொடர்ந்து படும்போது, அது துருப்பிடித்தலுக்கு உள்ளாக நேரிடலாம்.

ஆதலால், ஈரமான துணியை வைத்து ஸ்கூட்டரை சுத்தம் செய்த பின், உலர்வான துணியை வைத்து துடைக்கும்போது சார்ஜிங் பாயிண்ட்டில் எந்தவொரு நீர் துளியும் இல்லாத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், ஸ்கூட்டரை சார்ஜ் செய்வதற்கு முன்னர் சார்ஜிங் பாயிண்ட்டில் ஈரப்பதம் உள்ளதா என்பதை உறுதி செய்துக் கொள்வது நல்லது. ஏனெனில், மின்சாரம் அவ்வழியாக செல்ல உள்ளதால், ஈரப்பதம் இருந்தால் மின்கசிவு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

பேட்டரி பராமரிப்பு: சார்ஜிங் பாயிண்ட்டை பாதுகாப்பது போல், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பேட்டரியை பாதுகாப்பதும் முக்கியம் ஆகும். பேட்டரியில் சார்ஜை எப்போதும் 20%- 80% உள்ளாகவே வைத்திருக்க முயற்சியுங்கள். மொபைல் போன் (Mobile Phone) சார்ஜர் போன்று வேறு பிராண்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் சார்ஜரை பயன்படுத்த வேண்டாம். பயணம் செய்துவிட்டு வந்த பின் உடனடியாக அதே சூட்டில் பேட்டரியை சார்ஜ் செய்ய முற்படாமல், பேட்டரியின் வெப்பம் குறையும் வரையில் கொஞ்சம் நேரம் காத்திருப்பது நல்லது.

இதர பராமரிப்புகள்: எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் மேற்கூறப்பட்ட வழிமுறைகளை பின்பற்றுவதுடன், பெட்ரோல் ஸ்கூட்டர்களில் வழக்கமாக பின்பற்றும் வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். அதாவது, டயர்களில் காற்றழுத்தத்தை கண்காணிப்பது, பிரேக்குகள் முறையாக செயல்படுகின்றனவா என்பதை அவ்வப்போது சரிப்பார்ப்பது, எலக்ட்ரானிக் பாகங்களுக்கு இடையே ஏதேனும் பழுதுகள் ஏற்பட்டுள்ளதா என சரிபார்ப்பது உள்ளிட்ட வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டியது அவசியம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாகவே, பெட்ரோல்/ டீசல் வாகனங்களை காட்டிலும் எலக்ட்ரிக் வாகனங்களை பராமரிப்பது கொஞ்சம் எளிமையான காரியம் ஆகும். அதுவும், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பராமரிப்பது இன்னும் எளியது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் போன்ற எலக்ட்ரிக் வாகனங்களில் பிரச்சனை என்னவென்றால், இவற்றில் அவ்வளவு எளிதாக பழுதுகள் ஏற்படாது; ஆனால் பழுது ஏற்பட்டால் பெரிய செலவாக இழுத்துவிட்டு விடும். ஆதலால், எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருப்பினும் அவ்வப்போது சுத்தம் செய்து முறையாக பராமரிப்பது அவசியமாகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 28, 2025, 23:59 [IST]
English summary
Electric sccoter maintenance what you can do at home
மேலும்... #electric scooter #auto tips
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+